Read in : English
தாமரை விதைகளில் தயாரிக்கப்படும் மக்கானா கடந்த ஐந்து அல்லது அதற்கும் மேலான ஆண்டுகளாக பேர்பெற்ற ஒரு தின்பண்டமாக விளங்குகிறது. துரித உணவு என்ற வகையில் மக்கானா வேகமாக விலைபோகும் நுகர்ப்பொருள் என்ற பேரை எடுத்திருக்கிறது. காரணம் அதில் இருக்கும் மருத்துவக் குணங்கள்.
இனிப்புப் பண்டங்களுக்கு ஓர் ஆரோக்கிய மாற்று நுகர்பொருளாக அது கருதப்படுகிறது. எல்லா வயதுக்காரர்களாலும் விரும்பக்கூடிய, உண்ணும் தயார்நிலையில் எப்போதும் இருக்கும் ஒரு தின்பண்டமாக மக்கானா இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது.
மரபுரீதியாக ஃபாக்ஸ் நட்டுகள் என்றும் தாமரை விதைகள் அழைக்கப் படுகின்றன. இந்தியில் இதற்குப் பெயர் ஃபூல் மக்கானா. காரணம் பூப்போன்ற இதன் தோற்றம். மக்கானா என்பது துருத்திக் கொண்டிருக்கும் தாமரை விதை; அது பாப்கார்னுக்கு மாற்று என்று கருதப்படுகிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால், தாமரை விதையில் இருக்கும் மாவுபோன்ற சதைப்பகுதிதான் அது. மக்கானா சந்தையில் சுவையூட்டப்பட்ட வடிவங்களிலும், அப்படியே பூத்த நிலையிலும் கிடைக்கிறது.
எல்லா வயதுக்காரர்களாலும் விரும்பக்கூடிய, உண்ணும் தயார்நிலையில் எப்போதும் இருக்கும் ஒரு தின்பண்டமாக மக்கானா இந்தியா, சீனா, ஜப்பான், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது.
பல்வேறு நோய்களைத் தடுக்கும் திறனால் ஆசியா முழுவதும் ஆதிகாலத்திலிருந்தே உணவாகவும் மருந்தாகவும் தாமரை விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் தாமரை விதைகளில் மருத்துவக்குணங்கள் அடங்கியிருக்கின்றன. விதைகளை அப்படியே சாப்பிடலாம்; வறுத்தும், மாவாகவும், அரைத்தும் உண்ணலாம். உரித்தெடுத்த தாமரை விதைகளை சூடுபண்ணி மாவாகவும் திரவமாகவும் தயார்பண்ணிச் சாப்பிடலாம்.
மக்கானா என்பது உணவல்ல; அது வெறும் தின்பண்டம்தான். மிதமாகத்தான் உண்ண வேண்டும்.
நவராத்திரி விரதங்களில் வறுத்த தாமரை விதைகள் உண்ணப்படுகின்றன. காரணம் அவற்றில் ஊட்டச்சத்துக்களும் பல்வேறு மருத்துவ குணங்களும் இருக்கின்றன. விரதமிருக்கும்போது உண்ணும் உலர்ந்த அல்லது பொரித்த மக்கானா சுவையாகவும் மருத்துவக்குணத்தோடும் இருக்கிறது. வறுத்த உருளைக்கிழங்கை விடவும், ஜவ்வரிசியை விடவும் மக்கானா நல்லது.
மக்கானாவின் அசல் வடிவம் மழுங்கிய சுவையைக் கொண்டது; தன்னுடன் சேர்க்கப்படும் பொருளைப் பொறுத்து அது வெவ்வேறான சுவைகளைக் கொண்டிருக்கும். இந்தக் காரணத்திற்காகத்தான், மக்கானா கீர், கோயா மக்கானா, மக்கானா ரைட்டா, மக்கானா அல்வா போன்ற பல்வேறு இந்திய உணவுகளிலும், இனிப்புப் பலகாரங்களிலும் அது பயன்படுத்தப்படுகிறது. மக்கானா பசை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பிரபலம். அங்கே இது பசைப்பண்டங்களாகவும், உணவுக்குப் பிந்திய பண்டங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டில் தயாரிக்கப்படும் மக்கானாவில் பீகாரின் பங்கு 90 சதவீதம்.
நவராத்திரி கால விரதங்களில் வறுத்த தாமரை விதைகள் உண்ணப்படுகின்றன. விரதமிருக்கும்போது உண்ணும் உலர்ந்த அல்லது பொரித்த மக்கானா சுவையாகவும் மருத்துவக்குணத்தோடும் இருக்கிறது. வறுத்த உருளைக்கிழங்கை விடவும், ஜவ்வரிசியை விடவும் மக்கானா நல்லது.
தாமரைப் பூவிலிருந்து எடுக்கப்படும் தண்டு, வேர்கள், இலைகள், மிகவும் முக்கியமாக, விதைகள் ஆகியவை மருத்துவக் குணங்கள் கொண்டவை. ஆரோக்கியத்திற்கு நல்லது. ரொட்டியின் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு தாமரை விதையைக் காயவைத்து பவுடராக்கி அதை ரொட்டி மாவில் கலந்து விடுகிறார்கள்.
தாமரை விதைகளில் பசையம் (குளூட்டன்) இருப்பதில்லை. விஞ்ஞானிகள் தொத்திறைச்சிகளில் (சாசேஜ்) தாமரைத் தண்டைத் தூளாக்கி சேர்த்து நார்ச்சத்தை அதிகமாக்க முயன்றிருக்கின்றனர். மேலும், தாமரை விதை மருத்துவக்குணமும் ஊட்டச்சத்தும் கொண்ட ஒரு பொருள். இது தானியங்களோடும், சோயாபீன்களோடும் சேர்த்து அரைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
அழற்சி, புற்றுநோய், சிறுநீர் மற்றும் தோல் நோய்களுக்கான சிகிச்சைகளில் தாமரை விதையை மருந்தாகப் பயன்படுத்தும் மரபு உண்டு. மேலும் தூக்கமின்மை, இதயப் படபடப்பு, செரிமானக் கோளாறு, தொடர் வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி ஆகிய நோய்களுக்கான சிகிச்சைகளிலும் தாமரை விதை பயன்படுகிறது. இதில் கார்ப்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ ஆகிய ஊட்டச்சத்துக்களும், மாக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற கனிமச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. தாமரை விதையில் தாவர வேதியல் பொருட்களும், அழற்சி தடுக்கும் குணாம்சங்களும், ஆன்டி-ஆக்ஸிடான்ட்டுகளும் இருக்கின்றன.
மற்ற விதைகளிலும், பருப்புகளிலும் இல்லாத வித்தியாசமான பொருட்கள் தாமரை விதைகளில் இருக்கின்றன. உயர்இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது உடல்பருமன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு தாமரை விதை மிகவும் நல்லது. ஏனெனில் அதில் உயர்ந்த அளவு மாக்னீசியமும், குறைந்த அளவு சோடியமும் இருக்கின்றன.
மக்கானாவில் நிறைய புரோட்டீனும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. சர்க்கரை உயர்த்தல் குறியீடு (கிளைசெமிக் இன்டெக்ஸ்) மற்ற வழமையான உணவுகளில் இருப்பதை விட தாமரை விதையில் குறைவாகவே இருக்கிறது. உணவுக்குப் பின் உயரும் சர்க்கரை அளவை மக்கானா குறைத்து விடுகிறது.
இதயத்திற்கு நல்லது செய்யும் மாக்னீசியமும், ஃபோலட் என்னும் ஊட்டச்சத்தும் தாமரை விதையிலிருக்கின்றன. தாமரையின் கருவில் இருக்கும் கசப்பும், குளிராக்கும் குணாம்சங்களும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைக் காக்கிறது. அதிலிருக்கும் சரியான அளவு கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
மனதை அமைதியாக்கி தூக்கத்தை வரவழைக்கும் குணாம்சம் தாமரை விதையில் இருப்பதால் தூக்கமின்மை, படப்படப்பு, சோம்பேறித்தனம் கொண்டவர்கள் அதை உண்பது நல்லது. மக்கானாவில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், வயிற்றுப் போக்கை நிறுத்துவதற்கும் மிகவும் நல்லது.
உடல் எடை குறைக்க நாளொன்றுக்கு 30 கிராம் மக்கானா எடுத்துக்கொள்ளலாம். மிளகு, மஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களை மக்கானாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் பருமன் குறையும்.
ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடான்ட்டுகள் இருப்பதால் மக்கானா தொடர் அழற்சி நோய்களையும், மூப்பையும், அழுத்தத்தையும் நீக்கிவிடும். அடிக்கடி அளவுக்கதிகமாகச் சிறுநீர் கழிப்பதையும் தடுக்கிறது. எனினும் பொரித்த தின்பண்டமாக அதை உண்ண வேண்டாம்.
துவர்ப்புச் சுவை இருப்பதால் மக்கானா சிறுநீரக நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. மண்ணீரலை விஷ சுத்திகரிப்பு செய்வதற்கும் அது உதவுகிறது. தைராய்டு சுரப்பியைச் சரியாக வேலை செய்ய வைக்கும் செலேனியம் நிறைய இருக்கிறது ’ஃபாக்ஸ் நட் என்றழைக்கப்படும் மக்கானாவில்.
உடல் எடை குறைக்க ஒருநாளில் எவ்வளவு மக்கானா எடுத்துக்கொள்ள வேண்டும்?
30 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளலாம். கையளவு பாதுகாப்பான அளவு. மிளகு, மஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களை மக்கானாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எடைகுறையும்.
உடல் எடை குறைக்க மக்கானாவை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?
பொதுவாக தின்பண்டம் உண்ணும் நேரத்தில் மக்கானாவை உண்ணலாம். ஒரு கிண்ண அளவுக்கு எடுத்துக்கொள்ளும் வறுக்கப்பட்ட மக்கானாவில் சுமார் 106 கலோரிகள் இருக்கும்.
மக்கானா எளிதாகச் செரிமானமாகுமா?
தாமரை விதைகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடான்டுகளால் செரிமானம் எளிதாக நிகழ்கிறது. அனைத்து வயதினரும் இதை உண்ணலாம். செரிமானப் பிரச்சினைகள் வருவதில்லை. எனினும் அளவுக்கு அதிகமாக உண்ணுவதைத் தவிர்ப்பது நல்லது.
உடல் எடைகுறைப்பிற்கு மக்கானா எப்படி உதவுகிறது?
புரோட்டீன், கார்போஹைட்ரேட் ஆகியவற்றைக் கொண்ட மக்கானாவில் கொலஸ்ட்ராலும், கொழுப்பும், சோடியமும் குறைவாகவே உள்ளன. மக்கானாவின் ஊட்டசத்து செழுமை உடல் எடை குறைக்க உதவுகிறது. ஒருவர் சாப்பிட்ட பின்பு நீண்டநேரம் தாக்குப் பிடிக்கக்கூடிய வலிமையை அவருக்கு மக்கானா தருகிறது.
கல்லீரலில் விசத்தை நீக்கி வளர்சிதை மாற்றத்திற்கு மக்கானா உதவுகிறது. அதனால் உடலில் தேங்கும் சதை குறைந்துபோகிறது. நல்ல விளைவுகள் வேண்டுமானால், ஆரோக்கிய உணவுமுறையோடும் உடல்பயிற்சியோடும் மக்கானாவை இணையாக எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கமான உணவுமுறையைக் கடைப்பிடியுங்கள்; திடீர் உணவைத் தவிருங்கள். அப்போதுதான் ஆரோக்கியமான உடல்எடை குறைப்பு நிகழும்.
உயர்இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது உடல்பருமன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு தாமரை விதை மிகவும் நல்லது. ஏனெனில் அதில் உயர்ந்த அளவு மாக்னீசியமும், குறைந்த அளவு சோடியமும் இருக்கின்றன.
இறுதியான ஆலோசனைகள்
என்றாலும் ஒரு நல்ல தொழில்ரீதியிலான சுகாதார நிபுணரைக் கலந்து ஆலோசித்துவிட்டு தாமரை விதைச் சேர்க்கையை உண்ணுவது நல்லது. ஏனென்றால் அதன் பாதுகாப்பு மற்றும் பக்கவிளைவுகள் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயினும் தாமரை விதை சமையலில் பயன்படுத்துவது பொதுவாக நல்லது என்றுதான் சொல்லப்படுகிறது.
சிலருக்கு வேண்டுமானால் தாமரை விதை ஒவ்வாமை எற்படுத்தலாம். பெரும்பாலான மக்களுக்குக் குறைந்தஅளவு தாமரை விதைகளும், தூளும் நன்மையைத்தான் செய்கின்றன. சிலருக்கு மட்டும்தான் தாமரை விதைகள் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற குடல்சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கலாம்.
Read in : English