Read in : English
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பி விசாணை நடத்த வேண்டும் என்று கேட்ட ஓ. பன்னீர்செல்வமே, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று விசாரணை ஆணையத்தில் சாட்சியம் சொல்லிய பிறகு, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை புதிதாக என்ன கண்டுபிடித்துச சொல்லப் போகிறது என்பது தெரியவில்லை.
•ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவற்கான மிகுந்த பரபரப்புடன் தொடங்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தற்போது தனது விசாரணையை முடித்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆய்வறிக்கையை பெற்றவுடன் அதையும் சேர்த்து அறிக்கை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் தீபா, தீபக், அப்போலோ மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி வா புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் விசாரணை நிறைவடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த ஆணையத்தின் பதவிக்காலம் ஜூன் 24 ஆம் தேதி முடிவடையும் சூழ்நிலையில், அதற்கு முன்னதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நான்கரை ஆண்டு காலத்தில் இதுவரை 156 பேர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.
பத்து மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சசிகலா, ஓபிஎஸ் உண்மையைச் சொல்லி இருக்கிறார் என்றார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி7 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தினார். ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, தினகரன் ஒதுக்கப்பட்ட பிறகு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் சமரசமாகி துணை முதலமைச்சரும் ஆனார். முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் முன்வைத்தார் அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை அமைக்கப்பட்டது.
ஆனாலும், ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்திலிருந்து பலமுறை சம்மன் அனுப்பப்பட்டபோதும் சாட்சியம் அளிப்பதைத் தள்ளி வைத்துக் கொண்டே வந்த அவர், ஒருகட்டத்தில் ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு நேரில் வந்து சாட்சி அளித்தார். பத்து மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சசிகலா, ஓபிஎஸ் உண்மையைச் சொல்லி இருக்கிறார் என்றார்.
ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா? என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கேட்டார். ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று ஒ.பி. பன்னீர் செல்வம் கூறினார்.
இதற்கிடையே, விசாரணை ஆணையம் ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகவும் ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்போலோ நிர்வாகம் கூறியது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றது. இதனால் இரண்டு ஆண்டு காலம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நடைபெறவில்லை. மருத்துவ நிபுணர்களை விசாரணை செய்யும் போது ஆணையத்துக்கு உதவியாக எய்மஸ் மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த இந்த விசாரணைக்கு இதுவரை 3.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான தகவல் தெரிவிக்கிறது.
நீதிமன்ற வழக்கு காரணமாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் தடைப்பட்டது. ஏற்கெனவே 11 முறை நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 5 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு கடந்த ஐனவரியில் உத்தரவிட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த இந்த விசாரணைக்கு இதுவரை 3.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான தகவல் தெரிவிக்கிறது. கடந்த அக்டோருக்குப் பிறகு ஆன செலவுகளையும் சேர்த்தால் நான்கு கோடி ரூபாயை தாண்டலாம். நான்கரை ஆண்டு காலமாக 12 முறை பதவி நீட்டிப்பு செய்யப்பட்ட ஆறுமுகம் ஆணையம் தொடங்கப்பட்டபோது இருந்த பரபரப்பு தற்போது இல்லாமல் போய்விட்டது.
Read in : English