Site icon இன்மதி

ஆல்கலைன் நீரின் நன்மைகளும் தீமைகளும்

உடலுக்குள்ளும் ரத்தத்திலும் இருக்கும் அமிலப்பொருட்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பதால் அவற்றை மட்டுப்படுத்த வேண்டும்; இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் ஆல்கலைன் உடலுக்கு நல்லது என்ற கருத்து. அதனால் நிறைய ஆல்கலைன் சத்து கொண்ட உடல் ஆரோக்கியமாகவே இருக்கும்.(Photo Credit: Pixabay)

Read in : English

நாம் குடிப்பது அமிலநீரா அல்லது காரநீரா (ஆல்கலைன்)? ஆம். நம்மில் பலர் குடிப்பது அமிலநீர்தான். ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (எதிர்த்திசை சவ்வூடு பரவல் என்னும் நீர் வடிகட்டும் முறை) நீருக்குப் பழக்கப்பட்ட நாம், வீட்டில், அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளில், நம்மை அறியாமலே அமிலநீர் (கிட்டத்தட்ட 6 பிஎச்) அருந்துகிறோம். ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் நீர், உப்பிலுள்ள கால்சியம், மாக்னீசியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவறை வடிக்கட்டிவிடுகிறது; அந்த வேதியல் மூலக்கூறுகள் பிஎச்-சின்மீது தாக்கம் ஏற்படுத்துபவை (பிஎச் என்பது பவர் ஆஃப் ஹைட்ரஜன்; அமிலத்தன்மையின் அல்லது ஆல்கலைன் என்னும் காரத்தின் நிலையை மதிப்பீடு செய்யும் ஓர் அளவுகோல்).

சூடான குழாய் நீர்கூட சூடாவதற்கு முன்பும் சூடான பின்பும் வேறுவேறான பிஎச்-ஐ காட்டுகிறது. நீரிலிருக்கும் பிஎச் ஒவ்வொரு நீர்மூலத்திலும் வேறுவேறாக இருக்கிறது; மண் மற்றும் வானிலை ஆகியவற்றின் தாக்கங்களால் மாறுபடுகிறது (இங்கே பளிங்கு போல் தெளிவான ஊற்றுநீர்தான் அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகிறது).

உடல் ஆரோக்கியத்திற்கு நீர் மிகவும் அத்தியாவசியம். ஒருநாளைக்கு எட்டு தம்ளர் தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். நீர்ச்சத்தோடு இருக்கும் உடலில் உற்பத்தித்திறன், மனநிலை, ஞாபகச்சக்தி, ஆற்றல் அளவு, தெளிவு ஆகியவை மேம்படும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால் உங்கள் உடலில் நீர்ச்சத்தை வேகமாகவும், நீண்டநேரத்திற்குத் தக்கவைக்கவும், உங்கள் ரத்தத்தின், எலும்புகளின், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் திறன்கொண்ட ஒன்றை நீங்கள் அருந்துவது, வழக்கமான நீரை விட அதிக பலன் தரும் என்று உங்களுக்குச் சொன்னால், நீங்கள் அதை நம்புவீர்களா? நம்புவது நல்லது… ஏனென்றால் ஆல்கலைன் என்றழைக்கப்படும் காரநீர்தான் அது என்பது உண்மை.

குழாய்கள் மூலம், பாட்டில்கள் மூலம் (தாமிரநீர், சுவைநீர், காரநீர்) பலவகையான நீர் கிடைக்கிறது. வழக்கமான குழாய்நீரை விட, பாட்டில் நீரை விட, மிதமாக அருந்திய காரநீர் அல்லது ஆல்கலைன் நீர் நிறைய நன்மைகளைச் செய்யும் என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. ஆல்கலைன் நீர் என்பது அதிகமான பிஎச் அளவைக் கொண்டிருக்கும் வகையில் மாற்றப்படும் நீர். அருந்துபவர்களுக்கு ஏராளமான நன்மைகள் விளையும் வகையில் உருவாக்கப்படுகிறது. தரமான மற்ற நீரைவிட ஆல்கலைன் நீரில் அதிகம் காரத்தன்மை இருக்கிறது; அதாவது இதன் பிஎச் அளவு அதிகம்.

ஒருநாளைக்கு எட்டு தம்ளர் தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீர்ச்சத்தோடு இருக்கும் உடலில் உற்பத்தித்திறன், மனநிலை, ஞாபகச்சக்தி, ஆற்றல் அளவு, தெளிவு ஆகியவை மேம்படும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன

பிஎச் என்பது அமிலத்தன்மையை அல்லது காரத்தன்மையை மதிப்பீடு செய்யும் ஓர் அளவுகோல். வழக்கமாக அருந்தும் நீரில் நடுத்தரமான பிஎச் நிலை 6.5-7 என்ற அளவில் இருக்கும். ஆல்கலைன் நீரில் இது 7-8.5 என்ற அளவில் இருக்கும். குடிநீரின் பிஎச் அளவு 6.5-லிருந்து 8.5 வரை இருக்க வேண்டும் என்ற நீரின் தரவிதிமுறைகள் பரிந்துரைக்கின்றன.

ஆல்கலைன் நீர் மற்ற நீரைவிட உடலுக்குள் சரியாக இந்த பிஎச் அளவை வைத்திருக்கிறது. அதனால் அதன் நன்மைகள் ஏராளம். விலகிப்போன ஆற்றல் நிலையை மீண்டும் உருவாக்குகிறது. மேலும், ஆல்கலைன் நீரில் இருக்கும் காரக்கனிமங்கள் ஆன்டி-ஆக்ஸிடாண்டாகவும், புரோ- ஆக்ஸிடாண்டாகவும் செயல்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடாண்ட் பொருட்கள் மூப்பைத்தடுக்கும் சத்துக்களை அதிகப்படுத்துகின்றன (திரவ ஆன்டி-ஆக்ஸிடாண்டுகள் மனித உடலுக்குள் வேகமாக உள்வாங்கப்படுகின்றன); குடல்களைச் சுத்திகரிக்கும் வஸ்துக்களையும், நோயெதிர்ப்பு மண்டலத்தையும், நீர்ச்சத்தையும், தோல் ஆரோக்கியத்தையும், பிற விசம்நீக்கும் பொருட்களையும் ஆன்டி-ஆக்ஸிடாண்ட்டுகள் மேம்படுத்துகின்றன. போதுமான அளவிலான நீர்ச்சத்து இரத்தத்தின் பிசுபிசுப்பை குறைக்கிறது.

முறையாகச் சேகரிக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஊற்றுநீர்தான் ஆகச்சிறந்ததோர் ஆரோக்கியத்தைத் தரும். ஊற்றுநீரைப் பரிசோதித்து குறைந்த அளவில் பதப்படுத்தினால், அதில் உடலுக்குத் தேவையான கனிமச்சத்துகள்ல் இருப்பதைக் காணலாம்.

ஆல்கலைன் நீர் குடல்களில் உள்ள பிஎச் அளவை உயர்த்துகிறது; குடல்களின் நீர்ச்சத்தைப் பேணிக்காக்கிறது; உடலுக்குள் புகும் தீய நுண்ணுயிரிகளையும், செரிமானப் பாதையில் உள்ள விஷப்பொருட்களையும் நீக்குகிறது. இறுதியாக, ஆல்கலைன் நீரில் இருக்கும் மாக்னீசியம், கால்சியம், மற்றும் பிற கனிமச் சத்துக்கள் செரிமானத்திற்கு உதவும் வகையில் லேசான இளக்கியாகச் செயல்படுகின்றன.

ஆகச்சிறந்த ஆல்கலைன் நீர் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது. அதாவது, இயற்கையான காரத்தன்மை கொண்ட கனிமவளங்களையும், உயர்ந்த பிஎச் அளவையும் கொண்ட நீர்மூலங்களிலிருந்து, அந்த நீர் உருவாகி வெளிவருகிறது. மற்ற நீர்வகைகளில், எலக்ட்ரோலைட்டுகள் சேர்க்கப்பட்டும் அயனியாக்கப்பட்டும், செயற்கையாக ஆல்கலைன் சத்து சேர்க்கப்படுகிறது. இந்த முறையில் ஆல்கலைன் சத்து சேர்க்கப்படும் நீர் பலமாக பதனப்படுத்தப்படுகிறது. வாயில் ஊற்றப்படும் நீர்ச்சத்துமிக்க உப்புக்கரைசலில் அதிக அளவு பிஎச் இருக்கிறது.

பிஎச் 7-க்கு மேம்பட்ட எதுவும் ஆல்கலைன்தான். மனித உடல் ஜீவித்திருப்பதற்கு அதன் பிஎச் 7.35-7.45 என்ற அளவில் இருக்க வேண்டும். உங்கள் ரத்தம் அதிகம் அமிலத்தன்மை கொண்டிருந்தால், அதிகமான கார்பன்–டை–ஆக்ஸைடு வெளிவரும். சிறுநீரில் அதிகமான அமிலத்தைக் கிட்னிகள் வெளியேற்றும்.

பிராண்டட் ஆல்கலைன் நீர் பாட்டில்கள் எல்லாவற்றிலும் விளம்பரப்படுத்தப்படும் அளவுக்கு காரத்தன்மை இருப்பதில்லை. அவற்றில் வெவ்வேறு விதமான பிஎச் அளவுகள் இருக்கின்றன; அந்த ஆல்கலைன் நீர் கசப்பாகவும் இருக்கும்; அருந்திய பின்பு உலோகச்சுவையும் கொண்டிருக்கும். அந்த மாதிரியான நீர்வகைகளில் எலெக்ட்ரோலைட்டுகள் கலந்திருக்கின்றன; பாதுகாப்பானவை என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அவை கிடைக்கின்றன; ஆனால் ஃப்ளோரைட்டுகள் முற்றிலும் நீக்கப்படாமல் இருக்கின்றன.

ஒரு பிராண்டில் ஒன்பதும், ஒன்பதுக்கும் மேற்பட்ட அளவில் பிஎச் இருக்கிறது. அது சுத்தத்திற்காக வடிகட்டப்பட்ட நீராவி; சுவைக்காக எலெக்ட்ரோலைட்டுகள் சேர்க்கப்படுகின்றன; உயர் பிஎச் அளவுக்காக நீர் அயனியாக்கப்படுகிறது. பிஎச் 8.8 என்ற அளவில் இருக்கும் ஆல்கலைன் நீர், எதிர்த்திசை சவ்வூடு பரவல் (ரிவர்ஸ் ஆஸ்னோஸிஸ்) என்ற மென்படல வடிகட்டுதல் முறையில் அல்லது பல்நிலை வடிகட்டுதல் முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீர். மேலும், இது இமாலயக் கடல் உப்பு கலந்து ஊட்டமாக்கப்படுகிறது; இதில் முக்கியமான எலெக்ட்ரோலைட்டுகள் இருக்கின்றன; மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மாக்னீசியம், பொட்டாசியம் ஆகிய கனிமச்சத்துக்களும் இருக்கின்றன.

உடலுக்குள்ளும் ரத்தத்திலும் இருக்கும் அமிலப்பொருட்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பதால் அவற்றை மட்டுப்படுத்த வேண்டும்; இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் ஆல்கலைன் உடலுக்கு நல்லது என்ற கருத்து. அதனால் நிறைய ஆல்கலைன் சத்து கொண்ட உடல் ஆரோக்கியமாகவே இருக்கும்.

ஆரோக்கியம் தருகின்ற ஆல்கலைன் நீரில் இருக்கும் கனிமப்பொருட்கள் பின்வருமாறு:
1. கால்சியம்: இது எலும்புக்கும், இதயத்திற்கும், தசைகளுக்கும், நரம்புகளுக்கும், நல்லது.
2. மாக்னீசியம்: உணவை ஆற்றலாக மாற்ற இது உதவுகிறது. உடலுக்குள் ஏற்படும் 300-க்கு மேற்பட்ட உயிர்வேதியல் மாற்றங்களுக்கு இது அவசியம்.
3. சோடியம்: இது ரத்தத்தின் அழுத்தத்தையும், அளவையும் ஒழுங்குப் படுத்துகிறது. நரம்பு மற்றும் தசைகளின் பணிகளுக்கு உதவுகிறது.
4. பொட்டாசியம்: இதுவொரு வகையான எலெக்ட்ரோலைட்; தசையின் பணிக்கும், ஆரோக்கியமான செரிமானத்திற்கும் இது முக்கியமானது.

நாம் உண்ணும் உணவில் அதிகமான அமிலத்தன்மை இருக்கிறது என்று கவலைப்பட்டால், அழற்சியைத் தடுக்கும் உணவுமுறையைக் கடைப்பிடியுங்கள். தட்டு நிறைய காய்கறிகளையும், பழங்களையும் வைத்து உண்ணுங்கள். பொதுவாகவே, விலங்குகளிடமிருந்து பெறும் பொருட்களும், காஃபெயின், உப்பு, சீனி ஆகியவையும் அமிலத்தை உருவாக்கக்கூடியவை. ஆனால் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆல்கலைன் சத்து கொண்டவை.

ஆல்கலைன் நீரில் இருக்கும் சாத்தியமான அபாயங்கள்
ஆல்கலைன் நீரை அளவுக்கு அதிகமான அருந்தினால், உடலில் இருக்கும் இயற்கையான அமிலஅளவு அதிகமாகவே மட்டுப்படுத்தப்படும். அதனால் உடலுக்குத் தேவையான ‘நல்ல பாக்டீரியாக்கள்” ஒழிந்துவிடும். தீய பாக்டீரியாக்களையும், மற்ற தீய நுண்ணுயிரிகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு ‘ப்ரோபயோட்டிக்ஸ்’ என்றழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உடலுக்குத் தேவை.

ஆல்கலைன் நீர் ஆகச்சிறந்த ஆரோக்கிய வழிமுறை என்றாலும் அதை வழக்கத்திற்குக் கொண்டுவருவதற்கு முன்பு ஒரு நல்ல மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. எப்போதாவது ஆல்கலைன் நீர் அருந்தினால் உடல் பெரிதாகப் பாதிக்கப்படுவதில்லை. என்றாலும் தினமும் அளவுக்கு அதிகமாக ஆல்கலைன் நீர் அருந்தினால், உடல் தனது பிஎச் அளவைத் தக்கவைத்துக் கொள்வதற்குக் கடுமையாக போராட வேண்டியிருக்கும். நாளடைவில் உங்கள் உடல் நிறைய வாயுச்சாற்றையும், செரிமான நொதிகளையும் உற்பத்தி செய்யும். கிட்னிக்கு மருந்து எடுத்துக் கொள்பர்களின் உடல்களில் ஆல்கலைன் நீரின் கனிமச்சத்துகள் தேங்க ஆரம்பித்துவிடும்.

உடலுக்குள்ளும் ரத்தத்திலும் இருக்கும் அமிலப்பொருட்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பதால் அவற்றை மட்டுப்படுத்த வேண்டும்; இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் ஆல்கலைன் உடலுக்கு நல்லது என்ற கருத்து

ஆல்கலைன் நீரில் அதிகமான பிஎச் அளவு இருப்பதால், அது உங்கள் வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைத்துவிடும். அமிலம்தான் பாக்டீரியாக்களையும், நோய்க்கிருமிகளையும் உடலுக்குள் புகவிடாமல் தடுக்கிறது. வயிற்றில் இருக்கும் உயர்அமிலம் என்னும் இயற்கைத் தடை இல்லாமல் போனால், தீய பாக்டீரியாக்களும், நோய்க்கிருமிகளும் வயிற்றுக்குள் புகுந்து ஜீவித்து ரத்த ஓடைக்குள் கலந்துவிடும்.

ஆல்கலைன் சத்து உடலுக்குள் அதிகமாகிவிட்டால், இரைப்பைப் பிரச்சினைகள் உருவாகலாம். தோல் அரிப்புகளும் ஏற்படலாம். நீண்ட நாளாக ஆல்கலைன் சத்து கொண்டிருக்கும் உடலில் வளர்சிதைமாற்ற ஆல்கோலோசிஸ் ஏற்படலாம்; அதனால் வாந்தி, நடுக்கம், சதை துடிப்புகள், மனக்குழப்பம் ஆகியவையும் உருவாகலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version