Site icon இன்மதி

ஐபிஎல் அடுத்த சீசனிலாவது சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டு வருமா?

Photo Credit : Chennai Super Kings Twitter page

Read in : English

ஐபிஎல் கிரிக்கெட் 2020ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பலத்த அடி வாங்கியபோது, தோல்விகளுக்குக் காரணமாக தோனியையும் அவரது தேர்வு முறைகளையும் கிரிக்கெட் விமர்சகர்கள் குறை கூறினார்கள். இப்போது ஞாயிறன்று (ஏப்ரல் 17) நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றுவிட்டது. எனவே, 2022 சீசன் ஆரம்பமாவதற்கு முன்பே சிஎஸ்கேயில் நிகழ்ந்த கேப்டன் மாற்றத்தைக் குறைசொல்லப் போகிறார்கள். உண்மை என்னவென்றால், பிரச்சாரம் பிசுபிசுத்துப் போய்விட்டது. 10 அணிகள் கொண்ட போட்டியில் வாய்ப்புகளைக் கணக்குப்போடுவதற்கு மதிப்பு இல்லை.

கீழ்பாதியில் மற்ற ஒவ்வொரு குழுவையும் ஜெயிப்பதற்கும், 18 என்ற மந்திர எண் புள்ளிகளை அடைய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதற்கும், அவர்கள் இரண்டு உச்ச குழுக்களையே நம்பியிருக்க வேண்டியதாயிற்று. அது போதாமலும் இருந்திருக்கலாம். நிஜத்தைச் சொல்வதென்றால், அவர்களின் பந்துவீச்சில் வேகமும், கூர்மையும் இல்லாமல் போனதால் 2020-ஆம் ஆண்டைப் போலவே இந்தத் தடவையும் நிலைமை நம்பிக்கை தருவதாக இல்லை. 2020இல் அப்போதிருந்த ‘எதிர்கால நட்சத்திர’ ஆட்டக்காரர்கள் அனுபவம் மிக்கவர்களாக இருந்தனர். ஆனால் வயதால் களைத்திருந்தார்கள். சாவ்லா, கேதார் ஜாதவ், வாட்சன் மற்றும் முரளி விஜய் போன்றோர்களுக்கு 14 ஆட்டங்களில் மூச்சுத் திணறிவிட்டது. ஆனாலும் இப்போதும் எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கிறது.

2020-க்குப் பின்பு தோனி, அணியின் பெருமையை மீட்டெடுத்தார். நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த ஜடேஜாவுக்கு இன்னும் கொஞ்சகாலம் ஆகலாம்.

முதலில், டைட்டிலைக் காப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய ஆட்டம் படுகுழப்பமாக, சீராக இல்லாமல் இருந்ததற்கான காரணம் அப்பட்டமாகவே தெரிந்தது. அவர்களின் பந்துவீச்சுமுறை பலகீனமாகவும், எதிரிகளிடம் அச்சம் ஏற்படுத்தும் வண்ணமாக அமையவும் இல்லை. மும்பை அணியில் பம்ராவும், குஜராத் அணியில் ரஷீத்தும், பஞ்சாபில் ரபடாவும் இருக்கிறார்கள்; மேலும் போகிறது இந்தப் பட்டியல். இந்த ஆட்டக்காரர்கள் தாக்குதல் உத்திகளில் முன்னணியில் நிற்பவர்கள். பெரும்பாலான பேட்ஸ்மென்கள் அவர்களை ஜெயிக்கவே விரும்புவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்தமாதிரியான ஆட்டக்காரர்கள் இல்லை. காயம்பட்டுக் கிடக்கும் தீபக் சஹார் இந்த சீசன் முழுக்க வரப்போவதில்லை என்பதால், போட்டியில் பெருந்தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இல்லாமலே முடிந்துவிடும் என்று ஊகித்துக் கொள்வது நல்லது.

இப்போது நாம் களத்திற்கு அப்பாலுள்ள மாற்றங்களை விவாதிப்போம். சீசன் ஆரம்பத்திற்கு முன்பே தான் ஒதுங்கிக் கொண்டு, ஜடேஜாவை கேப்டனாக்கி அவர் இந்தியன் பிரீமியர் லீக் அனுபவம் பெறட்டும் என்று தோனி முடிவெடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தோனியின் முடிவை ஆதரித்தாலும், அந்த முடிவு மைதானத்தில் ஆட்டக்காரர்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. தோனி என்ற கேப்டனுக்கு இருந்த ஒளிவட்டமும், அவரது பெருமைமிகு சிறப்பும் இப்போது இல்லை.

ஜடேஜாவின் அணிதான் தற்போதைய அணி. ஆனால், அது தோனி தேர்ந்தெடுத்த ஒன்று. கிரிக்கெட் பற்றிய தோனியின் கண்ணோட்டத்தின்படி கட்டமைக்கப்பட்ட அணிஅது: தரமான ‘பவர் பிளே’ பந்துவீச்சாளர் ஒருவர், ஒருசில கண்ணியமான சுழல்பந்து வீச்சாளர்கள், மற்றும் பிராவோ ஆகியோர் அடங்கிய அணி அது. மற்றவர்கள் தேவைக்கேற்ற பதிலிகளாகக் கொண்டுவரப்பட்டனர். மெல்ல மெல்ல தொழிலைக் கற்றுக்கொண்டு வருகிறார் ஜடேஜா. மாற்றம் என்ற இந்தக் கசப்பு மாத்திரையை ரசிகர்கள் முழுங்கித்தான் தீரவேண்டும். வேறுவழி இல்லை. சர் அலெக்ஸ் ஒதுங்கியபின்பு மான்செஸ்டர் யுனைட்டெட் அணி படுபயங்கரமான பிரீமியர் லீக் இதைப்போன்ற நிலைமைதான் இருந்தது. அந்தக் கிளப்பின் வெற்றிகரமான மேலாளர் அடுத்த ஆளைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அது சரிப்பட்டுவரவில்லை.

2020-க்குப் பின்பு தோனி, அணியின் பெருமையை மீட்டெடுத்தார். நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த ஜடேஜாவுக்கு இன்னும் கொஞ்சகாலம் ஆகலாம். ஆனல் இதே அணியுடன் அடுத்த சீசனில் நிலைமையைச் சரிசெய்து பெருமையை மீட்டெடுக்கும் அளவுக்கு அவருக்கு போதுமான நுட்பமான தந்திரோபாயம் இருக்கிறதா? காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் கேப்டன்ஸி ஆகியவற்றில் சிறந்த ஆட்டக்காரராக ஜடேஜா பரிமளிக்கத் தொடங்கிவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் நேர்த்தியுடன் புத்துணர்ச்சியோடு எழுந்து பயணம் செய்ய ஆரம்பிக்கும்.

இந்தப் போட்டிகளில் வெளிப்பட்ட ஒரேவொரு சாத்தியமான, பிரகாசமான நம்பிக்கை அடுத்த முக்கியமான இந்திய ஆட்டக்காரர்களின் எழுச்சியாக இருக்கலாம். அவர்களைச் சுற்றி மையமான பெரும்பலம் கொண்ட ஓரணியை ஜடேஜா உருவாக்கலாம். ஆரம்ப ஆண்டுகளில் தோனியிடம் முரளி விஜய், பாலாஜி. ரெய்னா மற்றும் பத்ரிநாத் ஆகியோரும், பின்னர் ராயூடும் இருந்தார்கள். 2023-இல் ஜடேஜாவுக்கு கெய்க்வாட், துபே, சஹார், மற்றும் ஜெகதீசன் போன்ற ஆட்டக்காரர்கள் அமையலாம். இந்த சீசனில் 19-வயதிற்குக்கீழான வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேகாருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அநேகமாக முகேஷ் சௌத்ரி இறுதிக்கட்ட ஓவரில் பந்துவீசும் தன்பாணியைச் செம்மைப்படுத்தினால், அவர் அடுத்த ஆண்டு பலமாகத் திரும்பிவரலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் 2020 சீசனில் தோற்றபின்பு, தனது விளையாட்டு அணிக்காக எல்லாவிதமான பரிசோதனைகளையும் மேற்கொண்டது ஞாபகம் இருக்கிறதா? 10 ஆட்டங்கள் முடிந்தபின்பு அதைப்போல சிஎஸ்கே செய்யலாம்; ஆட்டக்காரர்கள் தங்கள் திறன்களைக் காட்ட சந்தர்ப்பங்களைக் கொடுக்கலாம்.

குறிப்பிட்ட ஒரு அணிக்கு பொருத்தமான இளம் இந்திய ஆட்டக்காரர்களைப் பெறுவதற்கு அவர்கள் போராடுகின்றன. ஆனால் சிஎஸ்கே பத்து ஆண்டு கழித்து அந்த நிலைக்கு வந்திருக்கிறது. மீண்டும் பெற்றிருக்கிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் கேப்டன்ஸி ஆகியவற்றில் சிறந்த ஆட்டக்காரராக ஜடேஜா பரிமளிக்கத் தொடங்கிவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் நேர்த்தியுடன் புத்துணர்ச்சியோடு எழுந்து பயணம் செய்ய ஆரம்பிக்கும்; அப்போது அந்த அணியில் சிங்கக்குட்டிகள் தலைமை ஏற்று முன்னால் நடந்து செல்வார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version