Site icon இன்மதி

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிப்பு, மாலத்தீவுகளில் கேட்டரிங் வேலை!

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி எஸ். திவ்யா, ஏழ்மைச் சூழ்நிலையிலும் கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துத் தற்போது மாலத் தீவுகளில் சர்வதேச ஹோட்டல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

Read in : English

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி எஸ். திவ்யா (22), கேட்ரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்து, தற்போது மாலத் தீவுகளில் சர்வதேச ஹோட்டல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு தடைகளைத் தாண்டிப் படித்து, நட்சத்திர ஹோட்டல் கிச்சனில் வேலை பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ள திவ்யா, தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

எனது சொந்த ஊர் கள்ளக்குறிச்சியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூரார்பாளையம். அப்பா செல்வராஜ். அவரால் குடும்பத்திற்கு எந்த உதவியும் இல்லை. கட்டட வேலை செய்து அம்மா மாலா குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவரது வருமானம் குடும்பத்துக்குப் போதாத நிலை இருந்தது. எனவே, நான் ஐந்தாவது படிக்கும்போதே விடுமுறை நாட்களில் நானும் கட்டட வேலைக்குச் செல்வேன். இரட்டையர்களான தம்பிகள் சக்தி, மணிகண்டன் ஆகியோரை எங்களுடன் வைத்துக் கொள்ள முடியாத பொருளாதார சூழ்நிலை. அதனால், சென்னையில் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் அவர்களைச் சேர்த்துவிட்டோம். அவர்கள் கோடை விடுமுறையில்தான் வீட்டுக்கு வருவார்கள். மற்றபடி, அங்குதான் தங்கி இருந்து, அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தார்கள்.

நான் ஐந்தாவது படிக்கும்போதே விடுமுறை நாட்களில் நானும் கட்டட வேலைக்குச் செல்வேன். இரட்டையர்களான தம்பிகள் சக்தி, மணிகண்டன் ஆகியோரை எங்களுடன் வைத்துக் கொள்ள முடியாத பொருளாதார சூழ்நிலை. அதனால், சென்னையில் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் அவர்களைச் சேர்த்துவிட்டோம்.

நான் மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாவது வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். 2015இல் பத்தாம் வகுப்பில் 500க்கு 415 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் டூ வகுப்பில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். 2017ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 858 மதிப்பெண்கள். பள்ளியில் நான்கு பேர் முதல் மதிப்பெண்கள் பெற்றோம். தமிழ் பாடத்தில் 100க்கு 98 எடுத்து மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் முதல் இடம் பெற்றேன்.

கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாத சூழ்நிலையில் என்ற செய்வது என்று தெரியவில்லை. ஜெனிட்டிக் என்ஜினியரிங் படிக்கலாம் என்ற நினைத்தேன். நர்சிங் படிப்பில் சேரலாம் என்றால், எனது மதிப்பெண்களுக்கு அதில் இடம் கிடைக்காது என்பது தெரிய வந்தது. அகரம் பவுண்டேஷனில் உதவி பெறலாம் என்று பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியை சாந்தி யோசனை சொல்லி வழிகாட்டினார். அகரம் பவுண்டேஷன் எனது படிப்புக்கு உதவ முன்வந்தது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரலாம் என்றும் அவர்கள் யோசனை சொன்னார்கள். அதையடுத்து, கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர்ந்தேன். அங்கு விடுதியில் தங்கிப் படித்தேன்.

முதலாண்டு விடுமுறையில் கோவையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் இன்டர்ஷிப் பயிற்சி பெற்றேன். ஒரு மாதப் பயிற்சி. ஹவுஸ் கீப்பிங் பணி. அதில சிறந்த டிரெயினி விருது பெற்றேன்.

கல்லூரியில் படிக்கும்போது ஹவுஸ் கீப்பிங், சர்வீஸ், கிச்சன் ஆகிய பிரிவுகளில் பயிற்சி பெற்றேன். எந்த வேலையையும் மனதுக்குகுப் பிடித்து செய்ய வேண்டும் என்று எனது துறைத் தலைவர் செபாஸ்டின் சாலுவின் சொல்வார். எனது வேலையை நான் விருப்பத்துடன் செய்வேன்.

முதலாண்டு விடுமுறையில் கோவையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் இன்டர்ஷிப் பயிற்சி பெற்றேன். ஒரு மாதப் பயிற்சி. ஹவுஸ் கீப்பிங் பணி. அதில சிறந்த டிரெயினி விருது பெற்றேன். எனக்கு கிச்சனில் சமையல் செய்வதில் ஆர்வம் அதிகம். அதனால், அதில் பயிற்சி பெறுவதில் கவனம் செலுத்தினேன். துபாயில் புதிதாக ஹோட்டல் தொடங்கும் ஆர்வத்துடன், துபாயிலிருந்து வந்த ரஷ்யா பேகம் என்பவர், எங்களது கல்லூரியில் இந்திய உணவு வகைகளைத் தயாரிப்பது குறித்துப் பயிற்சி பெற வந்தார். இங்கு அவர் மூன்று மாதம் தங்கி இருந்தார். அவருக்கு உதவியாக கல்லூரியில் என்னை நியமித்தார்கள். தினந்தோறும் காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரைகூட வேலை இருக்கும். எவ்வளவு நேரம் ஆனாலும் அவருடன் இருந்து ஆர்வத்துடன் வேலை செய்வேன். எனது வேலை அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. துபாயில் புதிதாகத் தொடங்க இருக்கும் அவரது ஹோட்டலில் வேலைக்கு வரும்படி அவர் அழைத்தார். படித்து முடிக்கும் முன்னதாக என்னால் அந்த வேலைக்கு வர இயலாது என்று கூறிவிட்டேன்.

எஸ் திவ்யா

இதற்கிடையே, சென்னையில் உள்ள இன்டர்நேஷனல் ஹோட்டலான ஹயாத் ரெசிடென்சியில் இன்டர்ஷிப் பெற நான்கு பேருக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் நான் மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன். அங்கு பயிற்சி பெறுபவர்கள் வெளியில் தங்க வேண்டும் என்றார்கள். என்னிடம் வெளியில் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏற்ற பணவசதி இல்லை. பயிற்சிக் காலத்தில் அகரம் விடுதியில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தார்கள். அண்ணா நகரிலிருந்து தி.நகர் வரை ஷேர் ஆட்டோவில் ரூ.15 கொடுத்து வருவேன். அங்கிருந்து ஹோட்டலுக்கு நடந்து வருவேன். பயிற்சியை முடித்து பட்டப் படிப்பில் பர்ஸ்ட் கிளாஸ் வித் டிஸ்டிங்ஷன் பெற்றேன்.

தமிழ் வழியில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கில வழியில் படிக்க தடுமாறிய எனக்கு தற்போது ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலேசியன், சிங்களம் ஆகிய மொழிகளில் பேசத் தெரியும்.

எனது படிப்பை முடிந்ததும், ஹயாத் ரெசிடென்சி ஹோட்டலிலே«யே கிச்சனில் காமி-3 (Commie-3) என்ற பணியில் சேர்ந்தேன். மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். இங்கு ஓராண்டு பணியில் இருந்தேன். இதையடுத்து, எனக்கு மாலத் தீவுகளில் குரேடு ஐலேண்ட் ரிசார்ட் அண்ட் ஸ்பா என்ற சம்பக் குரூப் ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மாதம் ரூ.1130 டாலர் சம்பளம். அதாவது இந்தியப் பணத்தில் 90 ஆயிரம். இந்தப் பணியில் சேர என்னைத் தனியே அனுப்ப வேண்டுமே என்று வீட்டில் யோசித்தார்கள். டெய்லராக இருக்கும் எங்களது பெரியப்பா வேலாயுதம்தான் எங்களுக்கு முக்கியமான சூழ்நிலைகளில் ஆலோசனை கூறி எங்களை வழிநடத்துவார். அவர்தான், மாலத் தீவுகளில் வேலைக்குப் போகலாம். வந்த வேலையை விட்டுவிடக்கூடாது என்று சொன்னார். அதையடுத்து, கடந்த நான்கு மாத காலமாக அங்கு பணி புரிந்து வருகிறேன். எனது வேலைத் திறமையைப் பார்த்து, எனக்கு சிங்கப்பூரிலோ அல்லது கனடாவிலோ அவர்களது ஹோட்டலில் விரைவில் வேலைக்கு அமர்த்துவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் வழியில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கில வழியில் படிக்க தடுமாறிய எனக்கு தற்போது ஆங்கிலம், ஹிந்தி, மலேசியன், சிங்களம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசத் தெரியும் என்கிறார் திவ்யா.

“நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்காக பள்ளிப் படிப்பை முடித்ததோடு படிப்பதைவிட்டு விட்டு கோவையில் மெஷின் ஆபரேட்டர்களாக வேலைபார்த்த எனது தம்பிகள் சக்தி, மணிகண்டன் இருவரும் தற்போது கோவையில் பிகாம் வகுப்பில் படிக்கச் சேர்ந்துள்ளனர். அம்மாவைக் கவனித்துக் கொள்வதுடன், தம்பிகளைப் படிக்க வைக்கவும் செய்கிறேன். எதிர்காலத்தில் முதியோர்களுக்காகவும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும். அதற்காக ஃபவுண்டேஷன் ஒன்றை நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம்” என்கிறார் திவ்யா.

Share the Article

Read in : English

Exit mobile version