Read in : English
ஊறுகாய் என்றவுடனே நாவில் நீருறும். இந்திய சமையலில். சாப்பிடும் உணவின் சுவையைக் கூட்டவும் ஊறுகாய் பெரிதும் உதவுகிறது. ஒரு துண்டு ஊறுகாய் இல்லாமல் இந்திய உணவு எதுவும் முற்றுப்பெறுவதில்லை. வடக்கோ, தெற்கோ, ஒவ்வொரு இந்திய வீட்டிலும் தனித்துவமான ஊறுகாய்கள் இருக்கின்றன. ஊறுவிளைவிக்கும் உப்பை அதிகமாகக் கொண்டிருக்கிறது ஊறுகாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஊறுகாய் தரும் ஆரோக்கியமான பலன்கள் நிறையவே உண்டு.
ஊறுகாயின் ஆங்கில வார்த்தை ‘பிக்கிள்,’ ’பிரைய்ன்’ (உப்புத்தண்ணீர்) என்று பொருள்படும் டச்சு சொல்லான ‘பெக்கெள்’ என்ற வேரிலிருந்து வந்தது. உணவின் சுவையை இரட்டிப்பாக்கும் ஊறுகாய் நாவுக்கேற்ற காரச்சுவையைத் தருகிறது. பழத்தில் இருக்கும் அமிலம், உப்பு மற்றும் சுவையூட்டும் அம்சங்கள் ஆகியவற்றின் ஒன்றுபட்ட செயற்பாட்டின்மூலம் ஒரு காரத்தன்மையை உருவாக்கி உணவை மேலும் சுவையாக்குகிறது ஊறுகாய்.
இந்திய உணவுமுறையில் ஊறுகாயின் பங்கு மிகவும் அதிகமானது. நீண்டகாலம் பத்திரப்படுத்தி வைத்துப் பயன்படுத்தமுடியும் நீண்ட நெடும்பயணங்களின்போதும் இது உதவியாக இருக்கிறது.
இந்தியாவில் ஊறுகாய் போட பயன்படும் பொருட்களாக மாங்காய், எலுமிச்சை, கத்தரிக்காய், மிளகாய் (மேலும் பன்றி இறைச்சி, இறால், மீன்) ஆகியவை இருக்கின்றன. ஜெர்மனியில் நுண்மையாக வெட்டப்பட்டு அமிலத்தால் நொதிக்கப்பட்ட முட்டைகோஸ் அல்லது புளித்த ஊறுகாயான முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது, தென்கொரியாவில் முட்டைக்கோஸ், முள்ளங்கி, மற்றும் பிற காய்கறிகளால் ‘கிம்கி’ என்னும் ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. மொரொக்காவில் பதப்படுத்தப்பட்ட எலுமிச்சைகள் தயாரிக்கப்படுகின்றன. வட ஐரோப்பிய நாடுகளில் ‘ஹெர்ரிங்’ மீன் ஊறுகாய் தயாரிக்கும் ஒரு நீண்ட மரபு இருக்கிறது; அது ஐரோப்பாவில் சுவையான உணவாகக் கருதப்படுகிறது.
மேலைநாடுகள் போலல்லாது, இந்திய உணவுச்சுவை எப்போதும் காரத்தன்மையுடன் இருக்கிறது. ஊறுகாயின் தயாரிப்பில் சேர்க்கப்படும் உப்பு எரிச்சல் தன்மையை நீக்கிவிட்டு கார நறுமணத்தை அதிகமாக்குவதால் இந்திய உணவுப்பட்டியலில் உப்பு என்பது ஒரு வில்லனாகவே பார்க்கப்படுகிறது. ஊறுகாய் தயாரிப்பு முறை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. செரிமானத்திற்கு உதவும் மிளகை விட்டுவிட்டு குடலுக்கு எரிச்சல் தரும் மிளகாய்த்தூள் ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. காரமான கறிகளும், உப்புசேர்ந்த ஊறுகாய்களும், துரித உணவுகளும் ஒருவர் உண்ணும் உணவில் சோடியத்தின் அளவை அதிகமாக்கிவிடும்.
இந்திய உணவுமுறையில் ஊறுகாயின் பங்கு மிகவும் அதிகமானது. நீண்டகாலம் பத்திரப்படுத்தி வைத்துப் பயன்படுத்தமுடியும் என்பதால் ஊறுகாய் என்னும் ஆதிகால உணவு ரொட்டிக்கும், சோறுக்கும் பக்கவாட்டுச்சுவை உணவாகச் செயல்படுகிறது. நீண்ட நெடும்பயணங்களின்போதும் இது உதவியாக இருக்கிறது.
ஊறுகாய் என்னும் பொதுப்பெயர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களைப் பெற்றிருக்கிறது. வெள்ளரிக்காய் ஊறுகாய், காலிஃப்ளவர் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் என்று பல பெயர்கள் உண்டு. ”வீட்டு ஊறுகாய்’ உணவு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமானது. காலங்காலமாக நடப்பில் இருந்த முறையை மீறி இப்போதெல்லாம் வணிக நோக்கத்திற்காக காடி பயன்படுத்தப்படுகிறது. சோடியம் பென்ஜோயேட் போன்ற கெடாமல் காக்கும் ரசாயனங்கள்தான் இப்போதைய ஊறுகாய்களில் இருக்கின்றன. இதனால் ஊறுகாயின் ஆயுள் நீடிக்கிறது.
உணவில் போதுமான ஈரம் இருக்கும்போது, ஊறுகாயின் உப்புச்சுவையை உண்டாக்க உலர் உப்பு பயன்படுத்தலாம். காய்கறிகளை, பழங்களை, இறைச்சியை அதிக அளவிலான உப்போடும், எண்ணெயோடும் அல்லது காடியோடும் நொதிக்கவைத்து ஊறுகாய்களை தயாரிக்கலாம். மற்ற வாசனைத் திரவியங்களையும் சுவைக்காகச் சேர்க்கலாம். ஊறவைக்கும் நியதி உணவின் இழையோட்டத்திலும், சுவையிலும் மாறுதலை ஏற்படுத்துகிறது.
ஊறுகாய் போடும் வழிமுறைகள் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வித்தியாசப்படுகின்றன. குஜராத்தின் இனிப்பான சுண்டா மாங்காய் ஊறுகாய்க்கும், ஆந்திராவின் சூடான ஆவக்காய் ஊறுகாய்க்கும் ஒற்றுமை இல்லை. இவ்வளவுக்கும் இரண்டுமே ஒரே காயிலிருந்துதான் செய்யப்படுகின்றன.

(Photo Credit: Indian Pickles by silkrute .com- Flickr)
ஊறுகாய் தயாரிப்பு முறையில் (காற்றில்லாமல் நொதித்தல்) காய்கள் அல்லது பழங்கள் காயவைக்கப்பட்டு, காற்றுப்புகா ஜாடிகளில் உப்பு சேர்த்து வைக்கப்படுகின்றன. பின்பு வெயிலில் வைக்கப்படுகின்றன. பழங்களில் இருக்கும் உப்பைத் தாங்கும் பாக்டீரியாக்கள் பழங்களின் அல்லது காய்களின் இனிப்புச்சத்தை உறிஞ்சி, கரிமில வாயு, அசிடிக் அமிலம், லாக்டிக் அமிலம் ஆகியவற்றை உருவாக்குகின்றன. லாக்டிக் அமிலம்தான் தயிருக்குப் புளிப்பையும், அமிலத்தன்மையையும் தருகிறது. மரபுரீதியிலான ஊறுகாய் தயாரிப்பு முறையில், காய்களும் பழங்களும் துண்டுத் துண்டாக்கப்பட்டு உப்போடு கலக்கப்படுகின்றன. அவற்றின் ஈரத்தன்மையைக் குறைக்க அவை உப்புநீரில் இடபட்டு பின்புதான் காடிக்கு மாற்றப்படுகின்றன.
இடையில் உருவாகும் அமிலம் உணவைக் கெடாமல் பார்த்துக்கொள்கிறது. ஊறுகாயை நாற்றமடிக்கச் செய்யக்கூடிய நோய்தரும் பாக்டீரியாக்களை அந்த அமிலம் கொன்றுவிடுகிறது. நேரடியான சூரிய வெளிச்சம் அல்லது போதுமான சுற்றுப்புற வெளிச்சம் நொதிக்க வைக்கும் பாக்டீரியாக்களுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகிறது. இதற்கு 15 நாட்களிலிருந்து ஒரு மாதம்வரை தேவைப்படலாம்.
ஈரம் ஊறுகாய்க்கு பரம விரோதி. பாட்டிலில் ஊறுகாய்களை அடைக்கும்போது லேசான ஈரம் இருந்தால்கூட பூஞ்சை உருவாகி ஊறுகாய் கெட்டுப்போய்விடும்.
ஊறுகாய் பல ஆண்டுகள் கெடாமல் புதுசாக இருப்பதற்குச் சில எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மிகவும் முக்கியமானது, ஈரம் ஊறுகாய்க்கு பரம விரோதி. பாட்டிலில் ஊறுகாய்களை அடைக்கும்போது லேசான ஈரம் இருந்தால்கூட பூஞ்சை உருவாகி ஊறுகாய் கெட்டுப்போய்விடும்.
அதனால்தான் உப்பு கலக்கும் முன்பு காய்களும் பழங்களும் வெயிலில் காயவைக்கப்படுகின்றன. இதற்காகவே பெரும்பாலான இந்திய ஊறுகாய்கள் கோடைகாலத்தில் தயாரிக்கப்படுகின்றன. அப்போதுதான் ஈரப்பதம் குறைவாகவும், சூரியவெளிச்சம் நிறைவாகவும் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட, எதிர்வினையற்ற ஜாடிகள், உலர்ந்த பாத்திரங்கள், நல்ல தரமான பழங்கள், அளவான சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் எல்லாம் முக்கியம், ஒரு நல்ல, சுவையான, நீண்டநாளுக்குப் பயன்படக்கூடிய ஊறுகாய் தயாரிப்பதற்கு.
இந்தியாவில், ஊறுகாய் தயாரிப்பதற்கு பிரபலமான பொருள் எண்ணெய்தான். வட இந்தியாவில் கடுகு எண்ணெய் பயன்படுகிறது; தென்னிந்தியாவில் நல்லெண்ணெய்தான். எண்ணெய் ஊறுகாயின் ஆயுளை நீடிக்கிறது; அதைக் கெடாமல் வைத்துக்கொள்கிறது. கடுகு எண்ணெய், நல்லெண்ணெய்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஊறுகாய் தயாரிக்க உதவும் மூலிகைகளும், வாசனைத் திரவியங்களும் வெறும் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை. அவற்றில் இருக்கும் பாக்டீரியாவுக்கு எதிரான குணாம்சங்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன.
நாள் செல்ல செல்ல, காய்கறிகள் ஈரப்பதத்தை முற்றிலும் விட்டு, சுருங்கி, உப்பையும், வாசனைத் திரவியங்களையும் உள்ளிழுத்து முடிவில் ஊறுகாயாக மாறி சுவையூட்டுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு காய்கள் நீண்ட நேரம் ஊற வைக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவை மென்மையாகவும் சுவையாகவும் மாறும். இறுதியில் ஊறுகாயின்மேல் சூடுபடுத்திய எண்ணெய் தெளிக்கப்படுகிறது (வெப்பநிலை மாற்றத்தோடு அல்லது மாற்றமில்லாமல்). எண்ணெயைச் சூடுபடுத்துவதைத் தவிர சமையல் என்று பெரிதாக ஒன்றுமில்லை. ஊறுகாய் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சீரகம், பச்சை ஏலக்காய் குளிரூட்டக்கூடியவை; கிராம்பு, இலவங்கப்பட்டை கதகதப்பைத் தருபவை; இஞ்சி ஜலதோஷத்திற்கு நல்லது; பூண்டு ரத்த ஓட்ட நோய்களுக்கு நல்லது.
உஷா பிரபாகரன் எழுதிய ’ஊறுகாய் டைஜஸ்ட்’ ஊறுகாய் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். இந்தியா முழுக்க தயாரிக்கப்படும் 1,000-க்கும் மேலான ஊறுகாய்கள் பற்றிய வழிமுறைகள் அடங்கிய புத்தகம் அது.
பொதுவாக ஊறுகாயில் ’பிஎச் ஃபாக்டர்’ (உப்பு-அமிலத்தன்மையை அளக்கும் குறியீடு) 4.6-க்கும் குறைவாக இருக்கும். அதாவது நடுத்தரமான அளவிலிருந்து உயர்நிலை வரையிலான அமிலத்தன்மை அதில் இருக்கிறது என்று அர்த்தம். அது பெரும்பாலான பாக்டீரியாக்களைக் கொன்றுவிடுகிறது. இயல்பிலே அமிலத்தன்மை கொண்ட மாங்காய், எலுமிச்சை ஆகியவற்றில் தயாரிக்கப்படும் ஊறுகாய்களுக்கு காடி அல்லது தயிர் போன்ற புளிப்புஊக்கிகள் தேவைப்படுவதில்லை. உப்புச்சத்துமிக்க காய்கள், மாமிசம், மீன் ஆகியவற்றிற்கு ஓரளவு அமிலத்தன்மை தேவைப்படுகிறது. அதற்காக அவற்றோடு மாங்காய்த்தூள் (அம்சூர்), காடி, எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகின்றன.
இந்தியாவில் கிடைக்கும் ஊறுகாய் வகைகள் எண்ணற்றவை என்பதால் அவற்றை பட்டியலிட்டு வகைப்படுத்த முடியாது. வேண்டுமென்றால் ஊறுகாய் தயாரிப்புக்குப் பயன்படும் புளிப்புப் பொருட்களின் அடிப்படையில் ஊறுகாய்களை வகைப்படுத்தலாம். இந்தியாவில் பிராந்திய சமையல் முறைகளில் பிராந்தியங்களில் கிடைக்கும் புளிப்புப்பொருட்களே அதிக தாக்கம் கொண்டவை.
உதாரணமாக, அம்சூர் வட இந்திய சமையலில் புகழ்பெற்றது. காடி கோவாவிலும், புளி தென்னிந்தியாவிலும் பிரபலமானவை. இவையெல்லாம் ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் ஊறுகாய்ச் சுவை பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடுகிறது.
சில தென்னிந்திய ஊறுகாய்களில் தயிர் அல்லது மோரும் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் இது பொதுவான வழக்கம் அல்ல. மருத்துவ குணங்கள் கொண்ட நன்னாரிச் செடி (தமிழ்நாட்டில் மஹனி என்று அழைக்கப்படுகிறது) சிலநேரங்களில் மோரில் போட்டு பாதுகாக்கப்படுகிறது.
சரியான நிலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டால், பெரும்பாலான ஊறுகாய்கள் பல ஆண்டுகள் தாங்கும். என்றாலும், சில ஊறுகாய்கள் நாட்பட நாட்படத்தான் சுவையாக இருக்கும். இவற்றில் மிகச்சிறந்தவை பஞ்சாப் ஊறுகாய். முழுக்க எலுமிச்சையால் தயாரிக்கப்படுவது. ‘கால நிம்பு கா அச்சார்’ அல்லது ’கால காக்ஜி நிம்பு’ என்று இது அழைக்கப்படுகிறது. இதைத் தயாரிக்க எண்ணெய் தேவையில்லை. நிறைய சூரியவெளிச்சமே போதும்.
ஊறுகாயும் தொக்கும் ஒரே அர்த்தம் கொண்டவை போலத் தெரிகிறது; அவை சுவையூட்டிகளாகப் பயன்படுகின்றன. என்றாலும் அவற்றின் தயாரிப்பு முறைகள் வெவ்வேறானவை. தொக்கு தயாரிக்க நிறைய பொறித்தல் வேலை இருக்கிறது; பொதுவாக அது புதினா, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் சேர்க்கப்படுகிறது; அவை பொறிக்கப்பட்டு சுருங்கி மிளகாய்களும், புளியும் சேர்க்கப்பட்டு முற்றிலும் ஈரப்பதத்தை இழந்துவிடுகின்றன.
உப்புக்கரைசலை ஊறுகாய் தயாரிக்க மக்கள் பயன்படுத்துகின்றனர். காடி போன்றவை உப்பிலும் அமிலத்திலும் கலந்து உருவாகின்றன. நொதிக்கப்பட்ட உப்புநீர் அல்லது காடியில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஆனால் சில உப்புநீர் மட்டுமே நொதிக்கப்படுகிறது. நொதிக்கப்பட்ட ஊறுகாய்களில் முழுக்க ’ப்ரோபயோட்டிக்’ என்றழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன; அவை குடல் நலத்திற்கு நல்லது. நோய்களை எதிர்த்து போராடுகின்றன. வெள்ளரிக்காயில் ‘பீட்டா கரோட்டீன்’ என்ற ஆன்டி-ஆக்ஸிடாண்ட் இருக்கிறது; அதை உடல் வைட்டமின் ஏ-யாக மாற்றிவிடுகிறது.
கடைகளில் ஊறுகாய் வாங்கும்போது அதிலிருக்கும் ஊட்டச்சத்து பட்டியலை படித்துப் பார்ப்பது நல்லது. குறைவான சோடியம் கொண்ட ஊறுகாய்கள் சாப்பிடுவது பாதுகாப்பானாது.
கடைகளில் ஊறுகாய் வாங்கும்போது அதிலிருக்கும் ஊட்டச்சத்து பட்டியலை படித்துப் பார்ப்பது நல்லது.
1. நொதிக்கப்பட்ட ஊறுகாய்கள் மட்டுமே (காடிக்கலப்பில்லாத ஊறுகாய்கள்) ‘ப்ரோபயோட்டிக்’ பலன்களைத் தரும். ஈஸ்ட் தொற்றுகளின் அபாயம் இருக்காது; குடல்களின் ஆரோக்கியத்திற்கு அவை உதவும்.
2. காடி (அசிட்டிக் அமிலம்) சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
3. குறைவான சோடியம் கொண்ட உணவுகள் எல்லோருக்கும் நல்லது. குறைவான சோடியம் கொண்ட ஊறுகாய்கள் சாப்பிடுவது பாதுகாப்பானாது.
ஊறுகாய்களில் பல நன்மைகள் உண்டு. அவற்றில் புத்தம் புதிய காய்களும் பழங்களும் உள்ளடக்கமாக இருப்பதால், ஆன்டி-ஆக்ஸிடாண்ட்டுகளாக அவை செயல்படுகின்றன. உதாரணமாக, ஸ்வாலோ ரூட் ஊறுகாய்களில் ஆன்டி-ஆக்ஸிடாண்டுகள் அப்படியே இருக்கின்றன. ஆன்டி-ஆக்ஸிடாண்டுகள் என்பவை மூலக்கூறுகள்; உடலுக்குள் புற நுண்ணுயிரிகளின் தாக்குதல் இருக்கிறதோ, இல்லையோ, இந்த மூலக்கூறுகள் ஆக்ஸிடாண்டுகளின் நிலையை அப்படியே பாதுகாப்பாக வைத்து மூப்படைவதின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
ஊறுகாய்களின் பலத்த சுவையும் வாசனையும் சளி சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, உணவின் செரிமானத்திற்கு உதவுகின்றன. மருத்துவக் குணங்களுக்காகவே ஊறுகாய் மதிக்கப்படுகிறது. ஆயுர்வேத நூல்கள் ‘அக்னி பிரதீபக்’ என்று ஊறுகாயை அழைக்கின்றன; உங்கள் உடலில் உள்ள அக்னியை ஊறுகாய் மேம்படுத்துகிறது என்று இதற்கு அர்த்தம். மேலும் வளர்சிதை மாற்றத்திற்கும் ஊறுகாய் உதவுகிறது என்ற அர்த்தத்தில் ஆயுர்வேதம் இப்படிச் சொன்னது. ஊறுகாயை உண்டால் ஏப்பம்வரும்!
ஊறுகாய் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. கனிமங்களும் வைட்டமின்களும் நிறைந்த நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் அதில் இருக்கின்றன. அது எலும்புகளைப் பலப்படுத்தும்; ரத்தச்சோகையைக் குணமாக்கும்; கண்பார்வையைப் பாதுகாக்கும். பல்வேறு நோய்களைத் தடுக்கும் சக்தி ஊறுகாய்க்கு உண்டு. குறிப்பாக கறிவேப்பிலை, வெந்தயம், கொத்தமல்லி, புதினா, போன்ற இலைகளில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்கள் விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் கொண்டவை. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது வழமையான உணவுப்பழக்கத்தில் இருப்பதில்லை; ஊறுகாய் மூலம் நாம் அதைப் பெறமுடியும்.
ஊறுகாய் தயாரிப்பில் மஞ்சளுக்கும் முக்கிய பங்குண்டு. மஞ்சளுக்கு வீக்கம் தடுக்கும் குணம் உண்டு. அது நோய் எதிர்ப்புச்சக்தியைத் தூண்டிவிட்டு பல்வேறு நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் ஊறுகாய் நல்ல நிவாரணமாகப் பரிந்துரைக்கப்பட்டது என்று சரித்திர ஆசிரியர் டேவிட்சன் குறிப்பிடுகிறார்.
காடியில் செய்யப்படும் ஊறுகாயில் இருக்கும் அசிட்டிக்அமிலம் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்து ஹீமோகுளோபினை மேம்படுத்துகிறது. குறிப்பிட்ட அளவு ஊறுகாய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
ஊறுகாய் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்; ஆனால் அதை குறைவான அளவில் உண்ணவேண்டும். உணவுக்குழாய்ப் புற்றுநோயும், இரைப்பைப் புற்றுநோயும் தாக்கக்கூடிய அபாயமும் உண்டு.
இந்திய சமையலில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன; அதனால் பலமான உணவுக்குப் பின்னர் அதன் பின்விளைவுகளைத் தடுக்க நமக்கு ஒன்று தேவைப்படுகிறது. அதனால்தான் உணவின் ஓரங்கமாக ஊறுகாய் இன்னும் இருக்கிறது. உணவு செரிமானத்திற்கு உதவக்கூடிய குறிப்பிட்ட அளவு ப்ரோபயடோடிக் பாக்டீரியா நமது வயிற்றில் இருக்கிறது. நம் இந்திய ஊறுகாய்கள் அந்தப் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தூண்டிவிட்டு செரிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்றன.

(Photo Credit: Great Indian Mango Pickle By Madhavi Kuram Flickr)
நீங்கள் ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் பிரியர் என்றால் அதுவே உங்களுக்கு விருந்துதான். நெல்லிக்கனியில் உப்புச்சத்து இருக்கிறது; அது செரிமான அமைப்பைச் சுத்திகரித்துப் பலப்படுத்துகிறது. நெல்லிக்காய் ஊறுகாயில் இருக்கும் ஹெபடோபுரடெக்டிவ் குணாம்சங்கள் கல்லீரலைக் காத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
சாப்பிட்டபின் உண்டாகும் பின்விளைவுகளுக்கு ஊறுகாய் ஒரு நல்ல நிவாரணம். சோடியம் காலியானவுடன் ஊறுகாய்தான் அதை நிரப்புகிறது. நீர்ச்சத்தை மீண்டும் உருவாக்கி நீரை உறிஞ்சும் உடல்திறனை ஊறுகாய் மேம்படுத்துகிறது. ஊட்டச்சத்துமிக்க ஒரு விருந்தில் ஊறுகாயும் ஓர் அற்புதமான சேர்க்கைதான். அதன் சுவையை ருசித்த மக்களுக்கு அதன் அருமை தெரியும்.
ஊறுகாய் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்; ஆனால் அதை குறைவான அளவில் உண்ணவேண்டும். உணவுக்குழாய்ப் புற்றுநோயும், இரைப்பைப் புற்றுநோயும் தாக்கக்கூடிய அபாயமும் உண்டு. ஆசிய நாடுகளில் உண்ணப்படும் ஊறுகாய் விஷயத்தில் இது நிச்சயம் உண்மை.
ஊறுகாயில் உப்புச்சத்து அதிகமாகவே இருக்கிறது. அதனால் உயர் ரத்த அழுத்த அபாயமும் இதயநோய் ஆபத்தும் இருக்கின்றன. எண்ணெய் அதிகமான ஊறுகாய் ரத்தத்தில் கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும்.
சர்க்கரை நோய், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அல்லது ஊட்டச்சத்து சமச்சீர்வின்மை கொண்டவர்கள் தங்கள் உணவு வழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் முன்பு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.
Read in : English