Read in : English
சென்னையிலும் தமிழ்நாட்டு நகரங்களிலும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்காத நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு பருவநிலை மாற்றத்தினால் பாதிப்பு வரும் என்று பருவநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கிடையேயான அமைப்பு (ஐபிசிசி) எச்சரித்துள்ளது.
உலகின் சராசரி வெப்பநிலை, தொழில் வளர்ச்சி காலத்துக்கு முந்தைய நிலையுடன் பார்த்தால், 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்து. இதனால் வளர்ச்சியடைந்த நகரங்கள் உள்பட பல பகுதிகள் பாதிப்படையும். அதில் சென்னையும் உள்ளது என்று ஐபிசிசி அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிக்கும் விஞ்]ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எரிசக்தித் துறை, நகர்ப்புற கட்டமைப்பு, கிராமப்புற கட்டமைப்பு ஆகியவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சமூகம் உடனடியாகச் செய்ய வேண்டியது, மனித நடத்தையில் மாற்றங்கள் போன்வறை மேற்கொள்வதற்கு மாநிலத்திற்கு நல்ல கொள்கை தேவைப்படுகிறது என்பதை இந்தச் செய்தி உணர்த்துகிறது. நிலத்தையும் இயற்கையையும் மீட்டுப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் நமது சூழல் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
இந்த மாதம் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளில், அதாவது டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய இடங்களில் சுமாரான மழையோ அல்லது கனமழையோ பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை துறை எச்சரித்துள்ள நேரத்தில், ஐபிசிசியின் எச்சரிக்கையும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2008ஆம் ஆண்டில்தான் தமிழகத்தின் பகுதிகளில் இதுபோன்ற கனமழை மார்ச் மாதம் பெய்தது. வெள்ளம் அல்லது தீவிரமான வானிலை தன்மை போன்றவை பொருளதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஐபிசிசி சுட்டிக்காட்டியுள்ளது.
2050ஆம் ஆண்டில் மிகப் பெரிய வெள்ளத்தினால் இழப்பு அபாயம் ஏற்படும் உலகின் 20 பெரிய கடலோர நகரங்களில் சென்னையும் ஒன்று அது என்பதை தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக வரும் ஆண்டுகளில் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றங்களின் ஒரு பகுதிதான் தமிழ்நாட்டின் கதை. உலகில் வானிலை மாற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆப்ரிக்க நாடுகளைவிட,
தெற்கு, தென் கிழக்கு, கிழக்கு ஆசிய நாடுகளில் சகாராவுக்கு தெற்கில் அமைந்த நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் உணவு உற்பத்தி அமைப்புகளில் ஏற்படும் பாதிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா வளர்ச்சியின் இலக்குகளில் ஒன்றான பட்டினியால் ஏற்படும் அபாயங்களைத் தடுத்தல் என்ற இலக்கை எட்டுவதற்கு தடையாக உள்ளது. இது தெற்கு ஆப்ரிக்காவை நிச்சயம் பாதிக்கும் என்பதையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வட அமெரிக்கா, ஐரோப்பாவில் பெரும்பாலான பகுதிகள், இந்தியாவில் பெரும் பகுதிகள், வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகள், தென் அமெரிக்காவின் தென்பகுதிகள், தெற்கு ஆப்ரிக்காவின் பகுதிகள், மத்திய, வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகள் தீவிர கனமழையால் பாதிக்கப்படும் என்பதையும் ஐபிசிசி சுட்டிக்காட்டியுள்ளது.
பருவநிலை மாற்றத்தினால் வானிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக என்பதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதிலும், 2015இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிட்டங்காங், டாக்கா, மும்பை, கங்கை சமவெளி பிரதேசம், தில்லி லாகூர் எல்லைப் பகுதி போன்றவற்றுடன் மக்கள் இடம் பெயரும் நகரங்களில் சென்னையும் ஒன்று என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தினால், து கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயரும் முக்கிய இடங்களில் ஒன்றாகவும் இந்த நகரங்கள் இருக்கின்றன என்கிறது இந்த அறிக்கை.
தமிழ்நாட்டில் கொள்கை வகுப்பவர்கள் இந்த எச்சரிக்கையை சாதாரணமாக விட்டு விடக்கூடாது. 2050ஆம் ஆண்டில் மிகப் பெரிய வெள்ளத்தினால் இழப்பு அபாயம் ஏற்படும் உலகின் 20 பெரிய கடலோர நகரங்களில் சென்னையும் ஒன்று அது என்பதை தெரிவித்துள்ளது. ஆசியாவிலேயே சென்னை 13வது நகரம்.
சென்னையில் மக்களை மறுகுடியமர்த்தத் திட்டமிட்டுள்ள இடங்களைப் பற்றியும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, இந்த மக்களை அபாயகரமான இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையாக இது இருக்கக்கூடாது என்றும் அது கூறியுள்ளது. இந்த குடியமர்த்துதல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவை. அங்கு வாழ்வாதாரங்களுக்கான வாய்ப்புகள் குறைவு. புதிய ஆபத்துகளை எதிர்கொள்ள வைக்கிறது. இதற்கு விடை, நகரங்களில் வாடகை வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது. இதேபோல, பெங்•களூரில் குடியேறும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பற்ற நிலையில் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடும் போதுமான அளவுக்கு தவிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பருவநிலை மாற்றத்துக்கான வெள்ளை அறிக்கை, நமது மாநிலத்தின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கக் கூடும்.
2035ஆம் ஆண்டில் மும்பையின் மக்கள் தொகை 2,73,43,000. Ðபருவ நிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்தல், வெள்ள அபாயம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து ஏற்பவதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச் சவாலைச் சமாளிக்கும் வகையில் சூழலைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது கவலையளிக்கும் விஷயமாகும். உள்கட்டமைப்புகளில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடும் போதுமான அளவுக்கு தவிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பருவநிலை மாற்றத்துக்கான வெள்ளை அறிக்கை, நமது மாநிலத்தின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கக் கூடும்.
பல்வேறு இயற்கை பாதிப்புகளால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 293 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பைச் சந்திப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. புயல், வெள்ளம், வறட்சி, நில நடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு காரணம். 2015இல் ஏற்பட்டதைப் போல, 2021இல் சென்னைப் பெருவெள்ளம் மீண்டும் ஏற்பட்டது. இதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் திமுக அரசு விரைவாக கவனம் செலுத்த வேண்டும்.
உலகில் 5 மில்லியன் மக்கள் தொகையிலிருந்து 10 மில்லியன் மக்கள் தொகை வரை உள்ள இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றான சென்னையில், பேரிடர்களினால் சாவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
1.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிப்பு குறித்த ஐபிசிசியின் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். மனிதர்களின் ஆரோக்கியம், நலம், சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் நமது சட்டங்களையும் விதிமுறைகலையும் பரிசீலனை செய்து அனைத்துக் கொள்கையும் மறுசீரமைக்கும் அரசியல் உறுதி இருக்கிறதா?
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் எரிசக்தித் துறை, நகர்ப்புற கட்டமைப்பு, கிராமப்புற கட்டமைப்பு ஆகியவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதுதான், ஒவ்வொரு வீடுகளிலும் அலுவலகங்களிலும் சூரியஒளி மின்சக்தி அமைப்புகளை ஏற்படுத்துதல், கழிவுகளை மறுசுழற்சி செய்தல், நகர்ப்புற மேம்பாடு, பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டு அளவைக் குறைத்தல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகள் தேவை.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னைக்கு ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலான வளர்ச்சிக்கு தடையாக உள்ளவற்றைக் களைய வேண்டிய பொறுப்பு திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினின் கையில் உள்ளது.
Read in : English