Site icon இன்மதி

அபூர்வ சாதனை: கிரிக்கெட்டில் தமிழ்நாடு இரட்டையர் சதம் அடித்து சாதனை!

குவாஹாத்தியில் அபரஜித் தன் சகோதரர் பிரமாதப்படுத்தட்டும் என்று தன் பங்கை அடக்கிவாசிக்கத் தீர்மானித்துக்கொண்டார். அன்று அபரஜித் நிலைத்து நின்று விளையாடினார். நிறைய பந்துக்களை எதிர்கொண்டார். ஆனால் குறைவான ரன்களையே எடுத்தார். அந்தநாள் அபரஜித்தின் நாளைவிட, இந்திரஜித்தின் நாளாகவே அமைந்தது. (Photo: Twitter - TNPL)

Read in : English

கடந்த வாரம் குவாஹாத்தியில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்களான பாபா அபரஜித்தும், பாபா இந்திரஜித்தும் சதங்கள் அடித்தபோது அந்த இரட்டையர்கள் ஒன்றாக விளையாடி ஓர் உச்சத்தை எட்டிப்பிடித்த அபூர்வமான, சரித்திரம்படைத்த சாதனை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அந்நிகழ்வு உலகம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள் கொண்டிருக்கும் உறவின் இயல்பையும் வெளிக்கொண்டு வந்தது.

இரட்டையர்கள் இருவகைப்படுவர்: சகோதரத்துவம் கொண்டவர்கள்; அச்சுஅசல் ஒரேமாதிரியாக இருப்பவர்கள். பின்னவர்கள் தாயின் கருப்பையில் ஓரே சினைமுட்டையிலிருந்து பிறப்பவர்கள்; முன்னவர்கள் இருவேறு முட்டைகளிலிருந்து பிறப்பவர்கள். அச்சுஅசல் ஒரேமாதிரியானவர்கள் நிஜமாகவே ஒரேதோற்றம் கொண்டவர்கள்; ஒருவரைப் பார்த்தால் மற்றவரைப் பார்க்க வேண்டாம். அவர்கள் ஒன்றாகவே வளர்வார்கள்; பல குணாம்சங்களில் ஒத்ததன்மை கொண்டிருப்பார்கள். எனினும் சில விஷயங்களில் எதிரும்புதிருமாக இருப்பார்கள்.

சகோதரத்துவ இரட்டையர்கள் சகோதரர்கள் போலவே இருப்பார்கள்; ஒருவர் மூத்தவர்; மற்றொருவர் இளையவர். அவர்கள் ஒரேமாதிரி இருக்கமாட்டார்கள். கூர்ந்து பார்த்தால் அவர்களின் பௌதீக வித்தியாசங்கள் எளிதில் புலனாகும். ஒருவர் வேகமாக வளர்வார்; மற்றவர் அதற்கு ஈடுகொடுத்து வளர்வார்.

அபரஜித்தும், இந்திரஜித்தும் சகோதரத்துவ இரட்டையர்கள். இந்திரஜித் 12 நிமிடங்களுக்கு முன்பு பிறந்தவர் என்றாலும் அபரஜித்தான் மூத்தவராகச் செயல்படுகிறார்.

அபரஜித்தும், இந்திரஜித்தும் சகோதரத்துவ இரட்டையர்கள். இந்திரஜித் 12 நிமிடங்களுக்கு முன்பு பிறந்தவர் என்றாலும் அபரஜித்தான் மூத்தவராகச் செயல்படுகிறார். வெகுளித்தனமான கண்கள் கொண்ட இந்திரஜித்தைவிட கொஞ்சம் முதிர்ச்சியாகவும், வயதானவராகவும் தோன்றுகிறார் அபரஜித்.

ஆஃப்ஸ்பின் பவுலராகவும், பெரும்பாலும் பேட்ஸ்மனாகவும் விளங்கும் அபரஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட் அணியிலும் விளையாடியிருக்கிறார். வயது 27-தான் என்றாலும், பெரிய அணிகளில் 10 ஆண்டுகள் விளையாடி அனுபவம் பெற்ற ஜாம்பவான். பெரிய லீக்கில் அவர் நுழைந்தது 19-வயதிற்குக்கீழான பிரிவின் வழியாகத்தான். அது அந்த இரட்டையர்கள் நன்றாக வளர்க்கப்பட்ட வளர்ப்புமுறையின் அறிகுறி. பெரிய லீக்கிற்குள் செல்லும் மூன்று வழிகள் பற்றி முந்தைய கட்டுரையில் நாம் விவாதித்தோம். ஜூனியர் கிரிக்கெட், டின்சிஏ லீக், டிஎன்பிஎல். முதல் இரண்டு பிரிவுகளுக்கும் நிறைய பணவசதியும், குடும்பப் பின்னணியும், குடும்ப ஆதரவும் தேவை. டிஎன்பிஎல் அணியில் சின்ன ஊர்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வருகின்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குத் தங்குதடையற்ற வாய்ப்பை அனுமதிக்கிறது.

பாபா சகோதர்கள் ஜூனியர் பாதையில் வந்தவர்கள்; குடும்ப ஆதரவும் இருந்தது. அவர்கள் தந்தை ஆர்.என். பாபா, என். சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்தபோது, இந்திய கிரிக்கெட் குழுவின் ஆதரவு ஊழியர்களில் ஒருவராக பணிசெய்தார்; பின்பு சென்னை கிங்ஸ் அணிக்காக பணிபுரிந்தார். அம்பத்தூரில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருக்கும் ஒரு மருத்துவராக இருந்தபோதும், ஆர்என் பாபா இந்திய குழுவிற்கான ஊடகத் தொடர்புகளைக் கவனித்துக்கொண்டார். ஆதலால் பாபா சகோதரர்கள் கிரிக்கெட் உலகத்தில் அடியெடுத்து வைத்தார்கள்; இயல்பாகவே அவர்கள் அந்த விளையாட்டைத் தொழில்முறையில் தேர்ந்தெடுத்துப் பின்பற்றுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர்களுக்கு நான்கு வயதிருக்கும்போது, அவர்களின் தந்தை அவர்களை ஒரு பயிற்சியாளரிடம் சேர்த்துவிட்டார்.

ஆனால் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்திரஜித்தான். தமிழ்நாட்டில் 16 வயதிற்குக் கீழான அணியிலும், 19 வயதிற்குக்கீழான அணியிலும் அவர் கேப்டனாக இருந்தவர். அவரது அணி தெற்கு மண்டலப் போட்டிகளில் வென்றது. அபரஜித் அந்த அணியில் இருந்தார்.

அபரஜித் முழுக்க தனது கடின உழைப்பால் முன்னேறி ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக ஆடினார். 2013-14இல் தென்மண்டலப் போட்டி ஒன்றில் அவர் இரட்டைச் சதம் அடித்தார். ஏ ரகப் போட்டிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2012இல் 19 வயதிற்குக் கீழானவர்களுக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடினார்.

டி-20 போட்டியில் அபரஜித்தின் ரன் குவிக்கும் விகிதம் 120; அதுவொன்றும் அவ்வளவு உயர்ந்ததல்ல. ஆனாலும் அவர் சமச்சீராகவே ஆடினார்.

இந்திரஜித்தின் தொழில் வாழ்க்கை படுவேகமாக முன்னேறியதல்ல. முதல் தரமான கிரிக்கெட்டில் அவரது அறிமுகம் இரண்டு ஆண்டுகள் கழித்தே நிகழ்ந்தது. அவர் பெரும்பாலும் தமிழ்நாட்டிலே ஆடினார். இந்திய அளவு என்று சொல்லப்படும் ஏ ரக பட்டியலில் அவர் 2015இதான் அடியெடுத்து வைத்தார். டி20 போட்டியில் அவரது ரன் குவிக்கும் விகிதம் 100.

இந்திரஜித் ஓர் உயர்நிலை பேட்ஸ்மன். அபரஜித் அப்படியல்ல. அவர் நடுத்தரமானவர்; சூழலுக்கேற்ப எப்படியும் ஆடுபவர். இந்திரஜித் தன்னை லெக் பிரேக் பௌலராகவே நினைத்துக்கொள்கிறார். பேட்ஸ்மனின் கவனத்தைச் சிதறடித்து எதிர்பாராத திசையில் பந்தைச் சுழற்றி வீசும் திறன் அவரது ஆயுதம்.

இந்திரஜித் ஓர் உயர்நிலை பேட்ஸ்மன். அபரஜித் அப்படியல்ல. அவர் நடுத்தரமானவர்; சூழலுக்கேற்ப எப்படியும் ஆடுபவர். இந்திரஜித் தன்னை லெக் பிரேக் பௌலராகவே நினைத்துக்கொள்கிறார். பேட்ஸ்மனின் கவனத்தைச் சிதறடித்து எதிர்பாராத திசையில் பந்தைச் சுழற்றி வீசும் திறன் அவரது ஆயுதம். இந்திரஜித் ஏ ரக வரிசையில் கீழ்நிலையிலிருக்கும் ஓர் ’இந்திய நீல’ அல்லது ’பச்சை’ ஆட்டக்காரர்.

அபரஜித்தின் பந்துவீச்சைப் பற்றிய புள்ளி விவரங்கள் சிறப்பானவையும்கூட. ஆஸ்திரேலியா ஏ- அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் ஐந்துக்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தவர்.

முதல் தர போட்டிகளில் இந்திரஜித் 54 போட்டிகளில் 11 சதங்கள் அடித்திருக்கிறார். அபரஜித் 81 போட்டிகளில் பத்து சதங்கள் மட்டுமே அடித்திருந்தாலும் சமச்சீராகவே ஆடியிருக்கிறார். ஏ ரக போட்டிகளில் அபரஜித் ஏழு சதங்கள் அடிக்க, இந்திரஜித் ஒன்று ,மட்டுமே அடித்திருக்கிறார்.

2017-18இல் நடந்த துலீப் டிராபி போட்டிகளில் மெதுவாக விளையாடி ரன்களை எடுத்தபின்பு, இந்திரஜித் தன்உத்தியை மாற்றிக்கொண்டு தன் ஆற்றலை அதிகரித்துக்கொண்டார். அதற்கு அவரது சகோதரரும் ஆதரவாக இருந்தார். அவர்கள் ஒன்றாக பயிற்சி எடுத்தார்கள். அடிக்கடி ஒன்றாகவே தோன்றினார்கள். முன்பு ஒருதடவை இந்த எழுத்தாளர் அபரஜித்திடம் நேர்காணல் கேட்டு சென்றபோது, தன் சகோதரரையும் கூட்டிவர வேண்டுமென்று வலியுறுத்தினார்.

குவாஹாத்தியில் அபரஜித் தன் சகோதரர் பிரமாதப்படுத்தட்டும் என்று தன் பங்கை அடக்கிவாசிக்கத் தீர்மானித்துக்கொண்டார். அன்று அபரஜித் நிலைத்து நின்று விளையாடினார். நிறைய பந்துக்களை எதிர்கொண்டார். ஆனால் குறைவான ரன்களையே எடுத்தார். குறைவான நேரமே ஆடினார். அவர் இந்திரஜித் பிராகாசிப்பதை அனுமதித்தார். அந்தநாள் அபரஜித்தின் நாளைவிட இந்திரஜித்தின் நாளாகவே அமைந்தது. அபரஜித்தும் அதைத்தான் விரும்பினார்.

அந்த இரட்டையர்கள் முதல் நாளிலேயே ஒன்றாக 50 (2) என்ற ஸ்கோரை எடுத்தார்கள். இந்திரஜித்தான் அதிக போர்க்குணத்தோடு ஆடினார். அடிக்கடி ’பிட்ச்’சிலிருந்து முன்னே பாய்ந்து சத்தீஸ்கர் அணியிலிருந்த பல இடதுகைச் சுழல் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். அவரது மட்டையடிகள், ‘கவர் ஏரியாவை’ நோக்கியும், ‘மூன்றாவது மனிதனையும்’ நோக்கியும் பாய்ந்தன. கேன் வில்லியம்சன்னும், ஏன் திராவிட்டும்கூட அடிக்கடி பயன்படுத்திய உத்திதான் அது. 141 பந்துகளில் இந்திரஜித் எடுத்த 127 ரன்களில் 84 ரன்கள் 21 ‘பவுண்டரிகளிலிருந்து குவித்தவை. போட்டி முடிந்ததும் தமிழ்நாட்டின் ஸ்கோர் 308 (4). அபரஜித் 197 பந்துகளில் எடுத்த சதத்தில் 8 ‘பவுண்டரிகளும்,’ இரண்டு சிக்ஸர்களும் குவித்து வெற்றிக்கொடி நாட்டினார். அந்த இரட்டையர்களின் கூட்டு முயற்சி 206 ரன்களைக் குவிக்க உதவியது.

அன்று ‘இளைய’ சகோதரர்தான் பெரிய நட்சத்திரமாக ஒளிர்ந்தார். ’மூத்தவர்’ அவருக்கு ஆதரவாகவும் ஆகப்பெரும் பலமாகவும் இருந்தார்.

Share the Article

Read in : English

Exit mobile version