Site icon இன்மதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்களா?

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிகெட் அணியின் முக்கிய முகங்கள்

Read in : English

கால்பந்து கிளப்பைப்போல, கிரிக்கெட்டுக்கான ஒரு தொழிற்முறை கிளப்பாக 2008இ-ல் ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) அறிமுகப்படுத்தப்பட்டபோது, உள்ளூர் ஆட்டக்காரர்கள் இல்லாத ஒரு குழுவிற்கு எப்படி ஆர்வலர்கள் விசுவாசம்  கட்டமைக்கப்படும் என்றவொரு கேள்வி எழுந்தது. மற்ற மாநகரங்களில் இருந்த குழுக்களைவிட மிக அதிகமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஸ்கே) தமிழ்நாட்டில் கிரிக்கெட் ரசிகர்களின் விசுவாசத்தைச் சம்பாதித்துக்கொண்டது அதற்குப் பெருமைதான். எம் எஸ் தோனி தமிழ்நாட்டில் ‘தல’ (பாஸ்) என்றும், சுரேஷ் ரெய்னா ’சின்ன தல’ (ஜீனியர் பாஸ்) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்  உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. முன்னாள் இந்தியா கேப்டனும், ஆஃப் ஸ்பின்னரும், பின்னாளில் அம்பயருமான எஸ். வெங்கடராகவன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனதைச் சேர்ந்தவர்தான்.

இந்தியா சிமெண்ட்ஸ் அணி, முதல் பிரிவு லீக் ஆணியாகப் பெயர் பெற்றது.  எல். சிவராமகிருஷ்ணன், வி.பி. சந்திரசேகர் போன்ற நட்சத்திரங்களைக் கொண்டிருந்ததால் அது பெருமை பெற்றது. ராகுல் திராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்காக குருநானக் கல்லூரி மைதானத்தில் விளையாடியிருக்கிறார்.

கொல்கத்தாவில் சௌரவ் கங்குலி, மும்பையில் சச்சின் டெண்டுல்கர், ஹைதராபாத்தில் வி.வி.எஸ். லட்சுமண் என்று பல நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தனர். அந்த அளவுக்கு ஆக உயர்ந்த அந்தஸ்தில் தமிழ்நாட்டின் சார்பாக சென்னையில் யாருமில்லை.

இந்தியா டி-20 உலகக்கோப்பையை வென்றவுடன் இந்தியன் பிரீமியர் லீக் என்னும் ஐபிஎல் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநகர அணியிலும் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் இருந்தார். கொல்கத்தாவில் சௌரவ் கங்குலி, மும்பையில் சச்சின் டெண்டுல்கர், ஹைதராபாத்தில் வி.வி.எஸ். லட்சுமண் என்று பல நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தனர். அந்த அளவுக்கு ஆக உயர்ந்த அந்தஸ்தில் தமிழ்நாட்டின் சார்பாக சென்னையில் யாருமில்லை அப்போது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதிநிதியாக ஷேவாக்கை நிறுத்தலாம் என்ற யோசனை இருந்தபோது, எம்.எஸ். தோனியைக் கொண்டுவரலாம் என்று வி.பி. சந்திரசேகர், இந்தியா சிமெண்ட்ஸ்  என். சீனிவாசனிடம் பேசிப் புரியவைத்தார். அதற்குச் சொல்லப்பட்ட காரணம், தோனி திறமைகளின் மொத்தக் கூட்டமைப்பு என்பதுதான். சிக்கலான தருணங்களில் அவரிடமிருக்கும் அசராத அமைதியும் வசீகரமும் தொலைக்காட்சித் திரைகளில் முழுமையாகக் காட்டப்படும்; அந்த அளவுக்கு அவர் பிரமாதமான விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆவார். பின்பு தோனியால் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும்பணத்தை அள்ளியது.

முதல் பருவத்தில், ஷேன் வார்னைக் கேப்டனாகக் கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிச்சுற்றில் தோற்றது. அப்போது சிஎஸ்கே குழுவில் உள்நாட்டு ஆட்டக்காரர்கள் பலர் இருந்தனர். அபிநவ் முகுந்த், வித்யுத் சிவராமகிருஷ்ணன், கே ஸ்ரீகாந்தின் மகன் அநிருத்தா ஸ்ரீகாந்த், எல், பாலாஜி, மற்றும் ஆர். அஸ்வின் ஆகியோர் அதில் இருந்தனர். மேலும் செல்வம் சுரேஷ்குமார், அருண் கார்த்திக், பத்ரிநாத் ஆகியோரும் இருந்தனர். உள்நாட்டு மற்றும் உலகக் கிரிக்கெட்டில் பாலாஜியின்  நிலை சரிந்திருந்தது. அதன் காரணம் அவர் காயம்பட்டிருந்ததுதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தேர்வு பெற்றதன் மூலம் கிரிக்கெட்டில் திரும்ப வருவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அடுத்த ஆண்டு, இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக தென் ஆப்ரிக்காவிற்கு நகர்ந்தது ஐபிஎல். அதில் தமிழ்நாட்டிலிருந்து அஸ்வின், முரளி விஜய், பாலாஜி ஆகியோர் பிரமாதமாக ஜொலித்தனர். அவர்கள் இந்தியா அணியில் சேருவதற்கு அது வழிவகுத்தது. ஆனால் வித்யுத், அநிருத்தா, மற்றும் அருண் கார்த்திக் ஆகியோருக்கு அப்படி நடக்கவில்லை. அஸ்வினுக்கு இதுவோர் முக்கியமான முன்னேற்றம்.

2010இ-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முரளி விஜய், அநிருத்தா, மற்றும் சந்திரசேகர் கணபதி ஆகியோருடன் ஐபிஎல்லில் வெற்றி பெற்றபோது பாலாஜியும் அணியில் இருந்தார். அப்போது 34 வயதான ஹேமாங் பதானி ஐபிஎல்லில் நுழைய வாய்ப்பு கிட்டியது. அவர் அப்போது உயர்நிலை கிரிக்கெட்டிலிருந்து வெளியேறியிருந்தார். பாலாஜி, பத்ரிநாத், அஸ்வின், முரளி விஜய் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அதை நன்றாகப் பயன்படுத்தி தங்கள் திறமையை நிரூபித்தார்கள். மற்றவர்கள் அப்படிச் செய்யவில்லை. 2010-11-இல், அனுபவமிக்க மாநில விளையாட்டு வீரரான பத்ரிநாத் இந்தியா அணியில் நுழைந்தார். அதற்குக் காரணம் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அனுபவம்தான் என்று சொல்லப்பட்டது.

தோனியுடன் விளையாடியது பெரிதும் உதவியிருக்கச் சாத்தியம் உண்டு. ஏனென்றால் அவர்தானே இந்திய கேப்டன். அதைப்போல, தோனியின் நம்பிக்கையைப் பெற்றதால், அஸ்வின் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவ்வளவுக்கும் அங்கே ஹர்பஜன் சிங்கும் இருந்தார். ஒருவேளை அஸ்வின் வேறொரு அணிக்காக விளையாடி இருந்தால், தோனியால் கவனிக்கப்பட்டிருக்கமாட்டார்;  தேர்வாகி இருக்கவும் மாட்டார்.

ஷேவாக்கும் கௌதம் கம்பீரும் விளையாடாதபோது முரளி விஜய்க்கு தேசிய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணியில் முதன் முதலில் 2003-04-இல் எல். பாலாஜி சேர்ந்தார். ஆனால் பின்பு காயம் அடைந்ததால் அவர் வேகம் குறைந்து தொய்வானர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் அவருக்கு மீண்டும் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. 2012ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பைதான் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சம். பின்பு அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு நகர்ந்தார். அங்கே ஓரளவு நன்றாக விளையாடிய அவர், ஓய்வு பெற்றுவிட்டார்.

2011ஆம் ஆண்டு தோனிக்கு ஓர் இரட்டை அதிர்ஷ்ட ஆண்டு.  முதலில் உலகக் கோப்பை; அதன்பின் உடனே சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி. யோ மகேஷ், கணபதி விக்னேஷ், அபினவ் முகுந்த், அநிருத்தா ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த கே.எம். ஆசிஃப்பும் குழுவில் இருந்தார். அந்த ஆண்டு ஐபிஎல்-போட்டிகளில் பத்ரிநாத்தும், முரளி விஜய் ஆகியோர் மிகநன்றாகவே விளையாடினர்.

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி 2012-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது தொடர் வெற்றிக்கான திட்டத்தை முறியடித்தது. முரளி விஜய், பத்ரிநாத், அபிநவ், கணபதி விக்னேஷ், யோ மகேஷ், அஸ்வின், மற்றும் அறியப்படாத கே வாசுதேவ தாஸ் ஆகியோர் அந்த அணியில் இருந்தனர்.

2013ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பிரச்சினையான ஆண்டு. சூதாட்டச் சர்ச்சைக்குள் அதன் உரிமையாளர் மாட்டிக்கொண்டதால் அதன்தாக்கம் நிர்வாகத்தின்மீதும் விழுந்தது.

2013ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பிரச்சினையான ஆண்டு. சூதாட்டச் சர்ச்சைக்குள் அதன் உரிமையாளர் மாட்டிக்கொண்டதால் அதன்தாக்கம் நிர்வாகத்தின்மீதும் விழுந்தது. பாபா அபரஜித் அந்த அணியிலிருந்த ஒரு தமிழ்நாட்டு வீரர். அஸ்வினும், ஆர் கார்த்திகேயனும் அங்கே இருந்தபோது விஜய்சங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தார். முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தாலும் பாலாஜி விலகி கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிக்குச் சென்றார். இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றது. அது மறக்கவேண்டியதோர் ஆண்டு.  ஒரு சிலரின் தொழில் வாழ்க்கையும், பேரும் புகழும் அப்போது சீரழிந்தன.

அடுத்த  ஆண்டு மக்களவைத் தேர்தல்களினால் ஐபிஎல், ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு நகர்ந்தது. அங்கே பெற்ற நல்ல அனுபவத்தினால், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பாரசீக வளைகுடாவிற்குச் சென்றது. ஆனால் 2014ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமான ஆண்டு. அபராஜித், அஸ்வின், விஜய்சங்கர் ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டு  விளையாட்டு வீரர்கள். ஆனால் அவர்களால் ஐக்கிய அரேபிய அமீரகத்தில் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெறவே இல்லை. அதற்கு அடுத்த ஆண்டில், தமிழ்நாட்டிலிருந்து அபராஜித்தும், அஸ்வினும் மட்டுமே இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓர் முக்கிய அம்சம் இதுதான்;  குழுவினர் ஒரேமாதிரியான போக்கைக் கையாண்டு அரையிறுதிச் சுற்றில் தங்களுக்கான இடத்தை உரிமையோடு பெற்றுக்கொள்வார்கள். ஆனால் பெரிய போட்டிகளில் அவர்கள் தடுமாறுவது போலிருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியினர் அரையிறுதிச் சுற்றை அடைவதற்கே சிரமப்படுவார்கள். ஆனால் பெரிய போட்டிக்கான மனநிலையை எப்படியோ அவர்கள் மெருக்கேத்திக்கொண்டு பிரமாதப்படுத்தி விடுவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008, 12, 13 மற்றும் 15 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றுகளில் தோற்றுப்போயிருக்கிறது.

2016 மற்றும் 2017-இல் ஆட்டமுடிவை முன்கூட்டியே ஏற்பாடு செய்தது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளானதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது. அந்தக் குழு 2018இ-ல் மீண்டும் களமிறங்கியது. அந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளைச் சென்னையில் நடத்த முடியவில்லை. ஏனென்றால் காவிரி நதி நீர்ப்பங்கீட்டு பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தோடு மோதிக்கொண்டிருந்ததால் தமிழ்நாட்டில் அப்போது உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உச்சம் தொட்டுக் கொண்டிருந்தன.

ஆனால் 2018, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீள்வருகை ஆண்டு. அமேசான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றி சிங்கங்களின் கர்ச்சனை என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்று தயாரித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மிகவும் சோர்ந்துகிடந்த நேரத்தில், விளையாட்டு வீரர்கள் பலர் வேறு வேறு அணிகளுக்கு இடம்பெயர்ந்த நேரத்தில், தங்களுக்கான ரசிகர்களின் வட்டாரம்  எப்படி மிகப்பெரிதாக வளர்ந்தது என்பதைப் பற்றித்  தோனியே பேசினார். அந்த ஆண்டு அவர்கள் சாதித்த வெற்றி ரசிகர்களுக்கு  ஒரு பெரும் விருந்து. ஆனால் அப்போது அந்த அணியில் இருந்த  தமிழர்கள் முரளி விஜயும், பெரும்பாலும் பதிலியாக அமர்த்தப்பட்ட என். ஜெகதீசனும்தான்.

2019-இல் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மீண்டும் இறுதிச்சுற்றில் தோற்றது. அபகீர்த்திமிக்க தோனியின் ’ரன் அவுட்’ , பின்னர் இந்தியாவின் வாய்ப்புகளுக்கு முடிவுகட்டிய உலகக்கோப்பை ஆட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கு ஒரு முன்னோட்டமானது. அந்த ஆண்டு எங்கோ போயிருந்த முரளி விஜய் மீண்டும் வந்தார். ஜெகதீசன் அங்கேதான் இருந்தார்.

2020ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆகமோசமான ஆண்டு. இளைஞர்களுக்கு போதுமான  வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு உத்வேகம் இல்லையென்று சொல்லி தோனி சர்ச்சையைக் கிளப்பினார். அவர் தமிழ்நாட்டின் ஆட்டக்காரர்களையும் சேர்த்துச் சொன்னதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. கெதார் ஜாதவ் வேகமில்லாமல் பேட் செய்ததால் போட்டியில் தோற்க நேர்ந்தது. அதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மெதுவான ஸ்கோரிங் என்பதற்காக தோனியும் விமர்சனத்துக்கு ஆளானார். அணி நிர்வாகத்திடம் ஏற்பட்ட உரசலால் ரெய்னா அணியைவிட்டு வெளியேறினார். உச்ச அந்தஸ்தைப் பெற்ற வீரர்களின் தானெனும் அகந்தையைப் பற்றி என்.  சீனிவாசன் பேசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதைவிட மோசமான ஒரு நிலைமை இருந்ததில்லை.

ஜெகதீசனுக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அவர் 30 ரன்கள் எடுத்தார். ஆனால் 50-ஐ தொடவில்லை. அவரால் தலைமையைத் திருப்திபடுத்த முடியவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். அந்த ஆண்டுதான் அணி, ரிட்டுராஜ் கெய்க்வாட்டின் மீது அபரிமிதமாக நம்பிக்கை வைத்தது போலத் தோன்றியது. இதை என். சீனிவாசனே சொல்லியிருக்கிறார்.

இலங்கை ஆட்டக்காரரான எம் தீக்ஷனாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றுமொரு சர்ச்சையில் மாட்டிக் கொண்டது.

ஜெகதீசன் ஒதுக்கப்பட்டபோது ரிட்டுராஜுக்குப் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் தன்வழியை இழந்துவிட்டு வெறும் பெருமைக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது ரிட்டுராஜ் தனது திறமையைக் காட்டினார். அடுத்த ஆண்டு அவரும் ஃபாஃப் டு ப்ளெசிஸும் சேர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ரிட்டுராஜ் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ஜெகதீசன் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்.  அந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்த வந்த சாய் கிஷோர் வெறும் பதிலியாகவே பயன்படுத்தப்பட்டார். ரெய்னா படுமோசமாக ஆடினார்.

இந்த ஆண்டு ரெய்னா கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் ஃபிட்னெஸ் காரணம் காட்டி அவர் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அணியின் எதிர்காலத் திட்டங்களிலுல் அவரது பெயர் இடம்பெறவே இல்லை.

இலங்கை ஆட்டக்காரரான எம் தீக்ஷனாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றுமொரு சர்ச்சையில் மாட்டிக் கொண்டது. ஜெகதீசனும் ஹரி நிஷாந்தும் இந்த ஆண்டு சில வாய்ப்புகளைப் பெற முடியும்; ஆனால் அவர்கள் பதிலிகளாகவே வைக்கப்படுவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பியிருந்தால் குறைந்தபட்சம் பதிலிகளாகவாவது தமிழ்நாட்டு ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அவர்களுக்கும் அனுபவம் கிடைத்திருக்கும். ஷாருக்கானை மிக உயர்ந்த விலைக்கு ஏலம்கேட்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மனமில்லை. பணமிருந்த போதிலும். ஏலம் முடிந்தபின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிதி பயன்படுத்தப்படாமல் சும்மாவே கிடந்தது.

(எஸ் தினேஷ் ஒரு கிரிக்கெட் ஆய்வாளர்).

Share the Article

Read in : English

Exit mobile version