Site icon இன்மதி

தலைமை ஆசிரியரின் முயற்சியால், நூற்றாண்டு கண்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி புதுப்பொலிவு!

A headmaster in Madurai revives the corporation school

Read in : English

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் சிங்காரத் தோப்புப் பகுதியில் இருக்கும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை பார்ப்போருக்கு அது பள்ளியா அல்லது ரயில் பெட்டிகளா என்ற சந்தேகம் கண்டிப்பாக வரும். ஏனெனில் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டியை போன்று சுவர்கள் பல வண்ணங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல் தள வகுப்பறைகள் விமானம் போன்றும் படிக்கட்டுகளில் கூட எண் கணிதமும் வண்ணத்தில் தீட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன.

இந்தப் பள்ளி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் 1983ஆம் ஆண்டில் சுமார் 1200 மாணவர்கள் வரை படித்துள்ளனர். நாளடைவில் பள்ளியை முறையாக பராமரிக்காததால் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

2019ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு ஜோசப் ஜெயசீலன் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அப்பொழுது பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30. அதிலும் 12 மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால், பள்ளிக்கு வருவதில்லை. அதனால் பள்ளியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை 18 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் மட்டுமே இருந்தனர்.

பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவை அதிகரிக்கவும், பெற்றோரின் நம்பிக்கையைப் பெறவும் விரும்பிய பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், பள்ளியில் ஆண்டு விழாவையும் பொங்கல் விழாவையும் நடத்தினார். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டு விழா அந்தப் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அவருக்கு அறிமுகமான ஓவியக் கலைஞர் ராஜாவிடம்பேசி, பள்ளி வகுப்பறையை ரயில் பெட்டி போன்று அழகாக வண்ணம் தீட்டச் செய்தார். இதுபோன்று புதுவிதமாக செய்யும் போது மாணவர்கள் விருப்பப்பட்டு பள்ளிக்கு வருவார்கள் என ஜெயசீலன் நம்பினார். அவரது நம்பிக்கையும் வீண் போகவில்லை.

ஒவ்வொரு மாதமும், மாணவர்களின் படிப்பிற்கான பள்ளியின் செயல்பாடு குறித்த திட்ட அறிக்கையை நோட்டீஸ் அடித்து பெற்றோரிடம் கொடுத்தார் ஜெயசீலன். விழிப்புணர்விற்காக பள்ளியின் கற்றல் முறைகள் அச்சடிக்கப்பட்ட கட்டைப் பைகளை தயாரித்து அப்பகுதியினருக்கு ஜெயசீலன் வழங்கினார். நாயக்கர் மஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றார்.

மாணவர்களுக்கு நாற்று நட கற்றுக்கொடுக்கப்படுகிறது

ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஒரு வகுப்பறை இருந்ததால் பள்ளியின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர முடிவெடுத்தார். அவருக்கு அறிமுகமான ஓவியக் கலைஞர் ராஜாவிடம்பேசி, பள்ளி வகுப்பறையை ரயில் பெட்டி போன்று அழகாக வண்ணம் தீட்டச் செய்தார். பள்ளிக்கு வரும் பெற்றோரின் பார்வை ரயில் பெட்டியை போல் காணப்படும் வகுப்பறையின் மீது சென்றது. இது வகுப்பறையா அல்லது ரயில் பெட்டியா என்றி அவர்கள் பிரமித்தனர். இதுபோன்று புதுவிதமாக செய்யும் போது மாணவர்கள் விருப்பப்பட்டு பள்ளிக்கு வருவார்கள் என ஜெயசீலன் நம்பினார். அவரது நம்பிக்கையும் வீண் போகவில்லை.

பள்ளி மீண்டும் புத்துயிர் பெறுவதை அப்பகுதியினர் அறிந்ததால் அடுத்த ஆண்டே மாணவர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. கீழ் தளத்தில் இருக்கும் ஒரு அறையில் 80 மாணவர்கள் படிக்க இடம் போதாது என்பதால் அதிகாரிகளிடம் கூறி, மேல் தளத்தை தனது மாணவர்களுக்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளார். அதனால் அங்கிருந்த வேறு பள்ளி மாணவர்கள் மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டு மாநகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்கள் அங்கேயே படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவரை, கத்தரி போன்ற காய்கறிகளைப் பள்ளி வளாகத்தில் மாணவர்களை கொண்டு பயிர் செய்யப்படும் காய்கறிகள் சத்துணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது


.

மேல் தள வகுப்பு விமானம் வடிவமைப்பில் வண்ணம் தீட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளியின் சுவர்களில் பல்வேறு சித்திரங்களுடந் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு, ஆசிரியர் ஜெயசீலன் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.35 ஆயிரம் வழங்கினார். அப்பகுதி மக்கள் ரூ.10 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

ரயில் பெட்டிகள் போன்று வரையப்பட்டிருக்கும் பள்ளியறைகள்

பள்ளியின் வகுப்பறைகளை மாற்றியப்பின், மாணவர்களிடம் பிற திறன்களையும் வளர்க்கும் விதமாக அவரை, கத்தரி போன்ற காய்கறிகளைப் பள்ளி வளாகத்தில் மாணவர்களை கொண்டு பயிர் செய்யப்படும் காய்கறிகள் சத்துணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள் மட்டுமின்றி அரிசி எப்படி உருவாகிறது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளவும், விவசாயத்தை அறிந்து கொள்ளவும் நெற்மணிகளைக் கொண்டு நாற்று நடுவது குறித்து மாணவர்களுக்கு ஜெயசீலன் கற்று கொடுத்துள்ளார். பெரிய இரும்பு தகரத்தில் மண் நிரப்ப பட்டு நெல் விதைக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது என்கிறார் ஜோசப் ஜெயசீலன்.

இதுதவிர மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் பள்ளியிலேயே நூலகம் அமைத்து மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தார். தினமும் செய்தித்தாளைப் படித்து அதில் மாணவர்களுக்கு பிடித்த 10 செய்திகளை எழுதி வர வேண்டும் என்று கூறுவதால் சிறுவயதிலேயே மாணவர்களிடம் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முடியும் என்கிறார் அவர்.

பள்ளியின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள பள்ளிக்கு http://cmssingarathope.blogspot.com என்ற இணையதள பக்கத்தையும், பேஸ்புக் பக்கத்தையும் உருவாக்கி பள்ளியின் அன்றாட நடவடிக்கைகளை பதிவிட்டு வருகிறார். ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளும் கேக் வெட்டி பள்ளியிலேயே சக மாணவர்களுடன் கொண்டாடப்படுகிறது.

பள்ளி அமைந்திருக்கும் சிங்காரத்தோப்பு பகுதி மக்களிடன் உதவியுடன் பள்ளியை சுற்றிலும், பள்ளி வளாகத்திலும் சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உதவியுடன் மாணவர்களுக்கு சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் பிறந்த நாள் பள்ளியில் கொண்டாடப்படுகிறது

இவ்வாறு ஜெயசீலன் எடுத்து வரும் ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு அப்பகுதி மக்களும், நண்பர்களும், ஆதரவளித்து உதவியால் இப்பள்ளியின் தரம் தனியார் பள்ளிகளுக்குப் போட்டிபோடும் வகையில் உயர்ந்துள்ளது. அத்துடன், மாணவர்களின் எண்ணிக்கையும் இரண்டாண்டுகளில் 30இல் இருந்து 180ஆக உயர்ந்துள்ளது. தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலனின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றுள்ள. இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்த மாணவர்களில் 80 சதவீதம் பேர் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Article

Read in : English

Exit mobile version