Site icon இன்மதி

தமிழ்நாட்டில் சங்கீத சபாக்களில் தமிழ்ப் பாட்டு உண்டா? நிழல் திருநாவுக்கரசு

மூல ட்விட்டர்

Read in : English

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசர்கள் ஜமீன்தார்களாக்கப்பட்ட அந்தக் காலத்தில் தமிழகத்தில் இருந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, எட்டயபுரம், ஊற்றுமலை, உடையார்பாளையம்  ஜமீன்தார்கள் தமிழ் இலக்கியத்தையும் தமிழர்களின் கலையும் வளர்த்தனர். இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு 1875 முதல் 1910 வரை கர்நாடக சங்கீத விற்பனர்கள் முழு தெலுங்கு இசையைக் கொண்டு வந்தனர்.

இந்தக் காலத்தைப் பற்றி தமிழறிஞர் .வேசாமிநாதய்யர் குறிப்பிடும்போது, எனது காலத்தில் தமிழிசை முதன்மையாக சமஸ்தானங்களிலும் சைவ மடங்களிலும் நிலை கொண்டிருந்தது. பிற்காலத்தில்தான் பிறமொழி பாடும் வழக்கம் வந்தது என்கிறார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளின் இறுதியில் மட்டுமே இரண்டொரு தமிழ்ப் பாடல்கள் ‘துக்கடா’ என்ற பெயரில் பாடப்பட்டுவந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு பாட வேண்டும் என்ற இயக்கம் 100 ஆண்டுகள் போராடியதால் இன்று சபாக்களில் தமிழ் பாட்டுகளைக் கேட்க முடிகிறது.

சஞ்சய் சுப்ரமணியன், டி.எம்.கிருஷ்ணா, மதுரை சேஷகோபாலன் போன்றோர் எங்கே கச்சேரிக்குப் போனாலும் தமிழிசையை மறப்பதில்லை. பழைய கீர்த்தனைகளை தேடிப்பிடித்து பாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளின் இறுதியில் மட்டுமே இரண்டொரு தமிழ்ப் பாடல்கள் ‘துக்கடா’ என்ற பெயரில் பாடப்பட்டுவந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு பாட வேண்டும் என்ற இயக்கம் 100 ஆண்டுகள் போராடியதால் இன்று சபாக்களில் தமிழ் பாட்டுகளைக் கேட்க முடிகிறது.

எந்த சபாவாக இருந்தாலும், நாதஸ்வர கச்சேரி மங்கள இசையாக முதலில் வாசிக்கப்படுகிறது. இஞ்சிக்குடி வம்சாவளியினர் இன்று முதன்மைப்படுத்தப்படுகின்றனர்.

அந்தக் காலத்திலேயே இலங்கைக்குப் போகும் ‘இசைமணிகள்’ தமிழில்தான் பாடவேண்டும் என்று பெரும் கோரிக்கை வரும். எம்.எல்.வி. போன்றோர், தமிழ் மக்களின் விருப்பத்தை ஏற்று முழுக் கச்சேரியும் தமிழிலேயே செய்திருக்கிறார்கள். அதன் பயனாக ஈழத் தமிழர்கள் செரிந்துவாழும் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் முழுவதுமாக தமிழிசைக் கச்சேரி நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள (FETNA ) அமைப்பு, தமிழகத்திலிருந்து வரும் பாடகர்களுக்கு ஒரு பெரிய தமிழ்ப் பாடல் பட்டியலையே கொடுத்துவிடுகிறது. இதிலிருந்து ‘கர்நாடக இசை’யாளர்கள் தப்ப முடியாது. இன்று திரைப்படத்தில்கூட ஒரு பாடல் நன்றாக இருக்கிறது என்றால் அது ஏதோ ஒரு ராகத்தை முழுமையாகக் கொண்டு வெளிவந்ததாக இருக்கிறது.

மூல ட்விட்டர்

ஜெயா தொலைக்காட்சி ஆண்டுதோறும் நடத்தும் மார்கழி விழாவில் தமிழே முதன்மையாக உள்ளது. ‘தமிழர்கள் முன்பு தமிழிலேதான் பாடவேண்டும்’ என்கிற இயக்கமான ‘தமிழிசை இயக்கம்’ தோன்றுவதற்கு முன்பே மகாகவி பாரதி ‘தமிழிசை’ இயக்கத்தைத் தொடங்கி வெகுஜன இதழான ‘சுதேசமித்திரன்’ இதழில் 1916-ஆம் ஆண்டு இப்படி எழுதினார்.

“முத்துசாமி தீட்சிதர், தியாகையர், பட்டணம் சுப்ரமணிய ஐயர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக சங்கதிகளுடன் பாடுவோரே முதல்தர வித்துவான். இந்தக் கீர்த்தனங்களெல்லாம் சமஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே முக்காலே மும்மாகாணி வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துகளையும் பதங்களையும் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ‘ரஸம்’ தெரிய நியாயம் இல்லை.

சஞ்சய் சுப்ரமணியன், டி.எம்.கிருஷ்ணா, மதுரை சேஷகோபாலன் போன்றோர் எங்கே கச்சேரிக்குப் போனாலும் தமிழிசையை மறப்பதில்லை. பழைய கீர்த்தனைகளை தேடிப்பிடித்து பாடி வருகின்றனர்.

நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம் என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராமா நீ சமான மெவரு’, ‘மரியாத காதுரா’, வரமுலொசகி’, ஐயையோ ஐயையோ ஒரே கதை!

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்துக்குப்போ, எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். திரும்பத் திரும்பத் திரும்ப, ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

தமிழ்ச் சபைகளில் எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்.”

மகாகவி 100 அண்டுகளுக்கு முன்னர் எழுதிய இவ்வரிகளைப் படிக்கும் போது இன்னும் திருந்தாதவர்களினால், சபாக்களைவிட சபாக் கேண்டின் கூட்டம் நிறைந்திருக்கிறது. பாடகர் வேற்றுமொழியில் பாடும்போது ‘ரசிகாள்’ குறட்டை ஒலி ஹாலைத் தாண்டி வீதிவரை கேட்கும். இசையையே நம்பி வாழ்ந்த பாடகர்கள் இன்று வேறு தொழில் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இவ்வளவுக்கும் தமிழ் மொழியில் இல்லாத பாடல்களா? இந்திய மொழிகளிலேயே அதிக பொக்கிஷங்களைக் கொண்டது தமிழ்தான்! சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், அருணகிரிநாதர், தமிழிசை மும்மூர்த்திகளான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை, அருணாசலக் கவிராயர், வள்ளலார், வேதநாயகம் சாஸ்திரிகள் என்ற 500க்கும் மேற்பட்ட கீர்த்தனைக்காரர்களின் பாடல்கள் தொகுப்பை சுரதாளக் குறிப்புகளுடன் தமிழிசைச் சங்கம் வெளியிட்டுள்ளது.

மாவட்டம் தோறும் இசைப் பள்ளிகள், தேவாரப் பாட சாலைகள் மூலம் எண்ணற்ற ஓதுவார்கள், இசைக் கலைஞர்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கான மேடையை அரசும், இசை ஆர்வலர்களும் சபாக்கள் மூலம் ஏற்பாடு செய்தால் அரிய மணிகள் பிறந்துகொண்டே இருப்பார்கள்.

‘தியாகராயர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரால் கர்நாடக இசை பிறந்தது  என்கின்றனர். இவர்கள் எல்லாம் 250 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள். நமது இசைப் பாரம்பரியம் இவ்வளவு குறைவான தூரம் கொண்டதா?

தமிழகத்தில் ‘பாணர் மரபு’ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளும் வீணைக்கு முன்னோடியான ‘யாழ்’ பிறந்தது தமிழகத்தில். எங்குமே பார்க்க முடியாத ‘பஞ்சமுக வாத்யம்’ என்ற தலைப் பறையான சூரியபிறை, சந்திரபிறை இங்குதான் பார்க்கலாம்.

வாய்ப்பாட்டுக்கும் ராக ஆலாபனைக்கும் ஒரு பயிற்சிக் கருவி போல ‘நாதசுரம்’ கண்டதும் தமிழகத்தில் தான்.

இசைத் தூண்கள், இசைக் கல்வெட்டுகள், ஓவியங்களில் இசைக் கருவிகள், சிற்பங்களில் இசைஞர்கள் கொண்டதும் தமிழகம்தான்.

‘தியாகராயர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரால் கர்நாடக இசை பிறந்தது  என்கின்றனர். இவர்கள் எல்லாம் 250 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள். நமது இசைப் பாரம்பரியம் இவ்வளவு குறைவான தூரம் கொண்டதா? தமிழகத்தில் ‘பாணர் மரபு’ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

சிவனின் 108 தாண்டவமும் தஞ்சை பெரிய கொவில் கோபுரத்தின் உட்கூட்டில் இன்றைக்கும் காணலாம். பரத நாட்டிய கரணங்கள் சிதம்பரம், தாராசுரம், சாரங்கபாணி கோவில், ஸ்ரீமுஷ்ணம், திருவதிகை கோயில்களில் காணலாம்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடக இசைப் பாடகர்களும் சரிக்கு சம்மாக தமிழிசையைப் பாடிவந்தார்கள். கிட்டப்பாவின் ‘கோடையிலே’க்கு இணையான குரலை இன்றுவரை காண முடியவில்லை. கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாளின் ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ பாடல் விருத்தப் பாடல்களுக்கு இலக்கணமாக இருக்கிறது. தண்டபாணி தேசிகரின் ‘தாமரை பூத்த தடாகமடி’ என்னவொரு கம்பீரம். செம்மங்குடி எவ்வளவோ கர்நாடக இசை பாடி இருந்தாலும், பாரதியாரின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ தான் மக்கள் நினைவில் இருக்கிறது. இது போல முசிறி சுப்பிரமணி ஐயரின், ‘தாயே யசோதா’ வை மறக்க முடியுமா? பட்டம்மாள் புகழ் பெற்றதற்கு ‘தமிழிசை’ பாடல்களே சான்று. எம்.எல்.வி. பாடிய எல்லா கீர்த்தனைகளையும் மக்கள் மறந்துவிட்டார்கள். ஆண்டாளின் முப்படி பாடல்களும் தேனாய் இனிக்கின்றன. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் எல்லா தமிழிசை பாடல்களும் ஒவ்வொரு வைரம்! மதுரை சோமுவின் ‘என்ன கவி பாடினாலும்’ வசந்த கோகிலத்தின் தமிழிசை பாடல்கள் அனைத்தும் வெல்லம் எனத் தமிழாக இருப்பதால்தான் இனிக்கின்றன.

இவ்வளவு சிறப்புகள் உள்ள தமிழ்மொழியில் பாடாமல், வேற்று மொழியில் பாடுவதால் என்ன ஏற்படும் என்று 84 ஆண்டுகளுக்கு முன்பே 1938இல் ஆனந்தவிகடன் எச்சரிக்கை மணி அடித்தது.

“இந்தப் பாட்டுக்களை இவ்வளவு தூரம் நமது ஜனங்கள் விரும்புவதின் காரணம் என்ன? நமது சங்கீத வித்வான்கள் கொஞ்சம் இதைக் கவனிக்க வேண்டும்.

  1. செவிக்குஇனிமையான எளிய மெட்டுகளில் அவை அமைந்திருக்கின்றன.
  2. அவைத்தமிழில் இருககின்ற;. அர்த்தம் தெரிகிறது; எந்த சந்தர்ப்பத்தில் யார் பாடியது என்பதும் தெரிகிறது. ஆகவே, அவற்றில் சங்கீதத்தின் மிக முக்கிய அம்சமாகிய இருதய பாவம் குடிகொண்டிருக்கிறது.
  3. இனியகுரலில் வார்த்தைகளைச் சிதைக்காமல் அவை அழகாய் பாடப் பெற்றிருக்கின்றன.

சிந்தாமணி டாக்கி பாட்டுகளின் பிராபல்யம் நமது சங்கீத வித்வான்களுக்கு ஒரு படிப்பினையாகவும் எச்சரிக்கையாகவும் பயன்படுமென்று நம்புகிறேன். அவர்•கள் கச்சேரி முறையிலும் பாட்டுகளைப் பொறுக்குவதிலும் சில சீர்த்திருத்தங்களைச் செய்து கொள்ளாவிட்டால், கர்நாடக சங்கீதத்துக்கே பெரிய ஆபத்து காத்திருக்கிறதுÕ

அதனால், இனி தமிழ்ப் பாட்டுகள் சபாக்களில் நிச்சயம் இருக்கும்.

Share the Article

Read in : English

Exit mobile version