Read in : English
இந்த புத்தாண்டு பா.ஜ.க.- தி.மு.க. இடையில் புதிய சமன்பாட்டை உருவாக்குமா? மோடி – ஸ்டாலின் இருவரும் முதல் முறையாக விருதுநகரில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கும் அந்த நாளைத்தான் அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.
மத்தியில் ஆளும் அரசுக்கும், மாநிலத்தில் ஆளும் அரசுக்கும் இடையே அல்லது அரசியல் களத்தில் நேர் எதிரிடையான பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே உறவில் புதிய சமன்பாட்டை புத்தாண்டு கொண்டு வருமா? தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக வரும் புத்தாண்டில், அதாவது 2022 ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தந்து அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தமிழகமும் அதற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அனைத்து அரசியல்கட்சிகள் மனதில் எழுந்துள்ள கேள்வி இதுதான்.
விருதுநகரில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் விழாவில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறந்துவைக்கப்பட உள்ளன. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பா.ஜ.க.வின் 2024 செயல் திட்டத்தின்படி பிரதமர் மோடி, தனது வழியில் சென்று ஸ்டாலினிடம் பேசுவார் என்றும் அடுத்து வரவுள்ள பொதுத்தேர்தலில் பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி அமைக்கும். இதுதான் பா.ஜ.க.வின் முதல் திட்டம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் இரு தலைவர்கள் இடையே உறவில் நட்புறவு ஏற்படுமா அல்லது கடந்தகால பகை தொடருமா என்பதைக் காண பலரும் காத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் 2024 செயல் திட்டத்தின்படி பிரதமர் மோடி, தனது வழியில் சென்று ஸ்டாலினிடம் பேசுவார் என்றும் அடுத்து வரவுள்ள பொதுத்தேர்தலில் பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி அமைக்கும். இதுதான் பா.ஜ.க.வின் முதல் திட்டம் என்று சொல்லப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறாவிட்டால் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வைத்துள்ள கூட்டணியை உடைப்பது. இது பா.ஜ.க.வின் இரண்டாவது செயல் திட்டம். (இந்த வலுவான கூட்டணிதான் கடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்ற உதவியது.) பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தவிர பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்குமாறு திமுகவிடம் அறிவுறுத்தப்படும். இதன் குறிக்கோள் என்னவென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் செல்வாக்கை குறைக்க வேண்டும். இதற்காக பா.ஜ.க. தனது கூட்டணிக் கட்சியான அஇஅதிமுகவை கைவிடவும் தயாராக இருக்கும். மேலும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்காக திமுகவுக்காக பா.ஜ.க. கதவுகளைத் திறந்துவைத்திருக்கும்.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் இந்த உத்தியானது மத்திய – மாநில உறவுகளைத் தாண்டி பா.ஜ.க.வுடன் நெருங்கிவர முடியாத மனோநிலையில்தான் தி.மு.க. உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளுடனான கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க. முகாமில் உறுதியாக உள்ளது. அதேசமயத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்கை மாநில அரசு பெறுவதை உறுதி செய்வது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனுமதிகளைப் பெறுவது ஆகியவை மட்டும்தான் இப்போது முக்கியம். எனவே மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களுடன் நட்புறவுடன் இருப்பதுதான் நல்லது என்று தி.மு.க. நினைக்கிறது.
இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக, ஸ்டாலின் தனது அமைச்சர்களை புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறும் மாநிலத்தின் கோரிக்கைகள் சுமுகமாக நிறைவேற இறுதிவரை தொடர் நடவடிக்கைகள் எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த உத்தி மத்திய அரசுடன் கசப்புணர்வை தவிர்த்து சுமுக உறவை ஏற்படுத்த உதவி வருகிறது.
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தால் அதன் மூலம் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். எனவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதே நல்லது என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
மேற்குவங்கத்தைப் போல உறவில் சீர்குலைவைத் தடுக்க இது உதவுகிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தால் அதன் மூலம் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். எனவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதே நல்லது என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
பிராந்திய அரசியல் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டுவது போல் நடித்து, பின்னர் சில தந்திர நடவடிக்கைகள் மூலம் அதில் பிளவை ஏற்படுத்தி, (பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தி) அங்கிருந்து வெளியேறியவர்களை அரவணைத்து பலம் பெறுவது, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்துவது, பாஜக எதிர்ப்பாளர்களை ஓரங்கட்டுவது என்னும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டத்தை திமுக நன்கு உணர்ந்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறது. மாநிலத்தில் நம்பர் ஒன் கட்சியாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் இரண்டாவது இடத்தையாவது பிடித்துவிட வேண்டும் என்று நினைத்து பா.ஜ.க. செயல்படுகிறது. ஆந்திரம், தெலங்கானா மற்றும் ஒடிஸாவில் பா.ஜ.க. இப்படித்தான் காய்களை நகர்த்தி வருகிறது. கர்நாடகம் (மதச்சார்பற்ற ஜனதாதளம்), மகாராஷ்டிரம் (சிவசேனை), உத்தரப்பிரதேசம் (பிஎஸ்பி) ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. இந்த உத்தியைத்தான் கையாண்டு வருகிறது.
அஇஅதிமுக அரசால் முன்னெடுக்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழா ஜனவரி 12 ஆம் தேதி, விருதுநகரில் நடைபெறும் விழாவுடன் முடிந்துவிடும். இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் கிடைக்கும். தாங்கள் முன்னெடுத்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் திமுக ஆதாயம் தேடுவதாக அஇஅதிமுக குற்றஞ்சாட்டலாம். ஆனால், இதுபோன்ற சூழல் அஇஅதிமுக ஆட்சியிலும் ஏற்பட்டது. முந்தைய திமுக அரசின் திட்டங்கள் பலவற்றை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடங்கிவைத்தது அனைவரும் அறிந்ததே.
ஆனாலும், பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தலைவர்களுக்கிடையே உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்று பதற்றத்துடன் இந்த நிகழ்வை அஇஅதிமுகவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தற்போது அஇஅதிமுக கூட்டணியில் பா.ஜ.க. மட்டுமே உள்ளது. 2001-2004 ஆண்டுகளில் அஇஅதிமுக மற்றும் தி.மு.க. இரண்டு கட்சிகளாலும் விரும்பப்பட்ட காலக்கட்டம் இப்போது மீண்டும் வரும் என்று பா.ஜ.க. நம்பிக்கையுடன் இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. இந்த கனவில்தான் இருக்கிறது.
Read in : English