Site icon இன்மதி

இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் டாப்கியரில் பறக்கும் தமிழ்நாடு

Source : Twitter.com

Read in : English

இ-ஸ்கூட்டர் அமைதியாக ஓடுகிறது. புகை வெளியேற்றம் பூஜ்யம்; அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. மோட்டார்வாகன ஆர்வலர்கள் இந்த வண்டியில் போதுமான இஞ்சின் முறுக்கு விசை (torque) இல்லை என்றும், உள்ளே எரிந்து உறுமும் எஞ்சின் உணர்வு இல்லை என்றும் குறைசொல்கிறார்கள். எனினும் பேட்டரியால் இயங்கும் இந்தவகைப் போக்குவரத்து எந்திரத்தை அரசாங்கம் ஆதரிக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் மின்சார இருசக்கரவாகனம் –இ-ஸ்கூட்டர் – வந்தபோது, இருசக்கரவாகனச் சந்தையில் பெரியதோர் புரட்சி உருவானது. பெருமளவில் இ-ஸ்கூட்டரைத் தயாரிக்கும் முழுமையான ஆலை ஒன்றை தமிழ்நாட்டில் உருவாக்கப் போவதாக ‘ஓலா’ சமீபத்தில் அறிவித்தவுட்ன் பரபரப்பு தொற்றிக் கொண்டது.தென்னிந்தியாவில் இ-ஸ்கூட்டர் தயாரித்து வினியோகிக்கும் நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன.

அவற்றில் தமிழ்நாட்டில்தான் பெருமளவில் இயங்குகின்றன. கேரளாவில் யெட்; கர்நாடகாவில் பவுன்ஸ்; தமிழ்நாட்டில் அதெர், கிரீவ்ஸ் (ஆம்பெயர்), வைக்பைக் மற்றும் மிகப் பழமையான டிவிஎஸ் என்று நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன.

கடந்த இரண்டு வருடங்களில் தமிழ்நாட்டில் இ-ஸ்கூட்டர் சந்தை எண்ணிக்கையிலும், பிரபல்யத்திலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அது இன்னும் பெரிதாக வளரும் ஆற்றலோடு இயங்கி கொண்டிருக்கிறது.

தென்னிந்தியாவில் இ-ஸ்கூட்டர் தயாரித்து வினியோகிக்கும் நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் தமிழ்நாட்டில்தான் பெருமளவில் இயங்குகின்றன.

முதலில், ஓசூரில் 2021 ஜனவரியில் அமைக்கப்பட்ட அதெர் எனெர்ஜி உற்பத்தியாலை வருடத்திற்கு 1,10,000 ஸ்கூட்டர்களையும், 1,20,000 பேட்டரிகளையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் சொல்கிறது. அது போதாது என்று, அதெர் எனர்ஜி மறுபடியும் ஓசூரில் 2022-ல் இரண்டாவது ஆலை நிறுவிய பின்பு, உற்பத்தித் திறனை வருடத்திற்கு 4,00,000-ஆக உயர்த்த இருக்கிறது.

2021 நவம்பர் நிலவரப்படி, அதெர் கிரிட் (மின்வாகனத்திற்கு மின்னேற்றும் அதெர் எனர்ஜியின் மற்றுமொரு கட்டமைப்பு) இந்தியா முழுக்க மொத்தம் 23 மாநகரங்களில் மின்னேற்றும் வசதிகொண்ட 220 மையங்களை ஏற்கனவே உருவாக்கிவிட்டது. ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் கிருஷ்ணகிரி மெகா ஆலை மின்னேற்றும் நிலையங்களின் கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கித்தர காத்திருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில், இ-ஸ்கூட்டர் மின்னேற்றக் கட்டமைப்பை ஆராய்ச்சி செய்து, உருவாக்கி, நிறுவுவதற்கு ஓலா இரண்டு பில்லியன் டாலர் (15,000 கோடி ரூபாய்) முதலீட்டு இலக்கை நிர்ணயித்திருக்கிறது. அவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்க ஓலா காத்திருக்கிறது என்றால், அவர்களின் ஆராய்ச்சி எதிர்காலத்தில் இ-ஸ்கூட்டர் விற்பனை பெரும் வளர்ச்சி காணப் போவதைக் கணித்திருக்கிறது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தச் சந்தையில் இருக்கும் மற்றுமொரு போட்டியாளர் சிம்பிள் எனர்ஜி. அடுத்த ஐந்து வருடங்களில் பல்வேறு படிநிலைகளில் மொத்தம் 2,500 கோடி முதலீட்டை செய்ய காத்திருக்கிறது அந்த நிறுவனம். வேற்றுக்கிரகத்ததை போலத் தோற்றமளிக்கும் அவர்களின் ‘சிம்பிள் ஒன்’ ஈ-ஸ்கூட்டர் 236 கிலோமீட்டர் வீச்சைக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உலகத்திலே என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்தியாவிலே இ-ஸ்கூட்டர்களில் இதுதான் ஆக உயர்ந்தது.

அதெர் 450எக்ஸ் வண்டியில் இருக்கும் எஞ்சின் முறுக்குவிசை எண் 26 என்எம் (நியூட்டன் மீட்டர்); 3.3 வினாடிகளில் நிகழும் வேகம்கூட்டுதல் 0-40 கிலோமீட்டர் வீச்சில் நடக்கும். அதனால் அதெர் 450எக்ஸ் வண்டி நிஜத்தில் பிரமாதம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், சிம்பிள் ஒன் சிம்பிளானது அல்லதான். ஆனால் தங்களுடைய சிம்பிள் ஒன் வண்டியில் எஞ்சின் முறுக்குவிசை எண் 76 என்எம்; அது அதெர் 450எக்ஸைவிட மூன்றுமடங்கு அதிகமானது என்று ’சிம்பிள் எனர்ஜி’ நிறுவனம் சொல்கிறது.

நிறுவனம் சொல்வதைப் போல, சிம்பிள் ஒன் தனது இஞ்சின் முறுக்குவிசையை நன்றாகப் பயன்படுத்தி, ‘நல்ல சூழல்களில்’ வெறும் 2.95 வினாடிகளில் 0-40 கிலோமீட்டர் வீச்சில் வேகம்கூட்டுதலை நிகழ்த்துகிறது. அதெரின் 80 கேஎம்பிஎச் வேகத்தையும், சான்றழிக்கப்பட்ட்ட அதன் 116 கிலோமீட்டர் வீச்சையும் ஒப்பீடு செய்துப் பார்த்தால், ஒருமணி நேரத்தில் 105 கிலோமீட்டர் (105 கேஎம்பிஎச்) என்ற சிம்பிள் ஒன்னின் உச்ச வேகத்தையும், அதன் 236 கிலோமிட்டர் வீச்சையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். காகிதங்களில் இருக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நம்மைக் கவரத்தான் செய்கின்றன.

ஆனால் நிஜத்தில் சிம்பிள் ஒன்னின் திறன்நிகழ்வு அவ்வளவு நன்றாக இருக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மின்சார இருசக்கர வாகனத்தின் மீது தமிழ்நாடு கொண்டிருக்கும் மரபுசார்ந்த அணுகுமுறைக்கு வருவோம். கேரளாவின் ‘எட்’ நிறுவனம் போல தமிழ்நாட்டின் ‘வைக்பைக் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்’ கணக்குப் போட்டு செலவளிக்கும் நுகர்வோர்களை இலக்காக வைத்திருக்கிறது. ஓலா செய்வது போல இந்த நிறுவனங்கள் எல்லாம் 12 இலக்க நிதி்யில் முதலீடு செய்வதில்லை. ஆனால் முக்கியமானவை அவற்றின் உரிமையாளர்களின் தொலைநோக்கு இலட்சியமும், பணியும்தான்.

’வைக்பைக்’ நிறுவனக் கொட்டிலில் ஈ-பைக், ஈ-ஸ்கூட்டர், அதிக சுங்கவரி மின்சார இருசக்கர வாகனம் என்று பலரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு வகையான ’வைக்பைக்’ இருக்கிறது. ஹிப்பி இளைஞர்கள் நேர்த்தியான ‘வைக் எக்ஸ்மென்’ வண்டியைத் தேர்ந்தெடுக்கலாம்; புதிய தலைமுறை இளவரசிகளுக்கு நடப்பு நாகரிகமான ‘வைக் க்வீன் எஸ் பிளஸ்’ உண்டு. யதார்த்தவாதியான தனிநபர்கள் ‘வைக் வீ ஒன்’ அல்லது ‘வைக் நிஸ்பா’வைத் தேர்ந்தெடுக்கலாம்.

இ-பைக் ஆர்வலர்களில் இருக்கும் கடின உழைப்பாளிகள் ‘வைக் கார்கோ ஹெவி டியூட்டி’யைத் தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் அமைதியாக கடினமாக உழைத்து வெற்றி பெறலாம்! இது மட்டுமல்ல. ‘வைக்பைக்கில்’ இன்னும் நிறைய மின்வண்டிகள் உண்டு. இன்னொரு கட்டுரையில் நாம் அவற்றை விளக்கமாகப் பார்க்கலாம்.

டிவிஎஸ் நிறுவனம் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. உண்மையைச் சொன்னால், இந்தத் துறையில் வெற்றி அடைய டிவிஎஸ் அமைதியாக எல்லா வேலையையும் செய்கிறது. 2018-ல் அந்த நிறுவனம் ‘அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ்’ என்னும் பெங்களூர் மின்மோட்டார்வண்டி நிறுவனத்தில் நிறைய முதலீடு செய்திருக்கிறது. அந்த பெர்ஃபார்மன்ஸ் இ மோட்டார்சைக்கிளின் வடிவமும் திறனும் 250-சிசிக்குக் குறையாத உள்ளெரியும் எஞ்சின் சார்ந்து அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வார ஆரம்பத்தில் அல்ட்ராவயலட் எஃப்-77 மாடல் வெளிவருவதற்கு முன்பு டிவிஎஸ் அதில் மேலும் முதலீடு செய்திருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பெர்ஃபார்மன்ஸ் இ-மோட்டார்சைக்கிள் சந்தையில் எதேச்சதிகாரம் செலுத்துவது நிச்சயம். இந்த அமைதியான அரக்கனுக்குப் போட்டியாளராக இந்தியாவில் இன்னும் யாரும் உருவாகவில்லை.

டிவிஎஸ் நிறுவனம் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. உண்மையைச் சொன்னால், இந்தத் துறையில் வெற்றி அடைய டிவிஎஸ் அமைதியாக எல்லா வேலையையும் செய்கிறது.

டிவிஎஸ் தன் இ-ஸ்கூட்டரை வடிவமைத்திருக்கிறது. அதன் பெயர் ‘ஐகியூப்.’ பெரிய வடிவமும் நிலையான தன்மையும் கொண்டு அது இ-ஸ்கூட்டர் சந்தையில் சலசலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு உற்பத்தியாளர்களோடு சேர்ந்துகொள்ளும் திட்டத்தின்படி, பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தோடு தாங்கள் கொண்டிருக்கும் நீண்டகால கூட்டுறவில் இன்னும் இரண்டு வருடங்களில் மின்வண்டிகளை உற்பத்தி செய்வோம் என டிவிஎஸ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறது.

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் அதன் பிரமாண்டமான சி400, சி650 தொடர்களைத் தவிர்த்து, ஸ்கூட்டர் தயாரிப்பில் பேர் பெற்றதாகத் தெரியவில்லை. டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் அல்ட்ராவயலட் எஃப்-77 போன்று ஏதாவது வரும் என்று நாம் எதிர்பார்க்கலாமா? காலம்தான் பதில் சொல்லும்.

தீர்ப்பு

மின்வண்டி சந்தை இன்னும் மிக பெரிதாக வளரவில்லை காரணம் அரசின் புதுக் கொள்கைகள் பல நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் கேட்கப்படும் ஒரே ஒரு கேள்வி இதுதான்: இந்த இயந்திரங்களில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?

உங்கள் தேர்வு எது என்பதைப் பொறுத்தது அது. அழகான ஓலாவா? வித்தியாசமான வடிவம் கொண்ட சிம்பிள் ஒன்னா? உறுதியான டிவிஎஸ்சின் ஐக்யூபா? அல்லது வினோதமான அதெரா? புதுப்போக்கை உருவாக்கிய இந்த மின்சார மோட்டார்வண்டிகளின் உற்பத்தி ஸ்தலம் தமிழ்நாடுதான்.

ஆம், இங்கே அமைக்கப்பட்ட நிறுவனங்களால் தமிழ்மக்கள் எப்போதும் பயனடைவார்கள். தமிழ்நாட்டின் தொழிற்வளர்ச்சியில் இன்னொரு மைல்கல் இந்த இ-ஸ்கூட்டர் உற்பத்தி என்றுகூட நாம் சொல்லலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version