Read in : English
சட்டரீதியிலும், தார்மீகரீதியிலும் கட்சியில் தன்னுடைய பலத்தை உணர்த்துவதற்கான போட்டிக்கு சசிகலா தன்னை தயார்படுத்திகொண்டதற்கு அடையாளமாக தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர்-ன் நினைவு இல்லத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி, பெயர்ப்பலகையும் திறந்துவைத்துடன் நில்லாமல் எம்.ஜி.ஆர். இன் இராமாவரம் வீட்டில் அவருடைய உறவினர்களுடனும், எம்.ஜி.ஆர். காதுகேளா மற்றும் ஊமை குழந்தைகளுக்கான பள்ளியிலுள்ள குழந்தைகளுடன் நேரம் செலவு செய்திருக்கிறார்,
சசிகலா தன்னை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் சட்டமன்ற தலைவர் என்று அறிவிக்க கோரும் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவது போன்ற அவரின் கடந்த இரண்டு நாட்களின் செயல்பாடுகள் அவரின் முக்கிய அரசியல் காய்நகர்த்தல்களாக கணிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியில் ஆட்சிக்காலத்தின் கடைசிப்பகுதியில் சசிகலா, ஜெயாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது இங்கு நினைவுகூறதக்கது. அதுபோக கடந்த அ.தி.மு.க. அரசின் ஆட்சிக்காலத்தில் ஜெயாவின் போயஸ் தோட்ட வீட்டை அவரது நினைவில்லமாக மாற்றுவதற்கான சடங்கை தொடர்ந்து சீல்வைத்து மூடியது சசிக்கலா அந்த இல்லத்தை கைப்பற்றுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
சசிகலாவால் பெரிய கூட்டத்தை கூட்டமுடியாததது வெளிப்படையாக தெரிந்தாலும், (அ.ம.மு.க. தலைவரும், தன்னுடைய சகோதரியின் மகனுமான TTV தினகரனை அவர் தன்னுடைய நிகழ்ச்சிகளிலிருந்து ஒதுக்கி வைத்திருந்ததும் இதற்குக் காரணம்.) தன்னுடைய பிம்பத்தை கட்டமைப்பதற்கு அவர் காட்சி ஊடகங்களை பெரிதும் குறிவைத்தார்.
எம்.ஜி.ஆர். இன் இராமாவரம் இல்லத்திலுள்ள அவருடைய உருவசிலைக்கும், அவருடைய மனைவி ஜானகியின் திருவுருவபடத்துக்கும் மாலை அணிவித்து, அங்குள்ள எம்.ஜி.ஆர். காதுகேளா மற்றும் ஊமை குழந்தைகள் பள்ளியிலுள்ள குழந்தைகளுடன் மதிய உணவு உட்கொண்டது, எம்.ஜி.ஆர் இன் தி.நகர் இல்லத்தில் கட்சிக்கொடியை ஏற்றி தன்னை அ.தி.மு.க. வின் பொதுசெயலாளர் என்று அறிவிக்கும் பெயர்ப்பலகையை கட்சி உருப்பினர்களின் ‘புரட்சித் தாய்’ என்றக் கோசங்களுக்கிடையில் திறந்துவைத்தது போன்ற செயல்கள் எல்லாம் மிகக்கவனமாக எழுதிய திரைக்கதையின் அச்சுப் பிசகாத வெளிப்பாடகக் கொள்ளலாம்.
கட்சித்தொண்டர்களால் முற்றுகையிடப்பட்ட எம்.ஜி.ஆர். இன் இராமாவரம் இல்லத்துக்கும், தி.நகரிலுள்ள அவருடைய இல்லத்துக்கும் அ.தி.மு.க. வின் பொன்விழா கொண்டாட்டம் ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் சசிகலா இவ்வளவு எளிதாக சென்றுவர முடிந்தது, அவர் எந்த அளவிற்கு முன்தயாரிப்புகளை செய்திருப்பார் என்பதை உணர்த்துகிறது. இராமவரம் எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் எம்.ஜி.ஆர். இன் உறவினர்களுடன் நேரம் செலவளித்தது, அவர் எம்.ஜி.ஆர். இன் உறவினர்களுடனும், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அதுபோக சசிகலா, எம்.ஜி.ஆர். இன் மனைவி ஜானகியின் சிலைக்கும் மாலை அணிவித்ததாதனது, ஜானகி அம்மையாரின் தியாகங்களை மறந்துபோன இன்றைய மையநீரோட்ட அ.தி.மு.க. தலைமைகளுக்கு மத்தியில், மிக முக்கியமான அடையாள அரசியல் செயல்பாடாக அமையும்.
அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமாகத் தோன்றும் இந்த செயல்பாடு அரசியலில் சசிகலா பெற்றிருக்கும் தேர்ச்சியையை காண்பிக்கிறது.
2011-ல் அ.தி.மு.க. விலிருந்து ஜெயாவால் வெளியேற்றப்பட்ட சசிகலா சென்னையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், கட்சிக்கு பெரிய எதிர்காலம் இருக்கும் நேரத்தில் அவர் கட்சி சுமையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் என்று பூடகமாக கூறினார்.
இருப்பினும் சசிகலாவிற்கான கால அவகாசம் குறைந்துகொண்டேப் போகிறது. அ.தி.மு.க. தலைமை சசிகலாவுடனான தொடர்புக்கு தடைவிதித்ததுடன் அவரை தொடர்புக்கொள்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலருக்கும் வெளிப்படையாக சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தயிரியமில்லை. கட்சியிலிருந்து வெளியேற்றப்ப்ட்டுவிடுவோம் என்ற பயம் சசிகலாவுக்கு ஒரு பெரும் தடைக்கல்லாக உள்ளது.

நேற்றோ, இன்றோ, நாளையோ சசிகலாவுக்கு அ.தி.மு.க. வில் இடமில்லை – ஜெயகுமார்
கட்சியை ஸ்தாபித்த எம்.ஜி. இராமசந்திரனும், முன்னாள் கட்சி தலைவி ஜெயலலிதாவும் கட்சி உறுப்பினர்களுக்க்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவுமே வாழ்ந்தார்கள். அதே போல் இப்போதும் அவர்கள் கட்சியையும், கட்சி உறுப்பினர்களையும் காப்பார்கள் என்று சசிகலா கூறினார். எம்.ஜி.ஆர். மற்றும் முக்கிய் திராவிட தலைவரான அறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் சசிகலா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்களை மூடி தியானித்து மலரஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் ஒரு கோவிலில் வழிபாடும் நடத்தினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயா மற்றும் தன்னுடைய இரண்டு உறவினர்களுடன் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து வெளிவந்து பலமாதங்களுக்குப் பின் இப்போதுதான் பொதுவெளியில் தோன்றி தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அவருடைய தீவிர ஆதரவாளர்களால், “புரட்சித் தாய் சின்னம்மா”, “கழக காவல் தெய்வம்”, “தியாக தலைவி” என்றக் கோசங்களுக்கிடையில் வரவேற்கப்பட்டார்.
அவர் பயணித்த காரில் அ.இ.அ.தி.மு.க. கொடி ஏற்றபட்டிருந்ததுடன் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. கொடிகளை அசைத்து அவரை வரவேற்றனர்.
பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் பொதுகருத்தை திரட்டுவதற்காக தமிழகம் முழுவதும் தான் பயணம் செய்யவிருப்பதாக சசிகலா அறிவித்தார். அ.தி.மு.க. வின் செய்தித்தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் இதை கடுமையாக விமர்சித்தார்.
“புரட்சித் தாய்” என்ற அடைமொழியானது ஜெயா மாதிரி ஒரு பிம்பத்தை சசிகலாவுக்கு அ.தி.மு.க. கட்சித்தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக மிகக் கவனமான கணக்கு கூட்டல்களுக்குப் பின் தேர்ந்தெடுபட்டது ஆகும். இது மிகவும் நுட்பமான நகர்வு
இருப்பினும் ஜெயக்குமார், அ.தி.மு.க. வின் கொடியை உபயோகிப்பதற்கோ, தன்னை கட்சியின் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கும் பெயர் பலகையை திறப்பதற்கோ சசிகலாவுக்கு எந்த உரிமையுமில்லை என்றுக் கூறினார். மேலும் நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் சென்று அவர் அஞ்சலி செலுத்தியது மக்கள் மத்தியிலும் கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார். ஏராளமான பேர் தினமும் ஜெயாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். சசிகலாவும் அவர்களில் ஒருவர். அவரின் இந்த வருகையை யாரும் வரலாற்ற்கு நிகழ்வாக பார்க்கப் போவதில்லை. அவரின் இந்த வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
நேற்றோ, இன்றோ, நாளையோ சசிகலாவுக்கு அ.தி.மு.க. வில் இடமில்லை என்று ஜெயகுமார் தெரிவித்தார். கட்சியை கைப்பற்றுவதற்கான அவரது முயற்சி ஒரு பகற்கனவு அமையும் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு அரசியல் நாடகங்கள் அரங்கேறும் தமிழ்நாட்டில் ஜெயாவின் அரசியல் வாரிசாக தன்னுடைய பிம்பத்தை தொடர்ந்து கட்டியமைப்பதன் மூலம் கட்சியின் மையப்புள்ளியாக தன்னை நிலைநிறுத்த சசிகலா தொடர்ந்து முயலுவார். இந்த முயற்சி வெற்றிபெறுவதற்கு பலகாலம் ஆகலாம். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரும் தடையாக இருப்பார். ஆனால் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்வியானது சசிகலா ஆதரவாளர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இரு முகாமை சேர்ந்தவுளுக்கிடையில் கட்சியில் தங்களுக்கான அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
Read in : English