Site icon இன்மதி

மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா?

Read in : English

அன்புள்ள விவசாயிகளே! கடந்தவார பத்தியில் காங்கேயம் மாடுகள் குறித்து எழுதியிருந்ததை வாசித்த பலர் காங்கேயம் மாடுகள் மட்டும் தான் இயற்கை வேளாண்மைக்குக்கு ஏற்றதா? அப்படியானால் மற்ற நாட்டு மாடுகள் பயனற்றவையா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். இவர்கள் அனைவரின் கேள்விளுக்கும் பதில்சொல்லும் விதமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் தொழில்முனைவோரின் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

எஸ். விநோத் ரெட்டி, பிஎஸ்சி படித்து முடித்ததும், தொடக்கத்தில் தன்னுடைய சிறு பண்ணையில் வேலை செய்ய ஆரம்பித்தார். பாரம்பரிய நாட்டு இனத்தைச் சேர்ந்த  புங்கனூர் பசுக்கள் நான்கினை வாங்கினார். அந்த நாட்டு மாடுகள் தான் இயற்கை வேளாண்மைக்கு ஏற்றது; அதுதான் விவசாயிகளை தற்கொலையிலிருந்து விடுவிக்கும் என்பது அவருடைய அழுத்தமான நம்பிக்கை. அவரைப் பொருத்தவரை, ஒரு விவசாயி எல்லா செலவுகளையும் தவிர்க்க விவசாய  நிலத்துக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் தானே தயாரித்து தன்னுடைய பண்ணையில் சேமித்து வைக்க முடியும் என நம்பினார்.

தற்போது பசுக்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு விநோத், பற்பசை, வரட்டி, பாத்திரம் கழுவும் திரவம், முகப்பூச்சு, பினைல், சாண-செங்கல், வலிநீக்கி எண்ணெய், திருநீறு, கொசுவிரட்டி,  மாலைகள் என 18 வகையான பொருட்களைத் தயாரித்து வருகிறார். அவற்றை agriculturalinformation.com  மற்றும் indiamart.com ஆகிய இணையதளங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெங்களூரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூலம்  180 வடிவங்களில் வரட்டிகளை தயாரித்துள்ளார்.

நமது நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற பிரத்யேகமான நாட்டு வகை மாடுகள் உள்ளன. இந்த வகை நாட்டு மாடுகளுக்கு ஜெர்ஸி அல்லது கலப்பின மாடுகளுக்கு கொடுக்கப்படும் தனிக் கவனத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தற்போது இயற்கை வேளாண்மை செய்யும் ஒரு விவசாயியிடம் ஒரு நாட்டு மாடு இருந்தால் அவரால் இரண்டு ஏக்கர் நிலத்துக்கு அதிக  செலவில்லாமல் விவசாயம் செய்ய முடியும். இந்த உதாரணத்தை சித்தூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இங்கிருந்து 80 கிலோமீட்டர் தூரம் தொலைவில் உள்ள தெலங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்கள் இங்கு வந்து பார்வையிடுவது நல்லது.

நாட்டு மாடுகளை வளர்ப்பது விவசாயிகளுக்கு இரு வழிகளில் உதவுகிறது. ஒன்று, இயற்கை வேளாண்மையில் அவருக்கு உதவி செய்கிறது. இரண்டு, ஒரு நாட்டு மாடுகளை வளர்ப்பதன் மூலம் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்கிறார். ஏற்கெனவே பலநூறு வகை நாட்டு மாடுகள் அழிந்துவிட்டன. பல அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இன்று புலிகளையும் புறாக்களையும் தெருநாய்களைக் காக்கவும் குரல் கொடுக்க பல அமைப்புகள் உள்ளன. ஆனால், விநோத், அல்லது கார்த்திகேய சிவசேனாதிபதி போல் நாட்டு மாடுகளைக் காக்க யாரும் முன்வராதது துயரமானது.

விநோத், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அவருடைய ஆராய்ச்சி என்னை பல இடங்களுக்கு பயணம் செய்ய வைத்து பல விவசாயிகளைச் சந்திக்க வைத்தது. .அவர்களிடம் கேட்ட கேள்விகளின் மூலம் தெரிய வந்த உண்மை என்னவென்றால் கடன் தான் விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணம்.

விவசாயிகள் சிறு கடைகளில் குறைந்த வட்டியில் கடனுக்கு உரங்களை வாங்குகின்றனர். பருவமழைப் பொய்த்துப் போகும் காரணத்தால், பயிரை இழந்து நஷ்டமாகி மீண்டும் கடனுக்கு இடுபொருட்களை வாங்குகின்ற்னர். பிறகு அதே இழப்பு தொடர்வதால் அவர்களால் கடனைத் திருப்பி செலுத்த முடிவதில்லை. இந்த நிலைமையை மாற்ற விநோத் விரும்புகிறார்.

எனவே, நண்பர்களே! விநோத்தைத் தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். அவர்கள் செய்து காட்டும்போது நம்மால் முடியாதா? நமது பண்ணைகளில் நாட்டு மாடுகளை வளர்ப்பதைத் தவிர்ப்பதற்தோ அல்லது தாமதம் செய்வதற்கோ எந்தவிதக் காரணமும் இல்லை. ஒரே காரணம் சோம்பல் அல்லது அதன் மீது மனதை ஈர்க்கவில்லை என்பதே. விவசாயிகள் வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழ்வதற்கு, நாட்டுமாடுகளை வளர்ப்பதே சிறந்த தீர்வு. சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. ஏதாவது அரசு திட்டங்கள் வரும் என்று காத்திருக்க முடியாது.

விநோத்தை தொடர்புகொள்ள:

மெயில்:svreddy1982@gmail.com 

அலைபேசி: 09440230052.

முகவரி: எஸ். விநோத் ரெட்டி,

பிரக்ருதி, எகுவா தவனம்பள்ளி கிராமம், தவனம்பள்ளி மண்டலம்,

சித்தூர் மாவட்டம் – 517131

Share the Article

Read in : English

Exit mobile version