Read in : English
அரசியல் ரீதியாக பலவித இக்கட்டுக்களை சந்தித்து வரும் அதிமுக, 2019 லோக்சபாதேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவே நினைத்தது. ஆனால் இப்போதுபாஜகவுடன் இணைந்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் பாஜக தரப்பிலிருந்துதொடர்ந்து வரும் அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்ல, லோக்சபா தேர்தலில் பாஜகவுடன்இணைந்து போட்டியிட அதிமுக முடிவு செய்ததாகத் தெரிகிறது.
அதிமுக, ஜெயலலிதா பின்பற்றிய முறையைக் கடைபிடித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியிடன் இணையாமல் 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 39 இடங்களில் 37இடங்களைப் பிடித்து பெரு வெற்றியை அடைந்தது. இப்பொழுதும் தனித்து போட்டியிட்டால் தான் ஓர் அளவிற்கு வெற்றியை பெறலாம் என்று அதிமுக நினைக்கிறது. திமு.க கூட்டணிக்குச் செல்லும் மைனாரிட்டி ஒட்டுக்களை தடுத்து அதிமுகவசம் திருப்புவதே அவர்கள் நோக்கம். பாஜகவுடன் கூட்டணி ஏற்படாமல் இருந்தால் 2014 லோக்சபாதேர்தல் மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல் குறிப்பிடத்தகுந்த இடங்கள்அதிமுகவுக்கு கிடைக்கும் என நம்புகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொள்வதால், பாஜகவுக்கு தமிழ்காத்தில் இருக்கும் 3 சதவீத ஓட்டுவங்கியை விட அதிகமிருக்கும் மைனாரிட்டிகள் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என அதிமுக அஞ்சுகிறது.
இருந்தபோதும், அதிமுக தொடர்ந்து வருமான வரி மற்றும் அமலாக்க இயக்குநரக சோதனை, சிபிஐசோதனை என பல்வேறு சோதனைகளுக்குள்ளானது. குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் தொடர்புடைய தாக கூறப்படுகின்ற குட்கா ஊழல் வழக்கில், மத்திய அரசின் நிர்பந்தம் தெரிகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக்கூறப்படும் 95 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் அவர் பெயர் பலமாக அடிபட்டபோதும், அவரைஅமைச்சரவையில் இருந்து நீக்க அதிமுக அரசு தயக்கம் காட்டியது.
அதிமுக தற்போது நூழிலை வித்தியாசத்தில் பெரும்பான்மையாக உள்ளது. ஆனால் திமுகவைபொறுத்தவரை இதைக் கேள்விக்குள்ளாக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதிமுக அரசுமைனாரிட்டி அரசு, ஆகையால் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுக்க வேண்டும் எனகோரி வருகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவுக்கு மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவுஅவசியமாகிறது. ஆகையால், பாஜக கூட்டணிக்கு தலையசைக்கிறது.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக விரும்பியது. காரணம், பலதொலைக்காட்சிகள் நடத்திய சர்வேயில் லோக்சபா தேர்தலில் திமுக மூன்றில் இரண்டு பங்குஇடங்களை வெல்லும் என்று கூறின. ஆனால், திமுக காங்கிரஸுடன் தன்கூட்டணியை தொடர்வதாகக் கூறிய காரணத்தால் பாஜகவுக்கு திமுகவுடன் சேர்வதற்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் கட்சியுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பாஜகவிரும்பினாலும்,ரஜினி கட்சித் தொடங்குவதற்கு இன்னும் தயக்கம் காட்டி வருகிறார். 2014 லோக்சபாதேர்தலில் கூட்டணி கட்சிகளாக (பாமக, தேமுதிக, மதிமுக) இருந்த கட்சிகளில் மதிமுக, திமுககூட்டணிக்குச் சென்றுவிட்டது. 2016 சட்டசபை தேர்தலில் பாமகவும் தேமுதிகவும் வெவ்வேறுகூட்டணியுடன் இணைந்து பாஜகவை விட்டு விலகினர்.
ஆகையால், இப்போது பாஜகவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதிமுக மட்டும் தான். அதன் மூலம் சிலஇடங்களையாவது பெற்று வடக்கில் இழக்க உள்ளதை ஓர் அளவிற்கு சரிசெய்யலாம் என நினைக்கிறது பாஜக. 2014 ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு இடங்களைப்மட்டும் பிடித்தது; அதில் ஒர் இடம் பாமகவுக்குச் சென்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனுடான அறிவிக்கப்படாத சந்திப்பில், பாஜக தமிழகத்தில் லோக்சபா தேர்தலில்போட்டியிட விரும்பும் 20 தொகுதிகள் பட்டியலைக் கொடுத்துள்ளது. அதைப் பார்த்த அதிமுகஅதிர்ச்சியுற்றுள்ளது. காரணம், அவற்றி பல தொகுதிகள் அதிமுக தலைவர்களின் தொகுதி ஆகும். பாஜகஇப்போது தன் விருப்பத்தொகுதிகளின் பட்டியலை 15 என சுருக்கிக்கொண்டுள்ளதாக தெரிகிறது..
அதேபோல், பாஜக 15, அதிமுக 25 என்று அறிவிக்கப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிமுக 25இடங்களில் தங்களுடன் இணையும் சிறிய கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். பாஜகவும் தன் பக்கமுள்ள சிறிய கட்சிகளுக்கு (புதிய தமிழகமும் அதில் ஒன்று) இடங்களைப் பிரித்துக்கொடுக்கலாம். ளுபாஜக,புதுச்சேரியில் ஓரிடத்தையும் பெறும் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்த ஏற்பாடு உறுதியானால், தமிழ்நாட்டில் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டு சேர்ந்தும், பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை பெரும். அதிமுக தலைவி ஜெயலலிதா, 1998-ல் பாஜகவுக்கு 5 தொகுதிகளையும், 2004-ல் 6 இடங்களை மட்டும் வழங்கினார். தற்போது 6 என்ற எண், இரு மடங்காக அதிகரிப்பதுதமிழகத்தில் காலூன்ற போராடும் பாஜகவுக்கு இது அமைந்த பெரிய வாய்ப்பு. பிரதமர் மோடி ஜனவரி மாத இறுதியில் தமிழகத்துக்கு வருகைபுரியும்போது கூட்டணியை குறித்தானஅறிவிப்புகள் வெளியாகலாம்.
Read in : English