Site icon இன்மதி

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி

Read in : English

டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காரணம், அண்மையில் அதிமுக குடும்பத்திலிருந்து திமுக சென்றது அநேகமாக செந்தில் பாலாஜிதான்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக, மூன்றாக பிளவுபட்டபோதும் எந்த அதிமுகக்காரரும் திமுகவுக்கு செல்ல வேண்டும் என நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரை திமுக  ஒரே நிரந்தர  எதிரி.

கடந்த காலத்தில் பல அதிமுக தலைவர்கள் சில அமைச்சர்கள் உள்பட திமுகவுக்குச் சென்றுள்ளனர். குறிப்பாக நாஞ்சில் மனோகரன், ஜி ஆர் எட்மண்ட், எச்.ரகுபதி, கருப்பசாமி பாண்டியன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கே.பி.ராமலிங்கம், கண்ணப்பன், எஸ்.முத்துசாமி,சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அடங்குவர். இவர்கலில் சிலர் எம்ஜிஆர் காலத்திலும் சிலர் ஜெயலலிதா காலத்திலும் திமுகவுக்கு சென்றனர். சிலர் பின்னர் அதிமுகவுக்குத் திரும்பியும் உள்ளனர்.

இருந்தாலும், ஜெயலலிதா மறைந்த இரண்டாண்டு காலத்தில் அதிமுகவுக்குள் பல முரண்கள் இருந்தாலும் ஒரு எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ கூட கட்சியை விட்டு விலகி திமுகவில் சேர்ந்தது இல்லை. இது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும் தினகரனுக்கும் ஆறுதலாக இருந்தது. திமுக பல வழிகலில் முயன்றாலும் அதிமுக அடிப்படை உறுப்பினர் திமுகவை எதிரியாகக் கருதி தள்ளியே வைத்திருந்தனர். மு.க.ஸ்டாலின் அதிமுகவில் சிலர் எதிரி மனோநிலையைத் தாண்டி திமுகவுக்கு வருவார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை.

செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றது, அதிமுகவுக்கு சாதகமாக  இருந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக அதிமுக தங்கள் கட்டுக்கோப்பை சரிபார்க்க வேண்டிய தேவையும் உண்டாகியுள்ளது.

செந்தில் பாலாஜி  குறித்து பேசிய தினகரன், எதிரிகளுடன் (திமுக) சேராமல் அவர் தன்னுடைய துரோகிகளுடேனே (அதிமுக) சேர்ந்திருக்கலாம் என்றார். திமுகவின் முதல் வெற்றியாக செந்தில் பாலாஜி இருந்தாலும், இன்னும் சிலர் வரக்கூடும் என்ற நம்பிக்கையில்  திமுக வேட்டையைத் தொடரலாம். மேலும், சில அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் செந்தில்  பாலாஜி வழியைப் பின்பற்றி திமுகவுக்கு வரலாம். செந்தில் பாலாஜி தன் கட்சி தாவல் மூலம், அமமுகவில் எதிர்காலம் இல்லை; அதிமுகவில் தொடர்வதால் அங்கு வெற்றிக்கான உத்திரவாதம் இல்லை என்பதை  எடுத்துக்காட்டுகிறார். அதேவேளையில் திமுக  வெற்றிக்கு  உத்தரவாதம் அளிக்கும் பசும்புல்வெளி என்பது அதிமுகவினருக்கு செய்தி சொல்கிறார். அதிமுக தன் தொண்டர்களை கட்டுக்கோபாகவும் ஒன்றாகவும் வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. காரணம் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவுள்ளன..  செந்தில் பாலாஜி போன்ற தனி நபர்களை எளிதில் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த அதிமுக, இப்போது அவர்கள் திமுகவின் துணையோடு வந்தால் தேர்தல் களமே மாறிவிடும் என்று உணர்கிறது.

இந்த நிலையை  அதிமுக தவிர்த்து இருக்கலாம். அதிமுக 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து அவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது எப்படி  சாத்தியமாகும்? தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை அதிமுக கட்சிக்குலேயே வைத்த்துக்கொண்டு, கட்சியின் கட்டுப்பாட்டின் படி, கொறடாவின் உத்தரவு ப்படி நடக்க செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, பிறகு அவர்களை அழைப்பது, என்கின்ற நடவடிக்கை வெற்றிபெறவில்லை.  மீண்டும் தாய்க்கழகத்தோடு இணைக்க அதிமுக தூதுவர்களை அனுப்பலாம். ஆனால் அவர்கள் தாய்க்கழகத்துக்குத் திரும்புவார்களா என்பது கேள்விக்குறி தான்.

Share the Article

Read in : English

Exit mobile version