Read in : English
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது, மத்தியில் ஆளும் பாஜகவை பெரும்போராட்டத்துக்கு பிறகு பலவீனப்படுத்திய முயற்சி றென்றே கருதப்படுகிறது.ஆனால், ஒட்டு எண்ணிக்கையின் போக்கு, காங்கிரஸ் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் பல்வேறு மாநிலங்களில் பாஜகவை வெல்ல முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளது. ராகுல்காந்தி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியபோதும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மாயாவதியின் கட்சிக்கு பெரும்பாலான இடங்களை விட்டுத்தர விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு மத்தியபிரதேசத்தில் 25 இடங்களைத் தர முன்வந்தது. ஆனால் அக்கட்சி 40 இடங்கள் வேண்டுமெனக் கோரியது. மிகமுக்கியமாக, பகுஜன் சமாஜ் கேட்டா கோரிய இடங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்த இடங்கள் என்பதால் அக்கட்சி அதிருப்தியடைந்தது.
இறுதியான ஆய்வில், காங்கிரஸ் ம.பி மற்றும் ராஜஸ்தானில் நூழிலையில் வெற்றிபெற்றுள்ளது. அதற்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு நன்றி கூறவேண்டும். மத்திய பிரதேசத்தில் வெற்றிபெற்ற மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இடம் கிடைக்காததினால் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளனர். இப்போது காங்கிரஸை அரசை ஆதரிப்பதாகக் கடிதம் கொடுத்துள்ளனர். வெற்றிபெற்ற ஒரேயொரு சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏவும் காங்கிரஸுக்கு ஆதரவு என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசத்தில் 114 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது (மொத்தம் 230 இடங்களில் மிகச்சரியாக பாதிக்குப் பாதி பெற ஒரு சீட் குறைவாக பெற்றுள்ளது, 109 இடங்களில் வெற்றிபெற்ற பாஜகவை விட 5 இடங்களே அதிகம் பெற்றுள்ளது) ஆதரவளித்த நான்கு எம்.எல்.ஏக்களைச் சேர்த்து காங்கிரஸின் ஆதரவு எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இருந்தும் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்களின் ஆதரவை கோரியது.காரணம் அப்போதுதான் சட்டசபையில் காங்கிரஸ் வசதியான பெரும்பான்மையை பெறமுடியும். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மத்த்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவும் இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அங்கு பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதால் தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவை தொடர்ந்து எதிர்க்கும் மாயாவதியுடன் வட இந்தியாவில் கைகோர்த்தால் தான் பாஜகவை 2019 பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி உணரவேண்டும். அதே நேரம், மாயாவதி கட்சியும் தனது பலத்தை மீறிய இடங்களை கோரும் போக்கை கைவிட்டாகவேண்டும். தான் 2013 ல் பெற்ற இடங்களை விட இந்த முறை குறைவான இடங்களில் தான் பாசக வென்றதையும் மாயாவதி உணர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை 2013-ல் பெற்ற 41.6 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆனால் பாஜகவின் வாக்கு வங்கி 42.3 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக சரிந்துள்ளது. பாசகவுடன் கூட்டணி அமைத்த அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ்(சத்தீஸ்கர்) கட்சி வெறும் 7.5 சதவீதமே வாக்குகள் பெற்றுள்ளது. முரணாக, சில அரசியல் விமர்சகர்கள் ஜனதா காங்கிரஸ் (சத்தீஸ்கர்) கட்சி காங்கிரஸின் ஓட்டுக்குக்களைப் பிரித்து பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வழிவகுக்கிறது என கூறினர்.ஆனால் பாஜகவின் ஓட்டுக்களை இக்கட்சி பிரித்தது என்பதுதான் உண்மை.
மத்தியில் பாஜகவை ஆகற்றும் காங்கிரஸின் திட்டம் பகுஜன்சமாஜ் கட்சியையும் சார்ந்திருந்தது. காரணம் உ.பியில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய இரண்டு கட்சிகளும் நெருங்கிய உறவைக்கொண்டுள்ளன.அவ்வுறவின் மூலம் அங்கு 80 லோக்சபா இடங்களில் பெரும்பான்மையான இடங்களை அவை கைப்பற்றக்கூடும் என்பதும் ஒரு காரணம். காங்கிரஸ் கட்சி, இவ்விரு கட்சிகளுடன் சேர்ந்து உபியில் போட்டியிடவே விரும்பியது.ஆனால் பகுஜன் சமாஜும் சமாஜ்வாதிகட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய இடங்களை பகிர்ந்தளிக்க விரும்பவில்லை. இருந்தும் காங்கிரஸ், உபியில் சிறு பங்குதாரராக இருக்கவும் தயாராக இருந்தது.
எனவே, பாசகவும் காங்கிரஸ் கட்சியும் பல மாநிலங்களில், குறிப்பாக உத்தர பிரதேசம், பஞ்சாப், எம்.பி. , ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, ஆகிய இடங்களில் கூட்டணி அமைத்தால் தான் மத்தியில் மாற்றரசை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்து செயல்படுவார்களா?
Read in : English