Site icon இன்மதி

மு.க.ஸ்டாலின் – சோனியா சந்திப்பு பொதுத்தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம்!

Read in : English

பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கவேண்டிய சூழலில் இருக்கும் திமுக, காங்கிரஸுடனான கூட்டணிக்கு மறு உத்திரவாதம் அளிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது தங்கை கனிமொழியும் சந்தித்துள்ளனர். சோனியாவின் பிறந்தநாளையொட்டிய சந்திப்பாகத் தோன்றினாலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான சந்திப்பாகத்தான் கருதப்படுகிறது.

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புது கூட்டணியை எதிர்பார்க்கும் நேரத்தில் திமுக தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தது அரசியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாபகப் பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

சமாஜ்வாதி  மற்றுரும்  பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வெளியே இருக்கின்றன.. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக திமுக தொடர்ந்து இருந்து வருகிறது. 2016 -ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸுடன் இணைந்தே   திமுக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்குறிப்பிடத்தக்கது, திமுக பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து பேசியபோது,  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் கூட்டணிக் கட்சிகள் என்றும் மற்றவர்கள் தற்போது தோழமை கட்சிகள்,  என்று பேசினார்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியானது  திமுக, தேசியவாத காங்கிரஸ், ஜனதா தள்(எஸ்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அக்கட்சிகள் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது. அதேவேளையில் கூட்டணிக்கு வலுசேர்க்கும் மற்ற கட்சிகளுடனும் கூட்டணி பேச்சு வார்த்தையைத் தொடங்கும்.

பொதுத்தேர்தலில் ராகுல் காந்தியை பிரதம மந்திரி வேட்பாளராக முன்னிறுத்தினால், மு.க.ஸ்டாலின் அதை திறந்த மனதுடன் ஆதரிக்க மாட்டார் என்றே கடந்த காலத்தில் கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியே, ராகுல் காந்தி  தான் பிரதமர் வேட்பாளர் என திட்டவட்டமாக அறிவிக்கவில்லை   என திமுகவினர் சுட்டிகாட்டிவந்தனர்.  ராகுல் தான் பிரதம வேட்பாளர் என்ற விஷயத்தை திமுக அடுத்தடுத்த காலத்தில் முன்னிறுத்தகூடிய சூழல் உருவாகலாம்.

திமுக  ராகுல் காந்தியை  பிரதம வேட்பாளர் என அங்கீகரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அப்போதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக மற்ற கட்சிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்த உதவியாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி கருதுகிறது. அந்தவகையில் நேற்று டெல்லியில் நடந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் திமுக ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக ஒத்துக்கொண்டதையொட்டிய ஒரு முன்னோக்கிய நகர்வாகவேக் கருதப்படுகிறது.

வெளியுலகத்துக்கு, சோனியா காந்தியை பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையெடுப்பு நிகழ்வுக்கு அழைக்கும் காரணத்துக்காக சந்தித்ததாக திமுக சொல்கிறது. இது, கூட்டணிக்கான அஸ்திவாரத்தை பலப்படுத்தும் சந்திப்பு என்பதே நிஜம். புதிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்க முதல் அடியை காங்கிரஸ் மற்றும் திமுக எடுத்துள்ளன.

Share the Article

Read in : English

Exit mobile version