Site icon இன்மதி

நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே!

கோப்புப் படம்

விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில்  அம்மாநில அரசுகள் அதிக விலையுள்ள விவசாயக் கருவிகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிங்களின் துயரங்களை அரசு உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. நெல் அறுவடைக் காலம் நெருங்குவதாலும் புதுதில்லியின் காற்று  மாசுபாடு பிரச்சினைக்கு பயந்தும் அம்மாநில அரசுகள் நெல்  தூர்களை எரிப்பதற்குத் தீர்வாக இயந்திரங்களை விற்றுகின்றன.

நெல் அறுவடைக் காலம் உச்சத்தில் இருப்பதால், பஞ்சாப் அரசு 27, 972 பண்ணை இயந்திரங்களை விற்பதற்கு இலக்கு நிர்ணயித்து விற்றுக்கொண்டுள்ளது. அதில், விதைக்கும் கருவி, அறுவடை இயந்திரம், உழவு கருவி, அனைத்து இயந்திரங்களும் ஒருங்கிணைந்த கருவி என பல கருவிகளை விற்பனை செய்து வருகிறது.  ஹரியானாவிலும் இதேபோல், 40,000 கருவிகள் ஏற்கனவே 900 வாடகை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இக்கருவிகளை நேரடியாக விலைக்கு வாங்கியுள்ளனர். ’ஹேப்பி சீடர்’ (Happy Seeder) என்ற விதைப்புக் கருவி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடனும் கூட்டுறவு சங்கங்கள் அல்லது விவசாயக் குழுக்களுக்கு 80 சதவீத மானியத்துடனும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்பு, பாலீத்தீன் குடில் (Poly houses) அமைப்பதற்கு ரூ.25 லட்சம் வரைம் மானியம் வழங்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட குடில்கள் தற்போது இயங்காமல் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

விவசாய கருவி உற்பத்தியாளர்களுக்கு பெரிய கொண்டாட்டம்தான் இது. பல ஆண்டுளாக தங்களது இயந்திரங்களை விற்கப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு நெல் வயலில் மிஞ்சி இருக்கும் தூர்களை எரிக்கும் பிரச்சினை கடவுளே அவர்களுக்கு அளித்த வாய்ப்பாகியுள்ளது. பஞ்சாப்பில் 1 லட்சம் டிராக்டர்கள் தேவைப்படும் நிலையில் அங்கு ஏற்கனவே 4.5 லட்சம் டிராக்டர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு அடுத்து இன்னொரு வகை இயந்திரங்களைக் கொடுத்து அவர்களின் சுமையை அதிகப்படுத்துவது ஏன் என்றுதான் புரியவில்லை. பஞ்சாபில் விவசாயிகள் அதிக கடனுடன் இருக்கக் காரணம் அவர்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் டிராக்டர்கள் கொடுத்து, அதன் மூலம் பொருளாதாரச் செலவுகளும் அதிகரித்து கடனும் அதிகரித்தது. நெல் தூர்களை எரிப்பது என்பது அதிகபட்சம் மூன்று வாரங்களுக்கு நிலவும் பிரச்சினை; ஆனால், அதன் பிறகு இந்த இயந்திரங்கள் ஆண்டு முழுக்க அப்படியே சும்மா கிடக்கும்.

விவசாயக் கருவிகளை வாங்குவதற்கு மானியம் தருகின்ற நிலைப்பாடு, விவசாயம் என்று வருகிறபோது அரசின் கொள்கைகள் தொலைநோக்குப் பார்வையில் இல்லாததையே காட்டுகிறது. விவசாயிகளின் பேரில், பண்ணைக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவுவதுதான் அரசின் நோக்கமோ என்று எண்ணத் தோன்றுகிறது. முன்பு, பாலீத்தீன் குடில் (Poly houses) அமைப்பதற்கு ரூ.25 லட்சம் வரைம் மானியம் வழங்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட குடில்கள் தற்போது இயங்காமல் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுவும் ஒருவகையில் மிகப் பெரிய ஊழல்தான்.

பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார். வயலில் அறுவடைக்குப் பிறகு இருக்கும் நெல் தூர்களை எரிக்காமல் அதனை அப்புறப்படுத்துவதற்கு மத்திய அரசிடமிருந்து 2000 கோடி ரூபாய் முதலீடாகக் கேட்டார். ’’அரசிடம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 100 ரூபாய் கேட்டோம்; மொத்தமாக சுமார்  2000 கோடி ரூபாய் தேவைப்படும்’’ என்றார். அவர் கூறியது மிகச் சரி. மத்திய அரசிடம் பணம் இல்லை என்று அவருக்கு பதில் கூறப்பட்டது. அதேசமயம், புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க 6.9 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்போது அதில் ஒரு சிறு தொகை ஏன் நெல் தூர்களை எரிப்பதைத் தடுக்க ஒதுக்கீடு செய்யக் கூடாது?  மேலும், சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களின் அகவிலைப் படி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கான கூடுதல் செலவுக்காக  அரசு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. எல்லாவற்றுக்கும் செலவு செய்யும் அரசு, விவசாயம் என்று வரும்போது மட்டும் சிவப்புக் கொடி தடை சொல்லி விடுகிறது.

சுற்றுச்சூழலில் ஏற்படும் பிரச்சினைகளை விவசாயிகள் அறிந்துள்ளனர். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களுக்கு பொருளாதார உதவி தேவை. பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வயலில் அறுவைப் பிறகு வயலில் இருக்கும் தூர்களை எரிக்காமல் அதனை அப்புறப்படுத்குத்த ஒரு ஏக்கருக்கு ரூ.6,000 கேட்கின்றனர். இது ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் முதலீடுதான். ஆனால் இதனை நேரடியாக விவசாயிகளிடம் கொடுப்பதற்கு அரசு தயங்குகிறது? பஞ்சாபில்  12.5 லட்சம் விவசாயிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் சட்டத்தின் கீழ் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தான். இந்த திட்டத்தின் கீழ் வரும் நிதியில், 4,000 கோடி ரூபாயை பயன்படுத்தப்படாமல் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வைக்கோல் மேலாண்மையையும்  கொண்டு வந்தால் பஞ்சாப்பில் வேலை இல்லாமல் இருக்கும் விவசாயக் கூலிகளுக்கு வேலை வாய்ப்பு  கிடைக்கலாம். வயல்களில் தூர்களை எரிப்பதைக்  கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.

இக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்

Share the Article
Exit mobile version