Read in : English
பிரபலமான மனிதர்களின் பெயர்களைச் சாலைகளுக்கு சூட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வெமூர் வட்டத்தில் ஒரு சாலைக்கு காய்கறியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா? ஆமாம், காய்கறியின் பெயரில்தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையும் அந்த கிராமமும் ’கத்திரிக்காய் தெரு’ என்றே அழைக்கப்படுகிறது. அக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னையில் மொத்த விலை சந்தையிலிருந்து செல்லும் பல காய்கறி வியாபாரிகளுக்கும் கத்திரிக்காய் தெருவைப் பற்றி நன்கு தெரியும். இவர்கள் யாருக்கும் அக்கிராமத்தின் உண்மையான பெயர் தெரியாது. காய்கறியின் பெயரில் எப்படி இவ்வூருக்கு பெயர் வந்தது? அதுவும் கூட சமானிய மனிதர்கள் உற்பத்தி செய்யும் பொருளின் பெயரால் எப்படி அமைக்கப்பட்டது?
அதைத் தெரிந்துகொள்ள 20 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அக்கிராமம் நம் நாட்டில் பல கிராமங்களைப் போல வேதி உரங்களைப் போட்டு வேளாண்மை செய்து வந்தனர். அங்கிருந்த மண், காய்கறிகள் வளர்வதற்கு ஏற்றதாக இருந்த காரணத்தால் விவசாயிகள் வழக்கம் போல் கத்திரிக்காய் மற்றும் பிற காய்கறிகளை பயிர் செய்து வந்தனர். ஆனால், அதனை சந்தைப்படுத்துவது அவர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. பொருட்களை வாங்குபவர்கள் கிலோ கணக்கில் கேட்காமல் டன் கணக்கில் கேட்டார்கள். ஆகையால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து காய்கறிகளை பயிர் செய்தனர். காலையில் லாரிகள் மூலம் சென்னைக்கு காய்கறிகளை அனுப்பினர். சென்னை தான் அவர்களின் மிகப் பெரிய சந்தை. காய்கறிகளின் ஆயுட்காலம் மிகக் குறைவு. விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு வெறும் 6 ரூபாய் மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் காய்கறிகள் சென்னையை வந்தடைய 6 மணி நேரமாகும்.
ஆனால் விவசாயிகளுக்குக் கிடைத்த வருமானம், அவர்களுடைய தினக்கூலிக்கு தினக்கூட ஈடாகவில்லை. ‘’நாங்கள் பயிருக்குத் தேவையான உரம், பூச்சி மருந்து வாங்கவே 20,000 ரூபாயை செலவு செய்ய வேண்டிய சூழல். மூன்று மாத பயிரான காய்கறிகளுக்கு கிட்டத்தட்ட 35,000 ரூபாயை செலவு செய்தாலும் எங்களுக்கு கிடைத்தது வெறும் 18 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் தான். எங்கள் மொத்த வருமானத்தில் 70 சதவீதம் உரம் மற்றும் பூச்சி மருந்து வாங்கவே செலவானது’’ என்கிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த முனிரத்னம் நாயுடு என்ற விவசாயி.
‘’2000 ஆம் ஆண்டில் ‘வேர்டு’ தொண்டு நிறுவனத்தின் பொது செயலாளர் கே.கங்காதரம் எங்கள் கிராமத்தை பார்க்க வந்ததிலிருந்து இந்த நிலைமை மாறிவிட்டது. இன்று நாங்கள் அனைவருமே வேதி உரம் போடும் விவசாயத்திலிருந்து முற்றிலும் விலகி இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டோம். இப்போது எங்களுக்கு தேவையான இடுபொருட்களை நாங்களே தயாரிக்கிறோம். இதனால் எங்களுக்கு பணம் மிச்சமாகிறது’’ என்கிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கம்மா, மாறாத சிரிப்புடன். ‘வேர்டு” தொண்டு நிறுவனம் வளங்குன்றா வேளாண்மைக்காக செயல்பட்டு வருகிறது. கே.கங்காதரம் 40 கிராமங்களில் பயிற்சிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயிகளை அவர்களே தேவைப்படும் இடுபொருட்களை தயாரிக்க வைத்துள்ளார்.
‘’எங்கள் கிராமத்தையும் சுற்றுப்புறத்தையும் வேதி உரங்கள் அதிகம் போட்டு பாழ்படுத்திவிட்டோம். அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் தற்கொலை பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்தத் தற்கொலைகள், விவசாயிகள் உரம் மற்றும் வேதி இடுபொருட்களை வெளி சந்தைகளில் வாங்குவதற்கு கடன் வாங்க, அக்கடன் அதிகரித்து திருப்பி செலுத்தமுடியாததால் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டார்கள் . எந்த கடைக்காரரும் எதனையும் இலவசமாகக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் இதனை நிறைய விவசாயிகள் உணர்ந்துகொள்ளவில்லை. விவசாயிகள் பொருட்களை வட்டிக்கு கடனுக்கு வாங்கினார்கள். கடைக்காரர் விற்ற பொருட்களுக்கு கமிஷன் பெற்றுக்கொள்வார். ஆனால் விவசாயிக்க்கு என்ன கிடைக்கும்? என கேள்வி எழுப்புகிறார் முனிரத்னம்.
கத்திரிக்காய் ஓர் அதிர்ஷ்ட தேவதை. நான் அதனுடன் என் பணியை ஆரம்பித்து தொடர்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் கங்காதரம்.
‘’நான் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த பயிற்சிக்கு சென்றேன். அதனை ஆர்வமுடன் எங்கள் விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டேன். வழக்கம் போல் முதலில் அவர்கள் அதனை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் நான் முனிரத்னம் நாயுடுவுடன் இணைந்து பயணித்தேன். நானே பொறுப்பேற்றுக்கொண்டு அவரை பஞ்சகாவ்யா, ஜீவாம்ருதம், ஞானஜீவாம்ருதம், வேம்புக் கரைசல் போன்ற இடுபொருட்களை தயாரிக்க பயிற்சியளித்தேன். முதலில் முனிரத்னம் நம்பிக்கையற்றவராக இருந்தாலும் கங்காதரம் பொறுப்பெற்றுக்கொண்டதால் அதனை தயாரிக்கும் முறையை முயற்சி செய்து பார்த்தார். அதாவது இதனால் பயிர்கள் பாதிப்படைந்தால் அதனை விற்றால் என்ன விலை கிடைக்குமோ அதனைத் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் ஒத்துக்கொண்டார். ஜீரோ பட்ஜெட் முறை விவசாயம் பயனளிக்கிறது என்பதை முனிரத்னம் உணர்ந்ததும் மிகுந்த சந்தோஷமடைந்தார். காரணம் வெளியிலிருந்து பொருட்களை வாங்க வேண்டிய தேவை அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் மெதுவாக இந்த நடைமுறைக்கு மாறினாலும் இன்று 40 கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சித்தூர் பகுதியில் இதனை பின்பற்றுவதால் நாங்கள் வலுவாகவே உள்ளோம்’’ என்கிறார் கங்காதரம்.
கங்காதரம் இன்று இயற்கை விவசாயம் குறித்து ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்குபவராக இருக்கிறார். ‘’இது எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம்’’ என்றவர், தொடர்ந்து,’’ கத்திரிக்காய் ஓர் அதிர்ஷ்ட தேவதை. நான் அதனுடன் என் பணியை ஆரம்பித்து தொடர்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் கங்காதரம்.
இக்கிராமத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம், நான்கு வீதிகளும் வெமூர் கிராமத்தில் இருக்கும் 27 குடும்பங்கள் கான்கிரீட் வீடுகளை கட்டியுள்ளனர். அவைகளில் பழைய வீடுகளையோ டைல்ஸ் இல்லாத வீடுகளையோ பார்க்க முடியாது. அனைத்து வீடுகளிலும் டிஷ் ஆண்டனா உள்ளது. அதில் சில வீடுகளில் ஏர் கண்டிஷனரும் உள்ளது. ‘’இவை அனைத்தும் கத்திரிக்காயால் தான் சாத்தியமானது. கத்திரிக்காய் எங்களுக்கு தெய்வம்’’ என்று சிரிக்கிறார் முனிரத்னம்.
டாக்டர் கங்காதரமை தொடர்புகொள்ள: 09849059573,
உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய இ மெயில்: inmathieditor@gmail.com
Read in : English