Read in : English

கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், மத்திய அரசு தனது வரிக் கொள்கையை மாற்றி அமைக்காமலிருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என தெரிகிறது.  மத்திய அரசும், வரிக் கொள்கையை மாற்றி அமைக்கப் போவதில்லை என்ற தனது கருத்தையும் வெளிப்படையாக கூறிவிட்டது.

K.R.சண்முகம்

தங்கள் மாநில மக்களின் சுமையை குறைக்கும் விதமாக, ஆந்திரா அரசு ஒரு லிட்டருக்கு ரூ.2  ஐ வரிக்குறைப்பு செய்துள்ளது. இது போன்றே, ராஜஸ்தான் அரசு ரூ.2.5, மேற்கு வங்க அரசு ரூ.1 என வரிக் குறைப்பு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் இதுபோன்ற வரிக் குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து இரு நிபுணர்கள், இருவேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் கச்சா எண்ணெய் விலை $ 100 ஆக இருந்த போது, பெட்ரோல் விலையை ஏறாமல் குறைந்த விலையை தக்க வைப்பதற்காக பெறப்பட்ட கடனை அடைப்பதற்காக விலையைக் குறைக்கவில்லை என மத்திய அரசு நியாயப்படுத்துவதாக சென்னை பொருளாதார கல்லூரியின் பேராசிரியரான  கே.ஆர்.சண்முகம் கூறுகிறார். அவர், மேலும் கூறுகையில், பொதுவாக கலால் வரியை குறைப்பதன் மூலம் மாநில அரசுகள் விலையை குறைக்க முடியும்  என்கிறார்.

மாநில அரசின் முன்னிருக்கும் ஒரே தேர்வு என்பது, மானியத்தை நிறுத்துதல் மற்றும் பிற மாநிலங்களுக்கு உட்பட வழங்கும் நிவாரண நிதியுதவியை வழங்காமலிருத்தல் போன்றவை மட்டுமே.


ஏழாவது ஊதிய கமிஷனின் சிபாரிசுகளை அமல்படுத்தியதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. “அரசு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆனால், ஜி.எஸ்.டிக்கு பின்னர், தமிழக அரசானது, பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பியே இருக்கிறது. சமீபத்தில் தான் மதுபானத்தின் விலைகள் ஏற்றப்பட்ட நிலையில், மேற்கொண்டு இனியும் மதுபானத்தின் விலையை  தொடர்ந்து உயர்த்தினால், அதன் விற்பனை பாதிப்புக்குள்ளாகும்.  மாநில அரசின் முன்னிருக்கும் ஒரே தேர்வு என்பது, மானியத்தை நிறுத்துதல் மற்றும் பிற மாநிலங்களுக்கு உட்பட வழங்கும் நிவாரண நிதியுதவியை வழங்காமலிருத்தல் போன்றவை மட்டுமே. அதுவும் இல்லையென்றால் உலக வங்கியிடமிருந்து கடன் வாங்க வேண்டியது தான்” என்கிறார் அவர்.

மத்திய அரசு, தேவை மற்றும்  சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை மாற்றுவதன் மூலம்  விமானங்களுக்கு வழங்கும் எண்ணெய் விலையின் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஏனெனில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெட்ரோல்,  டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களுக்கு  உள்நாட்டு விலையில் சர்வதேச விலையை தரப்படுத்தி நிர்ணயித்த கொள்கை முடிவை மாற்றிக்கொள்ள இப்போதைய மத்திய அரசு தயாராக இல்லை.

இதனிடையே, சென்னை பல்கலைகழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியரான ஆர்.சீனிவாசன் , தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்ய முடியும் எனக் கூறுகிறார். இதுகுறித்து அவர், தமிழகத்தில் இருக்கும் நான்கு துறைமுகங்களிலிருந்து, எண்ணற்ற கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன. அது போன்றே அண்டை மாநில மக்களின் போக்குவரத்தும் தமிழகத்தில் அதிகளவில் உள்ளது. பெட்ரோல், டீசலுக்கான வரியை அண்டை மாநிலங்களை விட குறைப்பதன் மூலம், சரக்குகள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், தமிழகத்தில் வந்து செல்லும் அண்டை மாநில மக்களும் கூட, குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் தமிழகத்திலேயே அவற்றை நிரப்பிச் செல்ல விரும்புவர். இதன் மூலம் விற்பனை அதிகரித்து, வருவாய் இழப்பை சரிகட்டிவிட முடியும் எனத் தெரிவித்தார்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival