Site icon இன்மதி

கருணாநிதியை விட அனைவரையும் உள்ளடக்கிய பயணத்தை விரும்பும் மு.க.ஸ்டாலின்!

ஆக.28 இல் தலைவராக பொறுப்பேற்கும் ஸ்டாலின். உடன் துரைமுருகன்

Read in : English

திமுகவின் புதிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதியைப் போல உயர்ந்த ஆளுமையல்ல. இருந்தபோதும் அவர் தன் தந்தையை விட அனைவரையும் உள்ளடக்குகிற தலைவராக உள்ளார்.  மு.க.ஸ்டாலின் மதநம்பிக்கை உடையவர்களை, குறிப்பாக இந்து மதத்தை கடுமையாக விமர்சிப்பதில் நம்பிக்கையில்லாதவராக உள்ளார். இப்படியான விமர்சனம் மத நம்பிக்கை உடையவர்களை பகைத்துக்கொண்டு அவர்கள் திமுகவிலிருந்து தங்களை விலக்கிகொள்ள வழிவகுத்தது.  அந்த வகையில், ஸ்டாலின் திமுகவை அனைத்தையும் உள்ளடக்கிய புதிய பாதையில் தலைமை வகுப்பார்.அது அதிமுக, காங்கிரஸ் போன்று கட்சியை பலப்படுத்த உதவும்.

கோயில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் ஸ்டாலினின் மனைவி துர்கா

ஸ்டாலின் திமுகவின் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டதாக  அவரே குறிப்பிட்டுள்ளார். ‘’நாம் புதிதாகப் பிறந்ததாக எண்ணுவோம்’’ என்று கூறியவர் அதன் மூலம் தங்கள் கட்சியினருக்கு, கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் உபகயோகமற்ற விஷயங்களை பேசுவதை நிறுத்த வேண்டும் என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஸ்டாலின் மனைவி துர்காவும் அவரது சகோதரி மு.க.செல்வியும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு தொடர்ந்து செல்கிறவர்கள். திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்களில் பலர் மத நம்பிக்கையாளர்களாக இருப்பதால், கடவுள் மறுப்புக் கொள்கையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டாம் என விரும்புகிறார் ஸ்டாலின்.

திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மத நம்பிக்கையாளர்களுக்கு எதிர்ப்பில்லை என்றே கூறினார்.

இதுகுறித்து கூறிய திமுக வட்டாரத்தினர், திமுகவை உருவாக்கிய சி.என்.அண்ணாதுரை, கட்சி ‘ஒன்றே குலம்;ஒருவனே தேவன்’ என்ற கொள்கையில் நம்பிக்கையுடையது எனக் கூறினர். கருணாநிதியிடம் ஒரு பேட்டியில், திமுக கடவுளை நம்புகிறதா என்ற கேள்விக்கு, தேவன் என்று இயற்கையைத் தான் திமுக குறிப்பிடுகிறது என்று பதில் அளித்தார்.

கடந்த காலத்தில் கருணாநிதி பேசிய கடுமையான பேச்சுக்களான, ‘விநாயகருக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது’ மற்றும்  இலங்கைக்கும் ராமஸ்வரத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் விவகாரத்தில் பேசியபோது, ‘ராமர் என்ன என்ஜினியரா’? என்று பேசியது, இந்துக்களிடம் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, திமுக தங்களை பாகுபாடுடன் நடத்துவதாகவே உணர்ந்தார்கள்.

திமுக முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்துகொள்ளும் போது, இந்துக்களின் மத விழாக்களை மட்டும் புறக்கணிப்பது என்று கேள்வி எழுப்பினர்.

அதே நேரத்தில் திமுக தலைவர்கள் உறுதியாக நம்புவது என்னவென்றால், கருணாநிதி, பெரியார் எதிர்த்த மத மூடநம்பிக்கைகளையும் தீண்டாமைக்கு எதிராக செயல்பட்டதைப் போல தானும் தொடர  விரும்பியதாக  கூறுகிறார்கள். இதனை மத எதிர்ப்பாக சிலர் பார்த்தாலும், அதை கருணாநிதி திராவிடத்தின் கொள்கையாகத் தொடரவிரும்பினார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்டாலின்

இருந்தபோதும், இந்து மதமும் கோயில் நிர்வாகமும் ஒரே கையில் இருப்பதாக திமுக விமர்சித்தாலும் முரணாக, கோயில்களில் தர்மகர்த்தாக்கள்/டிரஸ்டி பதவிகளை கைப்பற்ற திமுக விரும்பியது. இதற்கு அவர்களிடம் சொல்வதற்கு எந்த பதிலுமில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடமிருந்து கோயில்களை விடுவிக்கவே கோயில் நிர்வாகத்தில் திமுக பங்கெடுக்க விரும்புகிறது எனக் கூறினர். இந்த நடைமுறையில், திமுகவின் பகுத்தறிவுவாதிகள் என்ற பிம்பம் கொஞ்சம் கலங்கலாகியது. சில இடங்களில் திமுக தலைவர்களை கோயில்களில் பார்க்க நேர்ந்தது. அவர்கள் மீது கோயில் நிலங்களையும் சொத்துக்களையும் தவறாகக் கையாண்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. திமுகவின் அடிப்படை கொள்கையான பகுத்தறிவுக் கொள்கை,  இப்படியாக நீர்த்துப் போனது. மதக்கொள்கைகளைப் பொறுத்தவரை திமுக உள்ளீடற்றதாக மாறிப் போனது. கருணாநிதி மஞ்சள் துண்டை அணிந்திருந்தது அவருடைய பிம்பத்தை பகுத்தறிவாதிகளிடம் சிதைத்தது. இதனால் திமுக பகுத்தறிவாதிகள் மற்றும் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கிடையே சிக்கித் தவித்தது.

இந்தநிலையில் தான், ஸ்டாலின் ஒரு அன்பின் புதுப்பாதையை உருவாக்கி, அதில் யார் மீதும் வெறுப்பில்லை என அறிவித்ததன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலான வரவேற்பை பெற முனைகிறார். திமுக பெரிய அளவில் இளைஞர்களை கவர்ந்திழுக்க முடியவில்லை. அதற்கு, அனைவரையும் உள்ளடக்கிய திட்டம், அனைவரையும் கவரும் வகையிலான திரை நட்சத்திரங்கள் இல்லாமை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று மொத்த இந்தியாவையும் கவரும் ஒரு பிம்பம் திமுகவில் இல்லாதது என்று பல காரணங்கள் உள்ளன.

ஸ்டாலின் ஏற்கனவே பல்வேறு வகையான மனிதர்களிடம் அவர்களின் கொள்கைக்கு எதிரானதாக இருந்தாலும் சென்று சேர்ந்துள்ளார். எந்த கசப்பையும் வெளிக்காட்டாமல், ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றது, அனைத்து கட்சித் தலைவர்களையும் இரங்கல் கூட்டத்துக்கு அழைத்தது, முன்னாள் பிரதமர் எ.பி.வாஜ்பேயிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது, அவரது அஸ்திக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தியது எனச் செயல்பட்டு வருகிறார்.

ஸ்டாலின் திமுகவோடு தற்போது கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட ஒரு உறவை, பிணைப்பை உருவாக்க முயல்கிறார். கருணாநிதியைவிட திமுக கூட்டணியில்  பல கட்சிகளை சேர்க்க முனைகிறார். திமுகவுடன் கூட்டணியிலிருந்து 2009ல் பிரிந்து போன இடதுசாரிகளை 10 வருட இடைவெளிக்குப் பிறகு  மீண்டும் இணைக்க விரும்புகிறார்.

புதிய பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துரைமுருகன் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அதாவது கருணாநிதி கட்சியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டபோது கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகளை சந்தித்தார். ஆனால் ஸ்டாலின் கட்சியில் உள்ள  அனைவரது ஆதரவையும் பெற்று தலைவராகியுள்ளார் என குறிப்பிட்டார்.

கருணாநிதியின் பேரனுபவம் இருந்தபோதும், கட்சியின் ஓட்டுவங்கியை 25சதவீதத்துக்கும் மேல் உயர்த்த முடியவில்லை. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நிலவிய குழப்பங்களினாலும் நிலையற்ற தன்மையாலும்  13 வருடத்துக்குப் பிறகு மூன்றில் ஒரு பங்கு ஓட்டு வங்கியைப் பெற்றே ஆட்சியில் அமர்ந்தார் கருணாநிதி. 1996-க்கு பிறகு அமைக்கப்பட்ட ஆட்சியில் திமுக பலமான கூட்டணியை அமைத்ததுதான் காரணம். மற்றொருபுறம், அதிமுக  2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 39 இடங்களில் 37 இடங்களை வென்றது. 2016லில் நடந்த சட்டசபைத் தேர்தலில்  தனித்தே போட்டியிட்டு, பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது.

ஸ்டாலின் கட்சியை விரிவு செய்து, கடந்த காலத்தில் கட்சி ஒதுக்கியதாக கருதும் மக்களிடம் ஒரு  அடிப்படை கட்டமைப்பை உருவாக்க  நினைக்கிறார். இதற்காக ஒரு இலக்கை நிர்ணயித்து, திமுக அனைவரையும் உள்ளடக்கிய கட்சி என்பதை உருவாக்க நினைக்கிறார். அதற்கு கட்சியின் ஒட்டு மொத்த ஆதரவுடன்  இதே பாதையில் பயணித்து இலக்கை அடைய வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version