Read in : English
விவசாயத்துக்கு மிக முக்கியமானது நீராதாரம். விவசாயம் தோன்றிய காலத்திலிருந்து நீர் இறைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பயிர்கள் வாஅ நீர் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் உள்ள பல கிராமம்ங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு அருகில் இருக்கும் ஏரியிலோ அல்லது போர்வெல் மூலமோ அல்லது கிணற்றிலிருந்தோ நிர்ரை இறைத்து பயன்படுத்தி வருகின்றனர். இப்போது கால்நடைகளை வைத்து நீரிறைக்கும் காலம் மலையேறிவிட்டது. அனைத்தும் மின் மோட்டர்கள் மூலமே நடைபெறுகிறது. பல இடங்களில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காதபட்சத்தில் டீசல் என் ஜின்களை வைத்தே நீர் இறைக்க வேண்டியுள்ளது. அதற்கு விவசாயிகள் டீசலை விலை கொடுத்தே வாங்குகின்றனர்.
மோட்டர்களை பல ஆண்டுகளாக நம்மிடம் கிடைக்கும் இடுபொருளைக் கொண்டே இயக்கி வந்துள்ளனர் என்கிற செய்தி பலருக்குத் தெரியாது. இதன் பெருமையை உணார்ந்த சி.ராஜசேகரன் என்ற விவசாயி பல ஆண்டுகளாக மோட்டரை இயக்க எளிதில் கிடைக்கும் ஒரு இடுபொருளை பயன்படுத்தி வருகிறார். அது என்ன?
அவருடைய பண்ணை நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் தாலுக்கா வேட்டைக்காரன் இருப்பு என்ற ஊரில் உள்ளது. அவர் மோட்டர் மூலம் நீர் இறைக்க, மறு உற்பத்தி செய்யக் கூடிய சுற்றுச்சூழலுக்கு நட்பான, பூமிக்கடியில் புதையுண்டு கிடக்காத ஒரு பொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தி வருகிறார். இந்த எண்ணைய் புன்னை மர விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த விவசாயி தன் 5எம்பி மோட்டரை தற்சார்புடன் இயக்கி, மற்ற எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைத்திருக்கிறார்.
“கிட்டத்தட்ட 600மிலி புன்னை எண்ணெய் மோட்டரை ஒரு மணிநேரத்துக்கு இயக்குகிறது. இதற்கு டீசலைப் பயன்படுத்தினால் ஒருமணி நேரத்துக்கு 800 மிலி தேவைப்படும். இன்றைய தேதியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 70 ரூபாய். கணக்கிட்டு பாருங்கள், ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் இரண்டு புன்னை மரங்களை வைத்திருந்தால் டீசல் பயன்பாட்டைக் குறைத்து அதற்கு பயன்படுத்தும் பணத்தையும் குறைக்க முடியும்” என்கிறார் திரு. ராஜசேகரன்.
இந்த மரத்தை அதிக சிரத்தையின்றி வளர்க்க முடியும். ஆடு, மாடுகள் இந்த இலையை தின்னாது. இந்த மரம் வலுவுள்ளதாக இருப்பதால் பூச்சி தொல்லை குறைவு. இதை பராமரிப்பதும் சுலபம்.
ஒரு மரத்தை நட்டு 5 வருடங்களுக்கு பிறகு அம்மரத்திலிருந்து 4-20 கிலோ விதை ஒரு வருடத்தில் கிடைக்கும். 10 வயதான மரம் 10-60 கிலோ விதையை ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கும்; ஆண்டுகள் செல்லச் செல்ல இது அதிகரிக்கும். இந்த மரம் தேனிக்களையும் ஆந்தைகளையும் கவர்ந்திழுக்கும். தேனீக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவினால், ஆந்தைகள் விதைகளைத் தின்று கொட்டைகளை மட்டும் பூமியில் எச்சமாக இடும். நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை மரத்துக்கு கீழே விழுந்து கிடக்கும் விதைகளை சேகரிக்க வேண்டும். அதனை ஆறு நாட்களுக்கு காயவைத்து நிலக்கடலையில் செய்வதை போல விதையின் மேல்புற தோல் உடைத்து பருப்புலிருந்து எண்ணெய் ஆட்டி எடுக்க வேண்டும். ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க வெறும் 10 ரூபாய் செலவாகும். அதேவேளையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 70 ரூபாய்.
நான் மோட்டரை மழை இல்லாத நாட்களில் மட்டுமே பயன்படுத்துகிறேன். அதாவது வருடத்துக்கு 5 மாதங்கள் மட்டுமே எண்ணெய் தேவைப்படுகிறது என்று சொல்லும் ராஜசேகரன், தன்னிடம் மீதமுள்ள எண்ணெய்யை கோயிலுக்கு, 42 ரூபாய்/லிட்டர் என்ற கணக்கில் விற்றுவிடுகிறார். எண்ணெய் எடுத்த பிறகு லிட்டருக்கு 300 கிராம் என்று கிடைக்கும் புண்ணாக்கை நிலத்தில் உரமாக பயன்படுத்துகிறார்.
“நீங்கள் நன்கு கவனித்து பார்த்தால் டீசலை பயன்படுத்தும் மோட்டார்கள் 5 வருடத்தில் துருப்பிடித்துவிடும். ஆனால் புன்னை எண்ணெய் பயன்படுத்தும் மோட்டாரில் துரு பிடிப்பது இல்லை;அதை இயக்கும்போது அதிகம் சப்தமும் ஏற்படுவதில்லை. கடத்ந்ஹ 4 வருடங்களாக இந்த எண்ணெய்யைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். டீசலை பயன்படுத்தி இயக்கும் மோட்டருக்கும் இதற்கும் எந்த வேறுபாட்டையும் உணரவில்லை” என்கிறார் ராஜசேகரன்.
டீசலை உபயோகப்படுத்தி இயக்கப்படும் அனைத்து மோட்டர்களுக்கும் புன்னை எண்ணெய் பயன்படுத்தலாம் என உறுதியாகச் சொல்லும்ராஜசேகரன், அதனை பெரிய அளவில் நிரூபித்து பயன்படுத்து அரசு மற்ரும் ஆராய்ச்சியளர்கள் கையில் தான் உள்ளது என்கிறார்.
“நிறைய மரங்களை நட்டு பசுமை சோலையை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிற போது, அரசு புன்னை மர வளர்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு விவசாயியும் தன் நிலத்தில் இரண்டு புன்னை மரங்களை வளர்க்கத் தொடங்கினால், நீர் இறைக்கும் பிரச்சனை தீர்வு காணும்” என்கிறார் மலர்ந்த முகத்துடன்.
பழங்காலத்திலிருந்து புன்னை மரத்துக்கு சில வராற்று பெருமைகள் உண்டு. கோயில் விளக்குகள், வீட்டு விளக்குகள் புன்னை எண்ணெய்யை பயன்படுத்தியே எரியவைக்கபப்டட்ன. டீசல் மற்றும் மின்சாரத்தின் அறிமுகத்துக்கு பிறகு புன்னை மரங்கள் மகக்ளின் நினைவிலிருந்து அழிந்துவிட்டது. ஆனால் ராஜசேகரன் போன்ற சிலர் இன்னும் அதன் பயன்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
திரு. சி.ராஜசேகரனை தொடர்புகொள்ள 97510 02370 என்ற எண்ணில் அழைகக்வும்.
Read in : English