Read in : English
கடந்த வாரம் வேதி உரங்களைச் சார்ந்திருப்பதால் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றி பேசியிருந்தேன். இதனை வாசித்த பிறகு நிறைய மின்னஞ்சல் மற்றும் வாட்ஸப் மூலம் அப்பகுதியில் வெற்றியடைந்த விவசாயிகள் குறித்து எழுதுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பிறகு நானுமெனது நினைவுகளை பின்னோக்கி சுழற்றி, அவ்வாறு வெற்றி பெற்ற விவசாயிகள், மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய விவசாயிகளை தேடினேன்.
அப்படி என் நினைவுகளை சுழற்றுகையில் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. நிச்சயமாக விதர்பா பகுதி மரித்துப் போன விவசாயிகளை புதைக்கும் ஓரிடமாக மட்டும் இருக்கவில்லை. இப்பகுதி ‘தேசிய அவமானம்’ என்று குறிப்பிடப்பட்டாலும் அங்கு விவசாயிகளின் தற்கொலை சதவீதம் அதிகம் தான். அந்த பகுதியை பார்வையிட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விவசாயிகள் தற்கொலை குறித்து மிகவும் தாமதமாக விழித்துக்கொண்டாலும் பங்கு சந்தையில் இதன் காரணமாக வீழ்ச்சி ஏற்பட்டதால், உடனே அதற்கு தொலைக்காட்சி மூலம் பதில் அளித்தார்.
இன்னும் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் விவசாயிகள் இந்த சிக்கலிலிருந்து விடுபட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் இயற்கை இடுபொருட்களையும் வெவ்வேறு வகையான பயிர்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். நம்மை போன்று ஒரு விவசாயி, புருஷோத்தம் ஜெகன்நாத் மகாஜன் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு வழிகாட்டியாக உள்ளார். வேதி உரங்களின் விலை அதிகம் என்பது அறிந்ததே. அவை பிந்தங்கிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் வான்க நினைத்தாலும் கிடைப்பதில்லை. அதனால் அந்த விவசாயி வேறு மாற்று வழிகளைப் பின்பற்றி இடுபொருட்களை பயன்படுத்தினார். மக்கிய உரத்திலிருந்து நீர்ம உரத்தை செய்யக் கற்றுக்கொண்டார். அதற்காக சிறிய அளாவில் நான்கு சுவர்களை எழுப்பி மாட்டுச் சாணத்தை சேமித்தார்.
ஒரு தடுப்பறையில் மாட்டுச்சாணத்தில் தண்ணீர் கலந்து வைக்க, மற்ற அறைகளில் சாணக்கூழ் வெளியேறும். அதன்பிறகு சில நாட்களில் வயலுக்கு பாயும் நீரில் இது கலந்துவிடப்படும். இந்தக் கூழ் கருப்பு நிறத்தில் இருந்ததாலும் பயிர்கள் நன்கு விளைந்ததாலும் அதற்கு கருப்பு நீர்ம உரம் என பெயரிட்டார்.
இதோடு அவர் ஜீவாமிர்தம் அல்லது சஞ்சீவகம் என்றழைக்கப்படும் நொதித்த நீர்ம உரத்தை சேர்த்தார். அதற்கு மாட்டுசாணத்தையும் கோமியத்தையும் பயன்படுத்தினார். ஜீவாமிர்தத்துக்கு பதில் அமிர்தக் கரைசலைப் பயன்படுத்தினார். இதில் ஏதாவது ஒரு கரைசலை நீர்ப்பாய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் நீரில், 200 லிட்டர் அளவு கலந்தார். குறைந்தபட்சம் மூன்றுமுறை இவ்வாறு செய்தார்.
விவசாயிகளின் கடன் அதிகரிப்புக்கும் பயிர்த்தோல்விக்கும், தொடர்ந்து ஒரே வகை பயிரை பயிரிடுவதும் வேதி உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதும் தான். பெரும்பாலான விவசாயிகள் பருத்தியை மட்டுமே பயிரிட்டார்கள். இரண்டு ஏக்கரோ அல்லது ஐந்து ஏக்கரோ குறைந்த காலத்தில் அதிக பணம் கிடைப்பதுதான் விவசாயிகளை வசீகரித்தது. விவசாயிகள் இந்த பயிர் தன் பகுதிக்கு ஒத்து வருமா இல்லையா என்பது குறித்து விசாரிக்கவில்லை. அதற்கு ஏற்ற அளவிலான நீர் இருக்கிறாதா என்பது பற்றியும் விசாரிக்கவில்லை.
பருத்தி பயிர் பல்வேறு காரணங்களால் செத்து மடிந்த போது, கூடவே விவசாயிகளும் அதையே செய்தனர்.அதற்கு முதன்மை காரணம் அதிக வட்டியில் வாங்கிய கடன் குவிந்ததே. பெரும்பாலான விவசாயிகள் முதல்முறை பருத்தி பொய்த்த போதும், இரண்டாவது முறை அது விளைச்சலைக் கொடுக்கும் என்று நம்பி பயிரிட்டதே துன்பத்துக்கு காரணம். இதுபற்றி நான் அதிகம் யோசித்திருக்கிறேன். அப்போது பன்மை பயிர்முறை அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு ஏக்கர் நிலத்தில் மக்காசோளம் அல்லது சோளம் ஒரு வரிசையிலும், துவரம் பருப்பு இரண்டு வரிசைகளிலும் பருத்தி நான்கு வரிசைகளிலும் பயிரிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அந்த விவசாயி பலவகை காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், வாசனைப் பொருட்கள், மூலிகைத் தாவரங்களை வளர்த்தார்.
ஆரம்ப கட்டத்தில் இந்த முறையால் அவர் சில கஷ்டங்களை எதிர்கொண்டாலும், இறுதியாக மிகவும் திருப்திப்படும் வகையில் லாபம் கொடுக்கும் தொழிலாகவே இது மாறியது. தன்னுடைய இயற்கை உரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மூந்று பசுமாடுகளை மாட்டுச் சாணத்துக்காகவும் கோமியத்துக்காகவும் வளர்த்தார். அதுமட்டுமில்லாமல் பசும்பால் அவரது குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்தது. வயலில் இருந்து வந்த தாவரக் கழிவுகள் மாடுகளுக்கு தீவனமாகப் பயன்பட்டது. இதில் எந்த ராக்கெட் விஞ்ஞானமும் இல்லை அல்லவா? ஒரு பயிர் மற்றொன்றுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
மஹாஜன் தன் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு ஒரு வாழும் உதாரணமாக உள்ளார். விருப்பம் உள்ளவர்கள் திரு.மஹாஜனை கரஞ்சி போக், தியோலி தாலுக்கா, வார்தா என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி: 9552955897 மற்றும் 9922354663
கடன் தொல்லையால் அவதிப்படும் நன்பர்களே…திரு.மஹாஜனை உதாரணமாக எடுத்துக்கொண்டு முயற்சி செய்யுங்கள்.
அடுத்த வாரம், இதேபோல் இன்னொரு வெற்றிக் கதையுடன் சந்திக்கிறேன். நன்றி.
Read in : English