Read in : English
உயர்ந்த மனிதர்களின் வாழ்வு நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது. நம்மால் நம் வாழ்க்கையை அமைதியாக உருவாக்க முடியும். மேலும் நமக்கு பின்னாலும், நமது காலடி தடத்தை நீண்ட காலத்துக்கு விட்டு செல்ல முடியும் என்பதே அது.
வரலாற்றில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி போன்ற தலைவர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள். சிலருக்கு வலது மூளை பலமாக இருக்கும். சிலருக்கோ இடது மூளை சிறப்பாக செயல்படும். இதில் கருணாநிதி விதிவிலக்கு. அவருக்கு இருபக்க மூளையும் சரிசமமாக வேலை செய்யும். அரசு, நிர்வாகம், கட்சி, இலக்கிய படைப்பாற்றல் ஆகியவற்றை திறம்பட செய்வதில் அவர் சீரிய சிந்தனைக்காரர்.
இலக்கியம், சினிமா, பத்திரிகை என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அவர் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். கலை மற்றும் இலக்கியத்தில் அவரின் தன்னகரில்லா சாதனைகள் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை பின்தொடர செய்தது. திராவிட பேரியக்கத்தின் உற்பத்தி இடமாக திகழ்ந்தது.
தனது ஆழ்மனதில் தோன்றிய தீயால் துண்டப்பட்டு, அதனுடன் சின்ன சின்ன சண்டைகள் இட்டு, வாழ்நாள் முழுவதும் நடந்த அத்தனை பிரச்சினைகளையும் கடந்து சென்றார். அதுமட்டுமா? 14 வயது சிறுவனாக இருந்த போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
திருவாரூர் திருக்குவளையில் உள்ள தெருக்களில் தனது சக நண்பர்களுடன் அணிவகுத்து இந்திக்கு எதிராக முழக்கமிட்டார். தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் அரங்கில் அவர் வருகை புரிந்தார். ஆரம்பத்தில் பெரியாரின் சீடராக இருந்தார். பின்னர் அண்ணாவுடன் இணைந்து கொண்டார்.
தி.மு.க. 1949ம் ஆண்டு உருவான போது, அவர் முன்னணியில் உள்ள ஒரு தலைவராக இல்லை. இருப்பினும் அவரின் புத்திசாலிதனம் மற்றும் விடாமுயற்சியால் அவர் வெற்றிகரமான உச்சத்தை அடைந்தார். இந்த நிலையில் தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா காலமானார். இதனால் அண்ணா வகித்த முதல்வர் பதவிக்கு கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். புதிய முதல்வராக நெடுஞ்செழியன்தான் வருவார் என நினைத்து கொண்டிருந்த போது, கருணாநிதியே, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டது தி.மு.க.வின் திருப்பு முனை ஆனது.

இறுதி அஞ்சலி செலுத்த இராஜாஜி ஹாலில் கருணநிதியின் உடல்
யார் அடுத்த முதல்வர் என எல்லோரும் எதிர்பார்த்தபோது கருணாநிதியின் பெயர் அடிபட்டது. அவருக்கு ஆதரவும் இருந்தது. இந்த நிலையில் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்தினார். கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போதுதான், நாட்டிலேயே முதல் முறையாக சென்ைன உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை (எஸ்.சி.) சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கருணாநிதி ஒரு புத்திசாலி நபர். நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது கூட, தி.மு.க. தொண்டர்கள் பலரும் கைதானார்கள். பத்திரிகை சுதந்திரம் கூட பறிபோன சமயம் அது. ஆதலால் கைதானவர்கள் விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி 3ந் தேதி, அண்ணாவின் நினைவுத் தினத்தில், முரசொலியில் அவர்களின் பெயரை மறைமுகமாக வெளியிட்டார். அதாவது இவர்கள் எல்லோரும் அண்ணா நினைவு தினத்தில் கலந்து கொள்ளவில்லை என்று.
தமிழ் திரைஉலகில் பல்வேறு வல்லுனர்கள் இருக்கின்றனர் என்ற போதிலும், கருணாநிதி வசனத்தில் வெளியான ‘பராசக்தி’ ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் திரை உலகின் போக்கையை மாற்றியது என்றால் கூட, அது மிகையல்ல. சிவாஜி கணேசன் (முதல் படம்) வாயிலாக பல்வேறு முற்போக்கு வசனங்களை பேச வைத்து இருப்பார் கருணாநிதி. இதில் அவரின் பகுத்தறிவு எண்ணங்கள் அழகாக பளிச்சிட்டு இருக்கும்.
மூத்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் சிம்ம குரல் வாயிலாக, பிச்சைக்காரர்களின் புனர்வாழ்வு திட்டத்தை பேசியிருப்பார். இது பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஆகும். பின்னாட்களில் அவர் மாநில முதல்வர் ஆன பின்னர், பிச்சைக்காரர்களுக்கான புனர்வாழ்வு திட்டத்தை கொண்டு வந்தார்.
பெரியார் இறந்த காலத்திலேயே நிறைவேற்றப்படாத ஆசை ஒன்று இருந்தது. சாதிகளை தவிர்த்து கோவில்களில் பூசாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே அது. இதையடுத்து அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். சில நாட்களுக்கு முன்னர், பிராமணர் அல்லாத ஒருவர் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
சாதி என்னும் பெரிய அரக்கனை ஒழிக்க வைத்த சிறிய படி. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் மற்ற சித்தாந்தங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டன. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் அமைதியாக வசிக்கும் வண்ணம் பெரியார் சமத்துபுரம் என்ற திட்டம் மூலம் 100 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் 100 குடும்பங்கள் இருப்பினும், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் ஆகும்.
திராவிட இயக்கங்கள் சிறிய குடும்பம் மற்றும் சுயமரியாதை திருமணம் பற்றி பேசிக் கொண்டு இருந்தன. மத்திய அரசு இத்திட்டத்தை பற்றி பேசும் முன்னரே, தமிழ்நாடு இத்திட்டத்தில் முன்னோடியாக இருந்தது. 70களின் முற்பகுதிகளில், தி.மு.க. அரசாங்கம் கொண்டு வந்த, மற்றொரு தனித்துவமான திட்டமாக குடிமைமாற்று வாரியம் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கிய திட்டம் இருந்தது.
கை ரிக்ஷாக்களை அகற்றியது அவரின் சீர்திருத்த நடவடிக்கையில் மற்றொரு மைல்கல். போக்குவரத்தை தேசியமயமாக்கியது மற்றொரு முக்கிய நடவடிக்கை. இன்றைய தினத்தில் தமிழகம் இரண்டு முக்கிய காரணிகளில் வளர்ச்சி அடைந்து உள்ளது. அது உடல்நலம் மற்றும் கல்வி. இதில் தி.மு.க.வின் பங்கு அளப்பரியது. அவர்கள், நவீன தமிழ்நாட்டிற்காக அடித்தளத்தை அமைத்தனர். 24 மருத்துவ கல்லூரிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துவங்க பட்டதே ஆகும்.
சவால்கள் மற்றும் பாதகமான சூழ்நிலைகளை கருணாநிதி ஒருபோதும் தூண்டி விடவில்லை. மாறாக காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போன்று, தனது கொள்கைகளை நிலை நிறுத்தி ெவற்றி கண்டார். ஆட்சி அதிகாரத்துக்கு வெளியே (13 ஆண்டுகள்) மற்றும் கட்சியில் பிளவு (இருமுறை) நடந்த போதும், அந்த அசாதாரண சூழ்நிலையை அற்புதமாக எதிர்கொண்டார். ஒவ்வொரு தீங்கு நடக்கும் போதும், அவர் நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்த்தார்.
உதாரணமாக எம்.ஜி.ஆர். மறைவின் போது தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. சென்னை நகரத்தில் துரதிருஷ்டவசமாக சமூக விரோத நடவடிக்கைகள் நடந்தது. கலவரக்காரர்களால் அண்ணாசிலையில் இருந்த கருணாநிதி சிலை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த சிலையில் ெநஞ்சிலே, வாலிபர் ஒருவர் கடப்பாரையால் குத்துவது போன்று இருக்கும். அந்த சிலை இரண்டு துண்டாக உடைக்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு பிறகு, அந்த படத்தை வெளியிட்டு முரசொலியில் கருணாநிதி, கவிதை ஒன்று எழுதி இருந்தார். அந்த கவிதை, தம்பி நெஞ்சில் தானே குத்துகிறார்.. ஆனால் எல்லோரும் என்னை முதுகில் அல்லவா குத்துகிறார்கள் என்று பொருள்பட இருக்கும். மேலும் அந்த வாலிபருக்கு கவிதையால், ஆறுதலும் கூறியிருப்பார்.
நாட்டின் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நேரம் தி.மு.க. பெரும்பான்மையை இழந்தது. இருப்பினும் கருணாநிதி தனது சீரிய சிந்ததனையாலும், ஆற்றலாலும் கட்சியை காப்பாற்றினார். 3 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திரா காந்தியுடன் கூட்டணி உருவாக்கினார். இது கலைஞரின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு சாட்சியாக அமைந்தது.
1500 மக்கள் வசிக்கும் கிராமப் புறத்தையும் சாலைகள் போட்டு இணைத்தார். விவசாய பொருட்களை சந்தையிட வாய்ப்புகளை உருவாக்கினார்.
பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடை பெற்று கொடுத்தார். சமூக நீதிக்கான போராட்டத்தில் இதுஒரு மைல்கல் ஆகும். பெண்களுக்கு சொத்து உரிமை பெற்று கொடுத்தார். கருணாநிதியின் கீழ் தி.மு.க. எடுத்த முற்போக்கான திட்டத்தின் மூலம் விதவைகளும், கலப்பு திருமணம் செய்தோருக்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
சமூக அளவில் பின்தங்கி இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது. 1920களில் தொடங்கிய இந்த சித்தாந்தம் நீண்ட வரலாறு கொண்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) ஆணையம் அமைக்கப்பட்டதில் கருணாநிதியின் பங்கு முதன்மையானது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (எம்.பி.சி.) தனி இடஒதுக்கீடு அளித்தார்.

கருணநிதியின் இறுதி ஊர்வலம்
அருந்ததியினருக்கும் முஸ்லிம்களுக்கும் சிறப்பு இடஒதுக்கீடு அளித்தார். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த, மத்திய அரசை வலியுறுத்துவதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. இதன்மூலம் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடை உறுதி செய்கிறது.
தமிழ் அறிஞர்களின் வரலாற்று மற்றும் நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்கள் தி.மு.க. ஆட்சியின் அடையாளங்கள் ஆகும். அழகான கட்டிடங்களுடன் தமிழகத்தை அழகுப்படுத்துவதில் கருணாநிதி கவனமாக இருந்தார். அந்த வகையில், பூம்பூகார் வள்ளூவர் கோட்டம், பல தலைவர்களுக்கு நினைவு சின்னங்கள், செம்மொழி பூங்கா மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் என பல.
இந்திய தேசமே திரும்பி பார்த்து பெருமை கொள்ளும் வகையில், திருவள்ளூவருக்கு 133 அடியில் கன்னியாகுமரியில் சிலை எழுப்பினார். நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் கட்டினார். ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் உருவாக்கினார். நாட்டிலேயே சென்னையில் அதிக மேம்பாலங்கள் உள்ளது.
இது தி.மு.க. அரசாங்கத்தின் வேலையாகும்.

கருணநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின்
1990களில் உலகமயமாக்கல் பொருளாதார தொடக்கத்தில், பொறியியல் மாணவர்களை அதிகளவு உற்பத்தி செய்து வழங்கும் கல்வி தொழிற்சாலையாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசாங்கம் இருந்தது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழிற்நுட்ப பூங்காவான டைடல் பார்க், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆட்டோ மொபைல் உள்ளிட்ட தொழிற்சாலைகள் பெருகி, நாட்டிலேயே தமிழகம் தொழிற்வளர்ச்சியில் முன்னணி வகிக்க இருக்க இது காரணமாகிற்று.
அவரது மரணம் ஆற்றொண்ணா துயரத்தை ஏற்படுத்தி இருந்த போதிலும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையில் அவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் பங்களிப்பையும் முன்னெடுக்க விரும்புகிறோம்.
(இக்கட்டுரையை எழுதியவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துனைத் தலைவராவார்)
Read in : English