Site icon இன்மதி

மெரினாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க முடியாது: தமிழக அரசு

Read in : English

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ண சதுக்கத்தில் நல்லடக்கம் செய்ய திமுக கோரிய மனுவை தமிழக அரசு நிராகரிதுள்ளது. அதற்கு மாறாக காந்தி மண்டபம், ராஜாஜி நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும், தேசிய கொடி போர்த்தி, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இன்று (7.8.2018) திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, முரசொலி செல்வம், ஐ. பெரியசாமி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில்  பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், ஆதலால் கருணாநிதிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி ஹாலில் அஞ்சலி செய்ய இடம் ஒதுக்கவும், காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக முதல்வர் காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது, அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே நல்லடக்கம் செய்ய இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாகவும் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டார்.

Share the Article

Read in : English

Exit mobile version