Site icon இன்மதி

உயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக – கர்நாடக இசையை வழங்கும் சத்யா!

Read in : English

கே.சத்திய நாராயணன், பத்தாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசைக்கு-கமகத்துக்கு தொடர்பில்லாத ஒரு வாத்தியத்தை வாசித்து வருகிறார். கடந்த2001-ல் கர்நாடக இசையின் ஆதி நாடியான கமகம், கீபோர்டைத் தாண்டி வேறு ஒரு வாத்தியத்தில் எப்படி இசைக்கிறது என்பதை நிரூபித்தார். அதனைகர்நாடக இசை விமர்சகர்கள் சில முரண்களோடு ஒத்துக்கொண்டனர்.

அதிலிருந்து சத்யா இந்திய பாரம்பரிய இசையை  எளிதில் கிடைக்காத வாத்தியங்களான KORG   Nano Keys  மற்றும்  ROLI Seaboard Rise மூலம் ஒருமுன்னோடி இசை கர்த்தாவாக இசைத்து வருகிறார். அதுமட்டுமில்லமல் ஐபேட் மூலம்  GeoShred App என்ற ஆப்-ஐ பயன்படுத்தியும் வாசித்து வருகிறார். இந்திய பாரம்பரிய இசையை காற்று இசைக்கருவிகளான பியானோ, ஆர்மோனியம், அக்கார்டேஸன் மற்றும் பேனிகா ஆகிய வாத்தியங்களில்இசைக்கிறார். அவருடைய தற்போதைய முயற்சியாக ROLI Seaboard  Rise வாத்தியத்தில் இசைக்கிறார். அவருடைய இந்த அரிய முயற்சிகளை, பலகர்நாடக இசை ராகங்களை  ஒரு நிமிட  இசைக் கோர்வையாக்கி அதனுடைய லிங்குகளை பதிவேற்றியுள்ளார். அவை அத்தனையும் கேட்பவருக்கு மகாபரவஸத்தைக் கொடுக்கிறது.

இன்மதி.காம்-க்காக,  சத்யா தன்  ROLI Seyboard  Rise வாத்தியத்துடன் செய்த புது முயற்சிகளை வீடியோக்களாக வழங்கியிருக்கிறார். ‘’ROLI Seyboard  Rise மற்ற வகை வாத்தியங்களை விட  ஒரு புதுவகையான வாத்தியம். அதை கீ போர்டு இசைப்பது போன்று அணுகக் கூடாது. இந்த வாத்தியத்தில் இசைகோர்ப்பது அதனுடன் உறாவாடுவது  போன்ற மோன மனநிலையைக் கொடுக்கும்; ஒருவருக்குள் இருக்கும் அத்துனை உணர்வுகளையும் இசைசப்தமாக வடிவமைக்கும் வல்லமை கொண்டது. இசையை புரிந்துகொள்ளவும் கையாளாவும் விருப்பம் உள்ளவர்கள் இதனை இசைத்தால்  உன்னதமான இசையை கண்டடையலாம்’’ என்கிறார் சத்யா.

இசைக் குறிப்புகளின் ஒவ்வொரு நுணுக்கமான அதிர்வையும் இதனை மீட்டும்போதும் தொடும்போதும் அழுத்தும் போதும்  உணர முடியும்; இந்தவாத்தியத்தில் மிக நுண்ணிய வேறுபாட்டையும் அதனை வாசிப்பவர்  உணர்ந்துகொள்ள முடியும்.

 

இசையமைப்பாளார், வாத்திய கலைஞரான  சத்திய நாராயணனை,’கீ போர்டு சத்யா’ என்றே அழைக்கிறார்கள்.  சத்யா  குமாரி.ஏ. கன்யாகுமாரி, டாக்டர். எம்.பாலமுரளி கிருஷ்ணா, மற்றும் மாண்டலின் யு. சீனிவாஸ் ஆகியோரிடம் சிஷ்யராக இருந்து இசையைக் கற்றுக்கொண்டார்.

கிராமி விருது பெற்ற பண்டிட் விஸ்வநாதன் மற்றும் ட்ரம்ஸ் சிவமணி ஆகியோருடன் இணைந்து வாத்தியங்கள் வாசிக்கிறார். இசை கர்த்தா யான்னி-உடன் இணைத்தும் வாசிக்கிறார்.

சத்யா, ஆல் இண்டியா ரேடியோவில், ‘ஏ கிரேட்’ வாத்திய கலைஞர்களில்  முதன்மையான கர்நாடக கீ போர்டு இசைக்கலைஞர். அதுமட்டுமில்லாமல்இதுவரை 25 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமில்லாது அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா, அரபுநாடுகளுக்கு சென்று ற்றுக்க1600 கச்சேரிகளை நடத்தியுள்ளார். தற்போது இசையில் முதுகலை பயின்று வருகிறார்.

Share the Article

Read in : English

Exit mobile version