Site icon இன்மதி

இ – சிகரெட்டை தடை செய்யும்போது சிகரெட்டை தடை செய்ய இயலாதா?

Read in : English

விவேக் ஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடைய 14 வயதில் முதன்முறையாக  சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். அதன்பின்பு அவன் அப்பழக்கத்தில்இருந்து மீளவில்லை. அவனுக்கு 6 மாதங்களுக்கு முன்பு ‘வேப்பிங்’ எனப்படும் இ சிகரெட் குறித்து அறிமுகம் ஆனது. அதிலிருந்து சிகரெட் பக்கம் அவன் திரும்பவில்லை. சென்னையில் கிராபிக் டிசைனராக இருக்கும் விவேக் ஷா   சிகரெட்டிலிருந்து விடுபட நினைக்கிறவர்களுக்கு இ- சிகரெட் ஒரு வரம்என்கிறார்.  தற்போது பிரச்சனை என்னவெனில், விவேக் ஷா போன்ற இ-சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் பாதிக்கப்படும் வகையில் தமிழகஅரசு இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளது. சிகரெட்டுக்கு தடை விதிக்காமல், சிகரெட் பழக்கத்திலிருந்து வெளியேற உதவும் இ-சிகரெட்டைதடை செய்வது ஏன்? என்று கேட்கிறார் ஷா.

அவரை போல் நூற்றுக்கணக்கானவர்கள் இதே கேள்வியை கேட்கின்றனர். ’அசோஸியேஸன் ஆப் வேப்பர்ஸ் ஆப் இண்டியா’ அமைப்பைசார்ந்தவர்களும் இதற்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த அமைப்பினர் கடந்த ஜூலை 13, 2018ஆம் தேதி  தமிழ்நாடு சுகாதாரத்துறைஅமைச்சரையும் முதன்மை செயலரையும் சந்திக்க முயன்று, முதன்மை செயலரைச் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இ-சிகரெட்டை  தடைசெய்வதற்கு பதில், அதனைப் போன்று மாற்று வழி ஒன்றை பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவாதிக்கும் அவர்கள், நிகோடினை எடுத்துக்கொள்ள புது வழிமுறை இருந்தால் அது சிகரெட்டை விடுவதற்கு உதவி செய்யும்என்கிறார்கள். உலக சுகாதர நிறுவனம், இதுகுறித்து எச்சரித்துள்ளது. உலக சுகாதர நிறுவன அறிக்கையில்,’இம்மாதிரி புகைக்கும் வழிமுறைகள்பாதுகாப்பான முறை என அறிவுறுத்த முடியாது. சிகரெட் பிடிக்க புகைப்பதில் இருந்து வெளியேற உதவும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவும்  இல்லை என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முதன்முறையாக இது தடை செய்யப்படவில்லை. ஜம்மு- காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், மஹாராஷ்ட்ரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது. அசோஸியேஸன் ஆப் வேப்பர்ஸ் அமைப்பு அந்த  மாநிலங்களில்இ-சிகரெட்டை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என  வழக்கு நடத்திக்கொண்டுள்ளது. வழக்கில், வயது, நிகோடின் அளவு, தயாரிப்பு மற்றும் எச்சரிக்கைவாசகம் ஆகியவை குறித்து ஒரு ஒழுங்கினை கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்கிறார் இந்த அமைப்பின் இயக்குநர் பிரதிக் குப்தா.

இதுகுறித்து  கூறிய ஃபோர்டிஸ்  மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பிரதிப் ஷா கூறுகையில், ‘’இந்த உபகரணத்தில் கிளிசரால், நிகோடின், மற்றும் சில பொருட்கள் இருக்கும். அவை எலக்ட்ரிக் முறை மூலம் எரிக்கப்பட்டு அதன் மூலம் வரும் ஆவியைத்தான் புகைக்கிறார்கள் அல்லதுஉள்ளிழுக்கிறார்கள். இது சாதாரண சிகரெட்டை விட பாதுகாப்பானது. சிகரெட்டில் நிகோடின் உள்பட பல நச்சுகள் உள்ளன. அந்த நச்சுகள் இ-சிகரெட்டில் இருக்கும் அளவு குறைவு. அதேவேளையில் இ-சிகரெட்டுக்கு அடிமையாகும் நபருக்கும் நிகோடின் வெவ்வேறு அளவுகளில் உள்சென்றுபாதிப்புகளை ஏற்படுத்தும். ’’என்கிறார்.

இந்தக் கூற்றை இச்சங்கத்தினர் முற்றிலுமாக மறுக்கவில்லை.’’இதுவும் தீங்கானது என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் சிகரெட் பிடிப்பதற்குஇதைவிட வேற மாற்றுவழி இல்லை.நான் சிகரெட்டை விடுவதற்காக பல வழிகளில் முயற்சித்தேன். ஹெர்பல் சிகரெட் புகைத்தேன். சில ‘சூயிங் கம்’ முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை. ஆனால் இ-சிகரெட் என்னைப் போன்ற பலருக்கு ஏதோ ஒருவகையில் உதவுகிறது. அதனால் இ-சிகரெட் புகைக்க சில நடைமுறை ஒழுங்குமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் என கோருகிறோம்’’ என்கிறார் பிரதிக்.

வேப்பர்ஸ் பயன்படுத்தும் ககன் தாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், ‘’இது எங்களை சிகெரெட் புகைக்கும் பழகத்தில் இருந்து விடுவித்தது. நான் கடந்த ஒருவடத்துக்கும் மேலாக வேப்பிங் பயன்படுத்துகிறேன். இன்னும் சில மாதங்களில் அதனையும் விடும் முயற்சியில் உள்ளேன். இ-சிகரெட்டை தடை செய்வது, அதனைப் பயன்படுத்தி வரும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனை அரசில் கருத்தில்கொண்டு, இதனை ஒழுங்கமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறினார்.

ஆனால், அரசு இ-சிகரெட் தடையை நிறுத்துவது போல் தெரியவில்லை. இதுகுறித்து பேசிய சுகாதரத்துறை இயக்குநர் கே.குழந்தைசாமி, ‘’இ-சிகரெட்உடல்நலத்துக்கு கேடானது. இதில் எந்த நாற்றமும் வராத காரணத்தால் பெற்றோருக்குத் தெரியாமல் புகைப்பார்கள். சிகரெட்டை விட இது அதிகவிலையுள்ளது என்றாலும் நகரத்தில் இருக்கும் பல குழந்தைகள் இதற்கு அடிமையாகும் வாய்ப்புண்டு; அதனை எளிதாக வாங்கவும் முடியும். இதையெல்லாம் விட, நிகோடின் மிகவும் மோசமானது, அதற்கு அடிமையாக்கிவிடும்’’ என்கிறார்.

‘’இப்போதுள்ள சட்டம் இ-சிகரெட்டை தடை செய்ய எங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. COTPA , சிகரெட் பயன்பாட்டை முறைப்படுத்துகிறது;தடைசெய்யவில்லை.  ஆனால்அதை தடை செய்ய இப்போது வழியில்லை’’ — சுகாதரத்துறை இயக்குநர் கே.குழந்தைசாமி

இ-சிகரெட் ஆபத்தானது என்றால் சிகரெட்டும் ஆபத்தானது தானே   என்ற கேள்விக்கு, குழந்தைசாமியிடம் பதில் இல்லை. ‘’இப்போதுள்ள சட்டம் இ-சிகரெட்டை தடை செய்ய எங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. COTPA , சிகரெட் பயன்பாட்டை முறைப்படுத்துகிறது;தடைசெய்யவில்லை.  ஆனால்அதை தடை செய்ய இப்போது வழியில்லை’’ என்றார். சிகரெட் தடை  தேசிய கொள்கையில் இல்லாத காரணத்தால் இதை தடை செய்யும்கோரிக்கையை நாங்கள் முன்மொழிய முடியாது. ஆனால், மருத்துவராகவும் பொதுநல ஊழியர்களாகவும் சிகரெட் தடையை பரிந்துரைக்கிறோம். எங்கள் பரிந்துரையும் ஆரோக்கியம் குறித்த கல்வியும் ஓரளவே பலன் தந்துள்ளது’’ என்கிறார் குழந்தைசாமி.

புகையிலை கட்டுப்பாட்டுக்கான ’தமிழ்நாடு பீப்பிள் போரம்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் இதுகுறித்துகூறுகையில், ‘’சிகரெட்டை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் தான் இ-சிகரெட் உள்ளிட்ட மற்ற போதை வஸ்துகளைத்  தயாரிக்கின்றனர். ஐடிசி போன்ற  நிறுவனங்கள் இ-சிகரெட் மற்றும் சில புகையிலை சூயிங் கம், சாக்லேட்டுகளை தயாரித்து, பள்ளிகளுக்கருகில் அவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த போதை பொருட்கள் எளிதாக கிடைப்பதால், இதுவரை எதற்கும் அடிமையாகாத பள்ளிக் குழந்தைகள் கூட அவற்றுக்கு றுஎளிதில்அடிமையாகின்றனர்.  போதை பழக்கத்தை உருவாக்கும் சாக்லேட், சூயிங் கம், சிகரெட் ஆகியவற்றை தயாரிக்கும் ஐடிசி போன்ற கம்பெனிகள், சிகரெட்டுக்கு மாற்று என்று கூறி எதற்கு இ-சிகரெட்டை தயாரிக்கிறது?  இந்த கம்பெனிகள்  தான் புகைப்பழக்கத்தை வெவ்வேறு வகையில் கொண்டுவந்து, இளைஞர்களை போதைப் பழக்கத்துக்கு  அடிமையாக வைத்திருக்க நினைக்கின்றனர்.  இ-சிகரெட்டை  முறைப்படுத்த  வேண்டும் என்றுகோரிக்கைவிடுவதை விட, அனைத்து போதைப் பொருட்களையும் 100% தடை செய்வது குறித்து யோசிக்க வேண்டும்’’ என்கிறார்.

பொது இடத்தில் சிகரெட் புகைப்பதை தடை செய்ய வேண்டும் என்ற விதி இருந்தாலும் இன்னும் அதனையே வலிமையாக முறைப்படுத்தவில்லை. ஒருபக்கம் புகையிலைக்கு தடை என்று கூறிக்கொண்டே, மத்திய அரசு  இன்னொரு பக்கம் புகையிலை மேம்பாட்டு வாரியத்தை  செயல்படுத்திவருவது மிகப் பெரிய முரண்.   புகையிலை போதை பொருட்களை அரசியல் கட்சிகளும்   விநியோகம் செய்வதில் ஈடுபட்டு வருகின்றன. அப்படியிருக்கும் போது,  புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்வது எங்கனம் சாத்தியம்?’’ என வினவுகிறார் சிரில்.

Share the Article

Read in : English

Exit mobile version