Site icon இன்மதி

அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறை ரத்து!

Read in : English

அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணி இடங்களுக்கு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்துதமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) தனியாகவும், ஆசிரியர் பணிக்கானப் போட்டித் தேர்வு தனியாகவும் நடத்தப்படும். போட்டித் தேர்வு எழுதுபவர், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரைபணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டது.

அதையடுத்து வெளியிடப்பட்ட அரசாணைப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 60 சதவீதமும்,பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்களுக்கு 40சதவீதம் என்று வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வழிமுறைகள் செய்யப்பட்டது. இந்த வெயிட்டேஜ் முறையினால் ஆசிரியர்தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றும்,  படிப்பில் மதிப்பெண் குறைவான பல ஆசிரியர்களுக்குப் பணிகிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சி ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்றாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதல்மதிப்பெண்கள் பெறுவதற்காக ஆசிரியர்கள் மீண்டும் தேர்வு எழுதும் நிலை உருவாகியது. இந்த நிலையில் வெயிட்டேஜ்முறையை நீக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரியக் கூட்டத்தில், வெயிட்டேஜ் முறையைக் கைவிடமுடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தற்போதுஅதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்களின் தகுதியைநிர்ணயிக்கும் தனித்தேர்வாக (Qualifying Examination)இருக்கும். அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்குஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வு (Competitive Examination) மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version