Site icon இன்மதி

அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு

M J Prabu

Read in : English

இன்மதி.காம் மூலமாக நான் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  உங்களிடம் உரையாடி வெகுநாட்கள் ஆகின்றன. காரணம் எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வு. அந்த ஓய்வின் மூலம் புத்துணார்ச்சி பெற்று மீண்டும் உங்களுடன் உற்சாகமாக உரையாட வந்துள்ளேன்.

இங்கு பத்தி எழுதுவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் உரையாட போகிறேன். உரையாடுதல் என்பது நமக்கிடையேயான அனுபவ பகிர்வு. நண்பர்களே உங்களில் பலர் அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கம்;கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் குறித்து ஒரு பத்திரிகையாளனாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக மட்டுமில்லாது உங்களைப் போன்ற ஒரு விவசாயியாகவும் நான் பல மன அழுத்தங்களை, கவலைகளை, துன்பங்களை சந்தித்து உள்ளேன். இவற்றையெல்லாம் ஒரு உழவன் என்பதாலேயே அனுபவித்துள்ளேன்.

என்னுடைய இந்த நீண்ட பயணத்தில் விவசாயிகள் பலர் பெரு வெற்றியடைந்ததையும் பலர் தங்கள் சொத்துக்களை இழந்ததையும் கண்டுள்ளேன். விவசாயிகள் தங்கள் உற்பத்தியை மும்மடங்கு பெருக்கியதையும் பார்த்துள்ளேன். அதேபோல் விவசாயிகள் பேரிடரின்போது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிரை காப்பாற்றியதையும் சிறு நிலப்பரப்பளவில் நல்ல மகசூலை பெற்ற விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். பல இன்னல்களுக்கு இடையில் போராடி உறுதியுடன் வெற்றி பெற்ற சிறு,குறு விவசாயியிகளையும் பார்த்துள்ளேன். நான் வெற்றி பெற்ற பல விவசாயிகளை பதிவு செய்த காலகட்டத்தில் இருளில் மூழ்கியிருந்த விவசாயிகளையும் அவர்களின் மீது வெளிச்சம் பாய அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை பற்றியும் அறிவேன்.

பல கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் இயற்கை வேளாண்மைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளேன். அரசு தற்போது இயற்கை வேளாண்மைக்கு என்று தனிச்சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அதற்கு பிறகும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. குறிப்பாக சந்தைப்படுத்துதல். விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து நாம் அனைவரும் யோசிக்க வேண்டும். நமது விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தல் ஒரு நிலையான இடத்தை எட்டினால் மட்டுமே நாம் நிம்மதியாக சுவாசிக்க முடியும்.

எதிர்வரும் காலத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அவை தமிழகம் குறித்தான அனுபவங்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. நான் கண்டுணார்ந்த மற்றா மாநில விவசாயிகள் குறித்தும் நீர் சேமிப்பு, இயற்கை வேளாண்மை, பல இக்கட்டன சூழ்நிலையிலும் விவசாயத்தை கைவிடாது செய்த பல விவசாயிகள் அவர்களின் வெற்றிக் கதைகள் குறித்து உங்களிடம் உரையாட போகிறேன். அதன்மூலம் அவர்களிடமிருந்து நாம் நிறைய ஊக்கத்தை பெறப் போகிறோம்.

இந்த பத்தியில் நான் பேசப் போகும் விவசாயிகள்  தொடர்பு எண்ணையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களை தொடர்புகொண்டு நீங்களும் தெளிவு பெற்றுக்கொள்ளலாம் அல்லவா. அதற்குத்தான். இதுவரை பத்திரிகை உலகில் யாரும் செய்யாத முயற்சியை செய்யலாம் என்று உள்ளேன். அதன்மூலம் நம்மை ஊக்குவித்துக்கொள்ள முடியும். மேலும் விவசாயத்திலிருந்து விலகி இருக்கும் பலரை விவசாயத்துக்குள் கொண்டு வரும் முயற்சிதான் இது. என்னுடைய நோக்கம் அதுதான். அதுமட்டும் நிறைவேறிவிட்டால் ஒரு விவசாய பத்திரிகையாளனாக என்னுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது என்று அர்த்தம். இதைவிட வேறு எதற்கு நான் ஆசைப்பட இயலும்?

மீண்டும் சந்திப்போம்… இந்த நாட்டுக்கு சேவை செய்பவர்கள் என்னும் விதத்தில் நாம் பெருமை கொள்வோம்.

Share the Article

Read in : English

Exit mobile version