Site icon இன்மதி

மாறிவரும் பருவத்தை ஆராய்ந்து பயிரிட்டால் லாபமே

Read in : English

பருவநிலைமாற்றம் இன்றைய காலகட்டத்தில் விவாதத்துக்கு உரிய பொருளாகவும் அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்முனை நிறுவனங்கள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க காரணமாகவும் உளளது. மாறும்பருவநிலைவும், விவசாயத்தில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் அது மேம்பாட்டுக்கு உதவக்கூடிய வகையில் அமையவும் காரணமாகிறாது. மேலும், பருவநிலை மாற்றத்தில் உணவு பாதுகாப்புக்குவழிவகுக்கும் வகையில் இருக்குமாறு ஒருவகை அணுகுமுறையை உருவாக்குகிறது. அடிமட்டத்தில் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு, முறையான அரசு மற்றும் நிறுவன செயல்பாடுகளும் செய்திகளை பரவச்செய்வதற்கான வழிமுறைகளும் அதன்மூலம் கொள்கையை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகளும் தேவைப்படுகிறது. கும்பகோணம் அருகிலுள்ள தென்னம்படுகை கிராமத்தைச் சேர்ந்த திரு.ஆர். பாஸ்கரன் இயற்கைவழிவிவசாயத்தில் முன்னோடி. இவர் இந்தவகை விவசாயத்தில் வேளாண் அறிஞர் நம்மாழ்வார் அவர்களால் ஈர்க்கப்பட்டு, கடந்த 15ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும்நெல்திருவிழாவில் முக்கியமான பங்கேற்பாளர். பாரம்பரிய நெல்வகைகளை இவர் பயிரிட்டு வருவதோடு, தொடர்ந்து ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்களை ஆராய்ச்சிக்குட்படுத்தி வருகிறார். இவருடைய இந்த ஆய்வு, பருவநிலை மாற்றத்தால் டெல்டா பகுதிகளிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் விவசாயத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

மாறிவரும் பருவநிலையால் கணிக்கமுடியாத காலநிலை:

20 வருடங்களுக்கு முன்பு, வருடத்தின் 10 மாதங்கள் குளம், குட்டைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழியும் என்பதை பாஸ்கரன் கண்டுணர்ந்துள்ளார். இது வருடத்தில் இரண்டு போக விளைச்சலுக்கு உதவியுள்ளது. அதுமட்டுமில்லமல்வருடத்தின் மூன்று மாதங்கள் மழைப் பொழிவு இருக்கும். தற்போது வருடத்தில் ஒரு மாதம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் தொடர்ந்து, 30 நாட்களுக்குக் கிடைப்பதில்லை. அனைத்து நீர் ஆதாரங்களும் வறண்டுவிட்டதால்விவசாயிகள் போர்வெல்லையும் அதற்கு மின்சாரத்தையும் நம்பி இருக்க வேண்டியதுள்ளது. பெரும்பாலான விவசாய நிலங்கள் தரிசாக உள்ளது. இதுகுறித்து பகுப்பாய்வு செய்த அவர், பருவநிலை மாற்றத்தால் தான் இவைநடைபெறுகின்றன என்பதை உணர்ந்தார். அதில் 1991-95 வரை மழை குறித்து பகுப்பாய்வு செய்ததில் இருமுறை பருவமழை பெய்கிறது என்றும் அது விவசாயிகள் இருபோக விவசாயம் மேற்கொள்ள உதவுகிறது எனவும்கண்டறிந்தார். 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பருவமழை குறைந்து அது ஒருபோக விளைச்சலுக்கு மட்டும் உதவக் கூடியதாக உள்ளது. 2000-2004ஆம் ஆண்டுகளில் பருவமழை மிக வேகமாகக் குறைந்து வறாட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் 2005-ல் அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதன்பிறகு பருவமழையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படு வருகின்றது. சில சமயங்களில் மிதம் மிஞ்சிய மழையும் சில சமயங்களில் குறைந்த மழையும் பெய்தது. 2010ஆம்ஆண்டு வரை இயல்பன நிலை இருந்தது. அதன்பிறகு 2012 மற்றும் 2013-ல் மிக மோசமான வறட்சி ஏற்பட்டது.

திரு.பாஸ்கரனின் ஆய்வுப்படி, ஐந்தாண்டுகளுக்கு வறட்சியும் திடீரென ஒரு ஆண்டு மிதமிஞ்சிய மழையும் அதன்பிறகு மிக மோசமான வறட்சியும் உருவாகி வருகிறது. விவசாயிகளால் இந்த மாறும் பருவநிலையை கணிக்கமுடியாத காரணத்தால் எந்தவகை பயிர் திட்டத்துக்கு தங்களை மாற்றிக்கொள்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அதேபோல் ஒரு வருடத்தில் இப்படித்தான் மழை பெய்யும் என தெரியாத காரணத்தால் அதற்கேற்றபயிரை பயிரிட முடியாமல் தவிக்கின்றனர். வானிலை ஆய்வு மையங்களின் கணிப்புகள் கூட பொய்த்துவிடுகின்றன. அதனால் விவசாயிகள் அவர்கள் பருவநிலை குறித்து புரிந்து வைத்திருப்பதற்கு ஏற்ப விவசாயம்செய்கின்றனர். அப்படி செய்கையில், ப்ருவமழை பொய்க்கும்போது பயிர்கள் வறட்சியில் நாசமடைகின்றன. அதே வருடத்தில் அதிக மழை பெய்தால் வெள்ளத்தில் பயிர்கள் அழிகின்றன.

மாறும் பருவநிலைக்கு ஏற்ப திரு.பாஸ்கரனின் அணுகுமுறை:

திரு.பாஸ்கரன் மாறும் பருவநிலைக்கு ஏற்ப நெல் விவசாயத்தில் தான் மேற்கொண்ட அணுகுமுறைகளையும் மாறும் கால நிலை மாற்றங்கள் குறித்த தன் பார்வைகளையும் பகிர்ந்துகொள்கிறார். நெல் விவசாயம்குறித்து விவசாயிகளுக்கு ஒரு முழுமையான புரிதல் வேண்டும் என்றும், நெல் பயிரின் குணாதிசயம் குறித்த பார்வை இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். நெல்லின் குணாதிசயத்தை ஆய்ந்த அவர், நீர்காய்தல் மற்றும் பாய்தல் குறித்து ஆராய்ந்துள்ளார். 2011ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை தண்ணீர் கிடைப்பது குறைந்ததால் வற்ட்சியான அக்காலக்கட்டங்களில் குறைவான விளைச்சலே கிடைத்தது. 2012ஆம்ஆண்டு தீபாவளியின் போது 7 நாட்கள் மழை பெய்தது. அதன்பிறகு மழையே இல்லாத காரணத்தால், அந்த வருடத்தின் சம்பா பயிர் பாதிக்கப்பட்டது. அந்த வருடத்தில் வீரியமிக்க விதைகளின் அறிமுகத்தாலும் காவிரிநதி நீர் பிரச்சனையாலும் மின்சாரம் சார்ந்த உபகரணங்களைப் பயன்படுத்தி நடவு செய்தார்கள். இயர்கை சார்ந்த வழிமுறைகளில் இருந்து விவசாயிகள் மெல்ல விலகினர். முன்பு சுஅற்சிமுறையிலான இயற்கைமற்றும் மரபு சார்ந்த விவசாயம் நடைபெற்றது. அதவாது குறுகிய காலப் பயிரில் ஆரம்பித்து பயிர்சம்பா பட்டத்துக்கு நீண்டகால பயிரும் பிறகு உளுந்தும் அதன்பிறகு மீண்டும் ஒரு குறுகிய கால பயிரும்விளைவிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு சரியான சுஅற்சிமுறை விவசாயத்தை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர்.

ஆய்வு 1:

2012ஆம் ஆண்டு வறட்சி நிலவிய போது விவசாயிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஒரு ஆய்வறிக்கையைக் கொடுத்தது. அப்போது விவசாயிகள் குழம்பிய மனநிலையிலும் விவசாயத்தை அடுத்து எப்படி செய்வதுஎன்ற தவிப்பிலும் இருந்தனர். அந்தசமயத்தில் திரு.பாஸ்கரன் நேரடி விதைப்பு முறை மூலம் 140 நாள் பயிரான வெள்ளைப் பொன்னியை விதைக்க தீர்மானித்தார். ஆரம்பத்தில் கிடைத்த மழையைக் கொண்டுசெப்டம்பர் 30ஆம் தேதி விதைத்தார். அந்த மழை நிலத்தை உஅவும் விதைக்கவும் உதவியது. அந்த மழையின் ஈரப்பதம் நெல் முளைவிட போதுமானதாக இருந்தது. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் ஒருமாஇ, தீபாவளிக்குப் பிறகு பெய்தது. அதன்பிறகு பெய்த அந்த மழை பயிர் ஒரு குறிப்பிட்ட அளவு வளர காரணமாக இருந்தது. மேலும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 10 நட்களுக்கு ஆற்றில் நீர் வந்தது. ஜனவரிமாதத்தில் நெல் பயிர் அறுவடைக்கு வந்தது. இப்படி, 140 நாட்கள் பயிரில் 10 நாட்கள் பாய்தல், 20 நாட்கள் காய்தல் என இச்சுழற்சி முறை நெல் பயிர் வளர உதவி செய்து நலல் அம்கசூலையும் கொடுத்தது. அவருடையவயலை பார்வையிட்டவர்கள் அதிசயித்தனர். நேரடி நெல் விதைப்பு முறையில் பயிரிடப்பட்டாலும், நன்கு விளைந்த நெல்மணிகள் கிடைத்தன. இதன் மூலம் நெல்பயிருக்கு அதிக நீர் தேவை, தண்ணீர் இல்லாவிட்டால்நெல் விளையாது என்ற கருத்தை உடைத்தார்.

ஆய்வு-2:

2016ஆம் ஆண்டு நெல் விளைச்சலுக்கு ஏற்ற ஆண்டாக அமையவில்லை. ஜூன் மாதத்தில் கருங்குறுவை, சொர்ணமசூரி என்ற இரண்டு பரம்பரிய நெல்வகைகளை நேரடி விதைப்பின் மூலம் விதைத்தார், அடுத்து பருவ மழை வரும்என்ற நம்பிக்கையில். ஆனால் மழை பெய்யவில்லை. விதைகள், ஏற்கனவே மண்ணில் இருந்த ஈரப்பதத்தைக்கொண்டு முளைவிட்டது. சொர்ணமசூரி நெல் நன்கு முளைவிட்டது.ஆனால் அடுத்து மழையில்லாத காரணத்தால்காய்ந்துவிட்டது. கருங்குறுவையில் முளைத்த விதைகள் ஓரளவு தாக்குப் பிடித்தன. இந்த நெல்வகை நீர்ப்பாசனம் இருப்பின் குறுவை பயிருக்கு ஏற்றது என்று நிரூபிக்கப்பட்டது. இரண்டாவது பருவத்தில், அதாவது செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் இல்லாத போதும் கால்வாயில் கிடைத்த நீரால் பயன் கிடைக்கவில்லை.மழையை எதிர்பார்த்தே நேரடி விதைப்புக்கு போவதா, நாற்றங்கால் முறைக்கு செல்வதா என விவசாயிகள்முடிவெடுப்பர். அப்போது டிசம்பர் மத்தியில் வரை மழை இல்லை. நவம்பர் மத்தியிலேயே மழை கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டபடியால், நெல் பயிர் நீடித்து நிற்கையலவில்லை. போர்வெல் வசதி இருந்த சில விவசாயிகளால்மட்டுமே நெல் உற்பத்தி செய்ய முடிந்தது. மற்ற விவசாயிகள் அப்போது நஷ்டத்தை சந்தித்தனர். அந்த சமயத்தில் தான் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் பயிரை தேடினார். அதாவது டிசம்பர், ஜனவரி மாதங்களில்கிடைக்கும் ஈரப்பதத்தைக் கொண்டே விளையும் பயிர்கள், பாசனம் இல்லாத சூழ்நிலையிலும் விளையும் பயிரை தேடினார். அப்போது உளுந்து -ஏடிடி-3, நாட்டுவகை பச்சைப் பயிறு, எள்- டிஎம்வி-3 ரகம் ஆகிய பயிர்களைத்தேந்தெடுத்தார். நிலத்தை பண்படுத்திய பிறகு டிசம்பர் 20ஆம் தேதி விதைகளை விதைத்தார். அப்போது டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளிலும் ஜனவரி மாதத்தில் 20 மற்றும் 21ஆம் தேதிகளிலும் மழை பெய்தது. பாசம் இல்லாதுஇப்பயிர்கள் பயிர் பாதுகாப்பு மற்ரும் பூச்சி கட்டுப்பாட்டு முறையினால் நன்கு விளைந்தன. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறுவடை செய்யப்பட்டது. அதில் 4 கிலோ எள் விதைத்தற்கு 250 கிலோ எள் ஒரு ஏக்கரில் கிடைத்தது. ஏடி-3 ரக உளுந்தி 20 கிலோ இரண்டு ஏக்கரில் விதைக்கப்பட்டது. அரை ஏக்கரில் வம்பன் -8 ரக உளுந்து இரண்டு ஏக்கரில் விதைக்கப்பட்டது. மொத்தமாக 1100 கிலோ உளுந்து அறுவடை செய்யப்பட்டது. பச்சைபயிறு 10 கிலோ ஒருஏக்கரில் விதைக்கப்பட 350 கிலோ அறுவடை கிடைத்தது. இது திரு.பஸ்கரனின் நிலத்துக்கு அடுத்த நிலத்திலும் அந்த ஊரிலும் இருந்த மற்ற விவசாயிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வீரியரக நெல் ரகத்தைபயிரிட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்தார்கள். காரணம் அவர்கள் மாறும் காலநிலையை கணக்கிட தவறினார்கள்.

படிப்பினைகள்

திரு.பாஸ்கரனின் அனுபவத்திலிருந்து, மாறி வரும் கால நிலைக்கு ஏற்ப என்ன ரக பயிர்களாஇ எந்த பருவத்துக்கு பயிரிட வேண்டும் என்கிற புரிதல் விவசாயிகளுக்கு வேண்டும். பாரம்பரிய ரகங்கள் பல்வேறுகாலநிலைக்கும் ஏற்றவகையில் நன்றாக விளைகிறது. அதனால் தான் அவை அந்தந்த பகுதிக்கு ஏற்றவையாக இருக்கின்றன. நீர்பாசனமுள்ள பகுதிகளுக்கு ஏற்ற வகைகளும் ராமநாதபுரம் போன்ற வறட்சி நிலவும்பகுதிகளுக்கு ஏற்ற பாரம்பரிய ரகங்களும் மணல்பாங்கான நிலத்துக்கு ஏற்ற ரகங்களும் கடற்கரையோரங்களுக்கு ஏற்ற ரகங்களும் உள்ளன. அதேபோல் ஒவ்வொரு பருவநிலைக்கும் ஏற்றார்போன்ற பாரம்பரிய பயிர்ரகங்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு நெல் ரகங்களும் அதற்கேற்ற பிரத்யேக குணங்களைக் கொண்டவை. விவசாயிகள் வறட்சி காலத்தில் விளையக் கூடிய பாரம்பரிய நெல் வகைகளை கண்டுணார்ந்தால் அதுஅவ்ரகளுக்கு நல்ல விளைச்சலைக் கொடுக்கும். அதேபோல் விவசாயிகள் 2, 3 பட்டங்கள் தொடர்ந்து ஒரே பயிரை விளைவிக்கக் கூடாது. அதேபோல் மூன்று பருவத்துக்கும் நெல் மட்டுமே விளைவிப்பதும் பயன் தராது. சம்பா பயிர் மழையை சார்ந்துள்ளது. ஆகையால் அப்பட்டத்தில் நெல் பயிரிடலாம். சம்பாவுக்கு பிறகு ஜனவரியில் பனியின் காரணமாக நிலத்தடியில் ஈரப்பதம் இருக்கும். அச்சமயத்தில் உளுந்து போன்றபருப்புவகைகளை பயிரிடலாம். அதுவும் ஜனவரி மாதம் மத்தியில் பயிரிடலாம். ஏபரல், மே மாதத்தில் ராகி , சோளம் போன்ற தானியங்களை விளைவித்தால் ஜூன் மாதத்தில் அவர் அறுவடைக்கு வரும். அதற்கடுத்துஅவர்கள் சம்பா நெல் பயிரிடலாம்.

திரு.பாஸ்கரனின் அனுபவத்திலிருந்து விவசாயிகள் பயிர் சுழற்சிக்கும் பயிருக்கும் இடையேயுள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பருவமழை நன்கு பெய்தல் நெல் பயிரிடலாம். மிதமான மழையும் பனியுமாகஇருந்தால் பயறு வகைகளை பயிர் செய்யலாம். அப்படி தேர்வு செய்தால் வருடம் முழுவதும் அவர்களால் விவசாயத்தில் ஈடுபட முடியும். குறைந்த விலையில் தானியங்களை வாங்கி குறைந்த நீரைக் கொண்டு பயிர்செய்யலாம். இப்படி பயி செய்வதன் மூலம் மாறி வரும் பருவ மாற்றத்தை விஅசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

தொடர்புக்கு: திரு.ஆர்.பாஸ்கரன், தென்னம்படுகை, பட்டீஸ்வரம், கும்பகோணம், தமிழ்நாடு. செல்பேசி: 9442871049

Share the Article

Read in : English

Exit mobile version