Site icon இன்மதி

இந்த வருடமும் குருவை சாகுபடி மூன்றில் ஒரு பங்கு அளவே: விவசாய தலைவர்

Read in : English

தமிழக அரசு நேற்று, வியாழக்கிழமை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட்டதை ஒரு விழா போல போலநடத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அணையைதிறந்துவைத்தார். அப்போது, ‘அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமலேயே நீங்கள் நீரை திறந்துவிட்டதாக  விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாரே’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘பி.ஆர்.பாண்டியனுக்கு சட்டம் குறித்து என்ன தெரியும்?’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமிபதில் அளித்தார்.

ஜூலை 19ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதால் குறுவை பயிருக்கு பயன் இல்லை. ஆனால் சம்பா பயிருக்கு இந்த நீர் பயனளிக்கும் என விவசாயிகள் தெரிவித்த கருத்தைநமது இன்மதி.காம் வெளியிட்டு இருந்தது.

இப்போதும் கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் கொடுத்திருந்தால் அது குறுவை பயிருக்கு ஓரளவேனும் பயன் அளித்திருக்கும் என விவசாயிகள் தங்கள்வருத்தத்தை பதிவு செய்கின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக  மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் குறுவை பயிர் ஒட்டுமொத்த டெல்டா விவசாய நிலங்களிலும் பயிரப்படாமல் மூன்றில் ஒரு பங்குவிவசாயிகள் மட்டுமே நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை பயிர் செய்து வருகின்றனர். இதனால் டெல்டா பகுதிகளில் மூன்று பட்டங்களில் விளைந்த  நெல் சாகுபடி, கடந்த 7 ஆண்டுகளுக்கும்மேலாக ஒன்று அல்லது இரண்டு பட்டங்களில் மட்டுமே நெல் பயிரிட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைந்து வருகிறார்கள் எனபது கண்கூடு.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் அது குறுவை பயிருக்கு எந்த விதத்தில் உதவும் என விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் கேட்ட போது, ‘’2011-12ஆம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜூன் -6ஆம் தேதியே நீரைத் திறந்துவிட்டார். அதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் மொத்தம் 4.75 லட்சம் ஏக்கர் நிலத்தில்குறுவை பயிரிட முடிந்தது. அதன்பிறகு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் தற்போது வெறும் 1.50 லட்சம்   ஏக்கரில்  தான்  குறுவை பயிரிட முடிந்தது. இந்த ஆண்டும்ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படாத காரணத்தால் அதே 1.50 லட்சம் ஏக்கரில் தான் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. ஒருவேளை ஜூன் இறுதிக்குள் மேட்டூரில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டிருந்தால்அதே 4.75 லட்சம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி நடந்திருக்கும்’’ என்றார்.

விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு  ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு,’’குறுவை குறுகிய கால பயிர் என்பதால் ஒரு விவசாயி அதிகபட்சம் 4 மாதங்களில் விளைந்தநெல்லுக்கான வருமானத்தை பார்க்க முடியும். ஆனால் சம்பா சாகுபடியை முழுமையாக நம்ப முடியாது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விடுகிறது அல்லது அதிகளவுகொட்டித் தீர்த்துவிடுகிறது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டி தீர்க்கும் நிலையும் உண்டு. மேலும் சம்பா சாகுபடி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்பட11 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தில் சம்பா பயிரடப்படுகிறது.அதில் 18 லட்சம் ஏக்கர் முழுக்க முழுக்க காவிரி நீரை நம்பி மட்டுமே பயிரிடப்படுகிறது. ஆகையால் இப்போதுதிறந்துவிடப்பட்டுள்ள நீர் சம்பா சாகுபடிக்கு பயன்படும் என நம்பலாம்’’ என கூறினார்.

காவிரியில் தற்போது கிடைக்கும் உபரி நீரால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால் காவிரி நீரை மேட்டூர் அணை தவிர்த்து வேறெங்கும் தேக்கும் வசதி இல்லை. இதற்குஎன்ன தீர்வு என ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசிடம் கேட்டோம். அதற்கு பதில் கூறிய அவர்,’’மேட்டூர் அணைக்கு கீழே ஒவ்வொரு பகுதியிலும் செக் டேம் கட்டிநீரைத் தேக்கினாலும் ஒரு செக் டேமில் அரை டிஎம்சி தண்ணீரைத்தான் தேக்க முடியும். அப்படியானால் 25 டிஎம்சி நீரைத் தேக்க குறைந்தபட்சம் 40-50 செக்டேம்களை கட்ட வேண்டும். அதற்குநான்கைந்து ஆண்டுகள் ஆகும். மேலும் அது அதிக செலவுடையது. மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை வீணாக்கக் கூடாது என்றால் அதஹ்னை தெற்கு நோக்கி திருப்பி வைகை அணையுடன்இணைக்க வேண்டும். அதற்கு நீண்ட இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும். ஆனால் அது நெடுங்காலத்துக்கு தீர்வு கொடுக்கும்’’ என்றார். மேலும்,’’தென்னிந்திய நதிகள் இணைப்புதிட்டத்தின் மூலம் கோதாவரி மற்றும் காவிரியை இணைப்பது போல, காவிரியை வைகை ஆற்றுடன் இணைக்க தமிழக அரசு திட்டம் வகுக்க வேண்டும். அப்படி செய்தால் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் பயன் அடையும். இதுகுறித்து தமிழக அரசு தீவிரமாக கலந்தாலோசிக்க வேண்டும்’’ என்றார்.

நதி நீர் இணைப்பு விஷயத்தில் அரசு தொலைநோக்கு பார்வையுடன் இருந்தால் மட்டுமே  தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். டெல்டாபகுதிகளில் மூன்று போகங்களிலும் விவசாயம் நடைபெறும்.

Share the Article

Read in : English

Exit mobile version