Read in : English

Share the Article

ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை கொள்கை ரீதியாக, சில நிபந்தனைகளுடன் ஆதரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015, ஜூன் மாதம் சில முன்நிபந்தனைகளுடன் ஒரே தேர்தல் கொள்கையைஆதரிப்பதாக அறிவித்தார். நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அளித்த கடிதத்தில் ஐரோப்பிய நாட்டில் இருப்பது போல் குறிப்பிட்ட நிலையான காலம் (ஐந்து ஆண்டுகள்) ஆட்சி நடக்க வேண்டும். அதேபோல் அமெரிக்காவில் நடப்பது போல் குறிப்பிட்ட நாளில் தேர்தலும் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறவேண்டும் என கோரியிருந்தார்.

மேலும் இதுகுறித்து 2015-இல் கூறிய அதிமுக,  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்போது சில பிறழ்வுகளும் நடக்கும் என்று கூறியிருந்தது.  சட்டசபை தேர்தல் நடத்தப்படும்போது அதன் ஆட்சி காலத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்தால் அதுகுறித்து சிலவிதிகளை உருவாக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
“இருந்தபோதும் ஒரே தேர்தல் முறையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதில் சில அம்சங்களில் மாறுதல் ஏற்படுத்துவது அவசியம். நாடளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு நிலைநிறுத்தப்பட்ட கால அளவு இருக்க வேண்டும். ‘ஃபிக்ஸ் டேர்ம் பார்லிமெண்ட் ஆக்ட் 2011’ என சட்டம் இருப்பது போலான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ளபடி மூன்றில் இரண்டு பங்கு அவை புதிய தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் அரசு கழிக்கப்பட்டால் அடுத்த அரசு அடுத்த 14  நாட்களுக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம்கொண்டுவர முடியாது.ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு குறிப்பிட்ட கால ஆட்சி என்பது நிறுவப்படவேண்டும். அதோடு, குறிப்பிட்ட தேதியில் தான் தேர்தல் நடத்தபட்ட வேண்டும், அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல். இது கட்சிகள்  தேர்தலுக்குதங்களை தயார்படுத்த உதவும். மேலும் தேர்தல் ஆணையம் பத்திரிகைகளை அழைத்து திடீரென தேர்தல் தேதியையையும் தேர்தல் நடத்தைவிதிகளையும் அறிவிக்காமல் இருக்க உதவும்.இருந்தபோதும் சில பிரச்சனைகள் இதில் எழும்.முதலாவதாக நாடாளுமன்றத்துக்கு நாட்கள் அதிகப்படுத்துவதைப் போலவோ குறைப்பதை போலவோ அதே அளவுக்கு சமநிலையுடன் சடட்சபைக்கும் நேரம் கொடுக்கப்படுமா? அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படுமா? இந்த கேள்வி ஏன் எழுப்பப்படுகிரது என்றால் 2019ல் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதில் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், தமிழக சட்டசபையின் காலம் 2016-19 வரைமட்டும் தானா? அதேபோல் உபி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்கலுக்கு 2017-2019 வரைதானா சட்டசபை? பிகாருக்கு 2015-19வரைதானா? என்ற கேள்வி எழுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்தக் குழப்பம் தவிர்க்க முடியதது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் இந்த ஒரே தேர்தல் கொள்கையை எதிர்க்கிறார்கள். காரணம் அவர்களது ஆட்சி 2021வரை உள்ளது. அதை இழக்கக் கூடாது என்று விரும்புகின்றனர். அதனால் 2024ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் இதை பின்பற்றலாம் என்கிறார்கள். 2015ல் விஜயகாந்தின் தேமுதிகவும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஆதரித்தது. ஆனால் அந்த தேர்தல் மீதமிருக்கும் ஆண்டு காலத்துக்கான தேர்தல் தானே ஒழிய அடுத்த 5 ஆண்டுக்கான தேர்தல் அல்ல என குறிப்பிட்டது தேமுதிக.

இதுகுறித்து குறிப்பிட்ட தேமுதிக, இடைதேர்தலில் தேர்ந்தெடுக்கப்படட் நபர்மீதமிருக்கும் ஆட்சிகாலத்தை ஆளலாம் என இந்திய அரசியலமைப்பு கூறுகிறது. அதேபோல் ஆட்சி காலம் முடிவதற்கு முன்பே மத்திய, மாநிலஅரசுகள் கலைக்கப்பட்டால் பொதுதேர்தல் நடத்தப்படுகிறது. அதன்பிறகு உருவாக்கப்படும் அரசு மீதமிருக்கும் ஆண்டுகளை ஆள்வதற்கு பதில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்த உரிமை உள்ளது. ஆனால் அப்படி இருக்கக் கூடாது. ஆட்சி கலைக்கபட்டுப் பின் உருவாக்கப்படும் அரசு மீதமிருக்கும்ஆண்டுகளில் மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும். இது உறுதி செய்யப்பட்டால், ஒரேநேரத்தில் தேர்தல் என்பதை குறித்து சிந்திக்கலாம்’’ என தேமுதிக கூறியுள்ளது.

ஆனால் திமுக ஒரே தேர்தல் என்பதை அடியோடு மறுத்துள்ளது. ஏனெனில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்கிறது. திமுக செயல்தலைவர் சட்டகமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் இது அரசியல் அமைப்பு சட்டத்தினடிப்படை விதிகளுக்கு எதிரானது. உருவாக்கபப்ட்டுள்ள ஜனநாயகநடைமுறைகளை செயல்படுத்த எதிராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து 1999 காலத்திய வாஜ்பாய் அரசு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதன் முடிவுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். நாங்கள் ஒரே தேசம்;ஒரே தேர்தல் கொள்கையை எதிர்க்கிறோம். ஏனெனில் இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது என திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறியுள்ளார்.

திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா இந்தக் கடிதத்தை சட்ட கமிஷனில் ஜூலை 7ஆம் தேதி சேர்த்தார். சட்ட கமிஷனின் இந்த ஆலோசனையை திமுக, கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கும் முயற்சி  என கூறியுள்ளது.மேலும்  நாடாளுமன்றம் இதை அமல்படுத்த இயலுமா என்ற சந்தேகத்தில் உள்ளது. சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் சிக்கல்கள் உடையது இம்முயற்சி என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முரணாக, சட்டக் கமிஷனின்மேல் உள்ள நம்பிக்கை போய்விடும் என திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார். சட்டக் கமிஷன் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட்ட இந்த முன்வரைவு குறித்து ஸ்டாலின் பல முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். சட்டசபைக்கென்று தனிப்பட்ட அரசியலமைப்பு அடையாளம் உள்ளது. அது பாகம் மூன்றிலிருந்து பல அதிகாரங்களை எடுத்து இயங்குகிறது. ஆனால் நாடாளுமன்றம் அரசியலமைப்பு சட்டம் 368இன் படி இயங்குகிறது. அரசியலமைப்புசட்டத்தின் உள்கூறுகளை மாற்றியமைக்க முடியாது என கூறியுள்ளார் ஸ்டாலின்.

அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி தத்துவம் மிகவும் அடிப்படையானது, அது உச்சநீதிமன்றத்தால் பலமுரை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இது ஸ்வீடன், தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் அம்மூன்று நாடுகளின் மொத்த மக்கள் தொகை தமிழக மக்கள்  தொகைக்கு நிகரானது என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.  இந்த நாடுகளின் மக்கள் தொகையை இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிடுவது தவறானது அது பல தவாறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறிய ஸ்டாலின், சட்டசபையை  ஆளுநரோ குடியரசு தலைவரோ ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் கலைத்தால், அது உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளடங்கியஅமர்வுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ மாற்றங்களை உண்டாக்கினால் அது அரசியலமைப்புச்சட்டத்தை அடிப்படை அமைப்பை மாற்றும் அபாயமும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். கட்சி தாவல் தடை சட்டத்தை மாற்றியமைப்பதை குறித்து கூறிய ஸ்டாலின் அது குதிரை பேரத்துக்கு இட்டு செல்லும் என்று கூறியுள்ளார்.

2019, 2024ஆம் ஆண்டுகளில் ஒரே தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் சட்ட கமிஷன், நாடாளுமன்றத்தை அதன் 5 ஆண்டுகாலம் முடிவடைவதற்குள்  கலைக்க முடியும் என்னும்போது எப்படி இது சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒருவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அப்போது அனைத்து சட்டசபைகளும் கலைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்புகிறார் ஸ்டாலின். தேர்தல் செலவை கணக்கிடும்போது அது மிகப் பெரும் தொகையாக இருக்கும். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு 3870 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில் அதாவது ஒரு வாக்காளருக்கு ரூ.45 வீதம் செலவழிகக்ப்பட்டது. அப்படியானால் ஒரே தேர்தல் செலவு எத்தகைய பெரியசெலவுடையது என கேட்கிறார். கூட்டாட்சி தத்துத்தை சீர்குலைப்பதாக இருப்பதால் சட்டக் கமிஷனின் இந்த பரிந்துரையை திமுக முழுமனதாக எதிர்க்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி, இது ஜனநாயகத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளது. தங்கள் எதிர்ப்பு குறித்து சட்ட கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் இதன் பாதிப்புகளை பட்டியலிட்டு கடிதம் அனுப்பியுள்ளார். சட்ட கமிஷனின் ஒரே தேசம்; ஒரே தேர்தல் உண்மை நிலைக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஒத்துஓதுகிறது என குற்றம் சாட்டியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இதனை எதிர்க்கிறது. அதன் விளைவு என்னவாக இருக்கும்?

(தொடரும்)


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day