Read in : English
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார விலை நெல்லுக்கு குவிண்டாலுக்கு 200 ரூபாய்அதிகரிக்கப்பட்டு,1750 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உளுந்து உள்ளிட்ட பருப்புவகைக்களுக்கும் பருத்தி ஆகிய 14 வகை பயிர்களுக்கும் ஆதார விலை அதிகரிக்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்ப்புதல் அளித்துள்ளது.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு(100 கிலோ) 200 ரூபாய் அதிகரிக்கபப்ட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

ரகுபதி
இதுகுறித்து செய்யூர், சிறுநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பி.ஏ. ரகுபதி கூறுகையில், “குவிண்டாலுக்கு 200 ரூபாய் என்று அதிகரிப்பதுவிவசாயிகளைப் பார்த்து இனமாக சில்லறைக் காசை விட்டெறிவது போல உள்ளது. தமிழகத்த்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல இடங்களில்விவசாயிகள் கௌரவத்துக்காகத்தான் விவசாயம் பார்த்துக்கொண்டுள்ளார்கள். டெல்லியில் பல நாட்கள் பட்டினியுடன் போரட்டம் நடத்தியும் மத்தியஅரசு எங்களை கண்டுகொள்ளவும் இல்லை. எங்கள் பிரச்சனை குறித்து விவாதிப்பதாகவும் இல்லை. இந்தியாவில் வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய், விளைபொருளுக்கு உயர்த்துவார்களா?’’ என வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
அடுத்து நம்மிடம் பேசிய மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெ. திருவேங்கடம் கூறுகையில்,

திருவேங்கடம்
‘’எதுவுமே கிடைக்காதற்கு இந்த 200 ரூபாய் ஆதார விலைஅதிகரிப்பு பரவாயில்லை என்று சொல்லக் கூடிய விரக்தியான மனநிலையில்தான் இருக்கிறோம். குறைந்தபட்சம் 5-10 ரூபாய் விலை அதிகரிக்கவேண்டும் என மாநில, மத்திய அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கைவிடுத்தும் வெறும் 200 ரூபாய்தான் குவிண்டாலுக்கு தருவார்கள் என்றால் அரசுவிவசாயிகள் நலன் மீது கொண்டுள்ள அக்கறை அவ்வளவுதான்’’ என கூறினார்.
“எப்போதோ ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் கூட மிஞ்சாது” என்று சொன்ன பழமொழி இன்றுவரை நிலைத்திருக்கிறது என்றால்காலம்காலமாக அரசாங்கம் விவசாயிகளி துன்பங்களைக் கண்டுகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். காஞ்சிபுரம் பகுதிகளில் நெல் விளைவிக்கமோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து, நாற்றங்கால், நாற்று நடுவது உள்ளிட்ட அத்தனை வேலைகளையும் செய்தால், ஒரு ஏக்கருக்கு 25-30 ஏக்கர் வரைதான் நெல் கிடைக்கும். அந்த நெல்லுக்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கலில் இதுவரை கிலோவுக்கு ரூ.16 தான் கொடுத்துவருகிறார்கள். ஆனால் உற்பத்தி செலவு அரசு கொடுக்கும் விலையை விட அதிகமாகத்தான் உள்ளது. இன்னும் கூட, அரசு நெல் விலையை ஏற்றும் என்றநம்பிக்கையில் நெல் மூட்டைகளை விறபனைக்கு கொடுக்காமல் அப்படியே வைத்திருக்கிறோம். கிலோவுக்கு வெறும் 2 ரூபாய் அதிகரிப்பதால்சிறு,குறு விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை’’ என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எம்.கே.கோபிநாதன்.

கோபிநாதன்
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முன், விவசாய சங்கங்களிடம் அரசு கருத்துக் கேட்க வேண்டும். அதைவிட முக்கியம்அமைச்சரவை முடிவு எடுக்கும்போது விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அக்கூட்டத்தில் இடம்பெறுவது அவசியம் என்ற கோரிக்கையை அனைவரும் ஒட்டுமொத்த குரலில் சொல்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்குமா?
Read in : English