Read in : English
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பத்திரிகை செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
விவசாயிகளின் தேவைகள் மூன்று வகைப்பட்டது:
- ஆதார விலை அதாவது MSP C2 + 50% -ஆக உயர்த்துவது.
- விவசாயிகள் MSP ஐப் பெறுவதற்கு ஒரு சாதகமான கொள்முதல் கொள்கை.
- உணவு பாதுகாப்புச் சட்டம், பள்ளி மதிய உணவுத் திட்டம் முதலியன நடைமுறைப்படுத்துவதுர. பொதுவான நெல் MSP ரூ 1550 முதல் ரூ 1750 வரை குவிண்டாலுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் C2 செலவு (2017-18) மற்றும் CACP ஆல் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு செலவு குறியீட்டின் அடிப்படையில் 3.6 சதவிகிதம் அதிகரித்திருக்கிருக்கிறதுறது.
- இந்த ஆண்டு (2018-19) செலவானது ரூ 1524 ஆகும். எனவே, புதிய MSP C2 + 15% – ஆகும், C2 + 50% அல்ல. ராகி புதிய MSP C2 + 20% ஆகும்.
- அதேபோல, பாசி பருப்பு MSP க்கு ரூ 5575 முதல் ரூ 6975 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது, அதாவது C2 + 19% ஆகும்.
- MSP உயர்வு பொதுவாக வரவேற்கத்தக்க முடிவு. ஆனால் கோதுமை மற்றும் அரிசி தவிர, மற்ற தானியங்களின் பொது கொள்முதல் முறை போதுமானதாக இல்லை. பருப்புகளை பயிரிட்ட விவசாயிகளின் அனுபவத்திலிருந்து இது தெளிவாகிறது. பொது கொள்முதல் அதிகளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்தார்கள்;ஆனால் ஏமாற்றம் அடைந்தார்கள். காரணம், இந்தாண்டு பருவ அம்ழை தொடங்குவதற்கு முன்பு, துவரம் பருப்பு, சோளம், நிலக்கடலை, சோயாபீன், சோளம், மற்றும் கடுகுக்கு மண்டியில் கிடைக்கக்கூடிய விலை MSPயை விட குறைவாகவே இருந்தது.
Read in : English