Read in : English
சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்திடமிருந்து அதானி நிறுவனகுழ்மத்துக்கு கைமாற உள்ளது. இது கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள துறைமுக வியாபாரத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு பகுதி சந்தையை குறிவைத்து, அதானிகுழுமம் காழுட்டுப்பள்ளி துறைமுகத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் ஒரு முனையத்தை நிர்வகித்து வந்த அதானிகுழுமம், தற்போது மொத்த துறைமுகத்துக்கும் உரிமையாளராகி உள்ளது. தர்போது காட்டுப்பள்லி துறைமுகத்தை வாங்கீப்பகுதியில் கால்பதித்துள்ளஅதானி குழுமம், தன் செயல்பாடுகளை சென்னையிலுள்ள காமராசர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்துக்கும் விரிவுபடுத்தலாம்.
வேகமாக செயல்படும் திறன், விலை, பல்வேறு சரக்குகளை கையாளும் திறன், உடனுக்குடன் முடிவெடுத்தல் ஆகிய குணாதியசங்களால் காட்டுப்பள்ளி போன்ற தனியார் துறைமுகங்கள அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகங்களை விட சிறப்பாக செயல்படுகிறது. அரசு துரைமுகங்கள்சந்தை நிலவரத்துக்கு ஏற்றார்போல் செயல்படுவதில்லை.
இந்திய துறைமுக பிரிவில், குஜாரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தனியார் குழுமமான அதானி குழுமம் மேற்கிலிருந்து கிழக்கு வரைஅனைத்து துறைமுகங்களிலும் நிறைந்துள்ளது.மேற்கு துறைமுகத்தில் முந்தரா, டாஹேஜ், ஹஸிரா, விழிஞ்சியம், துனா,முர்முகோ ஆகியதுறைமுகங்கள் அதானி குழுமத்தின் கீழ் இயங்குகிறது.
கிழக்கு கடற்கரையில் தர்மா, காட்டுப்பள்ளி, காமராசர், மற்றும் விசாகபட்டினம் துறைமுகங்களும் அதானி குழுமத்தைச் சார்ந்வையே.
காட்டுப்பள்ளி துறைமுகத்துக்காக 1,950 கோடி ரூபாய்களை அதானி குழுமம் லார்சன் அண்ட்டர்போ நிறுவனத்துக்கு விலையாகக் கொடுக்கவுள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகம் நவீன துறைமுகங்களில் முக்கியமானது என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையின் ஏற்றுமதி மற்றும்இறக்குமதிகான நுழைவாயிலாக இது இருக்கும். மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் வேகம் மூலமாக சென்னை மற்றும் பெங்களூருவின் தொழில்வளர்ச்சிக்கு உதவும்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தின் தனிச்சிறப்பு அந்துள்ளதன் அமைவிடம். சென்னையிலிருந்து வடக்கு நோக்கி 30கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளகாட்டுப்பள்ளி துறைமுகம், வட தமிழகம், பெங்களூரு, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளை இணைக்கிறது என அதானி குழுமத்தார் கூறுகின்றனர். காட்டுப்பள்ளி பகுதியில் 322 ஏக்கர் காலி இடமுள்ளதால் அங்கு துறைமுகத்தை விரிவுபடுத்தினால் துறைமுக வியாபார தேவைகளை நிவர்த்திசெய்யமுடியும் என்கிறார்கள் அதானி குழுமத்தினர். ஒரு துறைமுகத்தின் உரிமையாளராக ஒரு நிறுவனம் இருக்கும்போது தங்கள்வாடிக்கையாளர்களுக்கு அவர்களால் அதிக சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும்; அதனால் வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்நிபுணர்கள்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ளன710 மீட்டர் நீளமுள்ள இரண்டு பெர்த்துகள் உள்ளன. அதில் ஆறு ன்களும்கின்களும் கிவே வகை கிரேன்களும் 15 ரப்பர் டயர் வகைகிரேன்களும் உள்ளன. இவற்றால் ஒரு வருடத்துக்கு 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாள முடியும்.”தென்னிந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாக காட்டுப்பள்ளிதுறைமுகத்தை உருவாக்க அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் 40மில்லியன்மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும்விதத்தில் துறைமுகம் மேம்படுத்தப்படும். மேலும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளும் சரக்குகளை திறமையுடன்கையாளும் வகையில் துறைமுகம் அமைக்கப்படும்” என அதானி குழுமத்தின் சிஇஒ கரன்அ தானி கூறியுள்ளார். மேலும் காட்டுப்பள்ளி துறைமுகத்தைபல்நோக்கு துறைமுகமாக மாற்றவும் குறிப்பாக கண்டெய்னர்கள், ஆட்டோமொபைல், நீர்மப் பொருட்கள், பொதுசாமானகள் ஆகியவற்றை கையாளும்வகையில் அமைகக்ப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
60 கிலோ லட்சம் கொள்ளவுகொண்ட நீர்மப் பொருட்களை புழங்கும் வசதிகொண்ட பெரும்தொட்டிகள் அமைக்கும் பணி 2019ஆமாண்டுக்குள்நிறைவேற்றப்படும். இந்த யுக்தி துறைமுகம் சார்ந்த வியாபாரங்களை மாற்றம்.காரணம் காமராசர் துறைமுகம் இதே சரக்குப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
ஒரு தனியார் துறைமுகமாக காட்டுப்பள்ளி துறைமுகத்தின் நெளிவுசுளிவுகளும் வேகமும் வணிகத்திறனை அதிகப்படுத்தும். காரணம் அரசுதுரைமுகங்களான சென்னை துரைமுகத்திலும் காமராசர் துறைமுகத்திலுமிந்த வேகம் இல்லை. அதனால் அதானி குழுமத்துக்கு நிறைய பணிகளும்வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். மிக குறுகிய காலத்தில் காட்டுப்பள்ளி துறைமுகம், சென்னை துறைமுகம், காரமராசர் துறைமுகத்துக்குஇடையே வணிகரீதியான போட்டி உருவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சரக்கு ஏற்றுமதி/இறக்குமதி வியாபாரம் குறைவாக உள்ளநிலையில், இது வியாபாரத்தை அதிகப்படுத்தும். இதற்கான சந்தை விரிவடையும்போது இந்த துறையிலுள்ள அனைவருக்கும் வியாபாரம் அதிகரிக்கும்என்கிறார்கள் நிபிணர்கள்.
Read in : English