Site icon இன்மதி

காவிரி ஆணயம் நற்செய்தி: முப்போகத்துக்கு திரும்பவது எப்படி என்று ஒரு விவசாயி விவரிக்கிறார்

Read in : English

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் யதலைமையில் கூட்டம்நடைபெற்றது. இதில் நீர் பற்றாக்குறை, அணை பராமரிப்பு மற்றும்கொள்ளளவு, தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  ஜூலை மாதத்திற்காக தமிழகத்திற்கு 34 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் ஜூன் மாதம் வழங்க வேண்டிய நீரை விட அதிக நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் 31.24 டிஎம்சி திறக்கவேண்டும் என்று முடிவாகி உள்ளது. ஆகஸ்டு மாதம் திறக்க வேண்டிய நீர் குறித்த கூட்டம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. அதில்  இன்றைய நிலவரப்படி 60 அடி தண்ணீர் உள்ளது. ஏழாவது ஆண்டாக குறுவைக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அதனால் காவிரி டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிபாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த விவசாயி ஆர். பாஸ்கரனிடம் கேட்டோம்.

‘’மேட்டூர் அணையில் 90 அடி நீர்மட்டம் இருந்தால் உடனே திறந்துவிடுவார்கள். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படாத காரணத்தால் காவிரி டெல்டா முழுவதும் குறுவை பயிர் என்பது  கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. இந்நிலையில்இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆணையத்தின் இந்த உத்தரவை ஏற்று கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் குறுவைக்கு நீர் கிடைக்கும். ஆனால் அது காவிரியின் கடைமடைப் பகுதிக்கு செல்லாது. தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட சில பகுதிகளில்குறுவை பயிர் சாகுபடி செய்யலாம். அவ்வாறு செய்தால் விவசாயிக்கு குறுவை, சம்பா என இரண்டு சாகுபடியும்  அதனால் வருமானமும் கிடைக்கும்.

அதேபோல் ஆகஸ்டு மாதத்தில் கண்டிப்பாக காவிரி நீர் வரும் என்கிற உத்தரவாதம் இருந்தால், சம்பா பயிருக்கான நெல் நாற்றாங்கல் தயாரிக்கும் பணியில் ஆகஸ்டு மாதத்திலேயே விவசாயிகள் ஈடுபடுவார்கள். சம்பா பயிர் பொதுவாக 140-150 நாட்கள் வளரும். ஆகையால் ஆகஸ்டு மாதம் தண்ணீர் விடுவதை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். குறுவை, சம்பா பயிர்கள் பாதிக்கப்படுவதால் கால்நடைகளுக்குத் தீவனம் கிடைப்பதில்லை. ஆகையால் மேலாண்மை ஆணையம் ஆகஸ்டு நீர்வரத்தை உறுதி செய்ய வேண்டும். அதேகாலகட்டத்தில் வடகிழக்கு பருவ மழையும் பெய்துவிட்டால் சம்பா பயிர் சிரமமின்நறி நடக்கும்ர்’’ என்றார் பாஸ்கரன்.

அவர் சொன்ன நடைமுறை யுக்தி ஆச்சர்யமானதுதான். அதை வேளாண்மை துறையினரும் விவசாயிகளும் பரிசீலிப்பது அவசியம்.  சம்பா பயிரை அடுத்து குறுகிய கால பயிராக கார்வகை நெல்லை பயிரிடலாம். அவை 60-90 நாட்களுக்குள் வளரும் தன்மைகொண்டது. மேலும் சம்பா பயிரின்போது இருந்த நீர், மண்ணீல் ஈரத்தன்மையை அதிகரித்திருக்கும். அந்த ஈரத்தனமையைப் பயன்படுத்தி கார்வகை நெல்லை பயிரிடலாம். அப்போது குளிர்காலம் என்பதால் அப்போது கிடைக்கும் பனியும் விவசாயத்துக்கு உதவிசெய்யும்’’ என்று ஆச்சர்யமூட்டினார்.

சம்பா, கார் பயிர் முடிந்ததும் சிறு தானியங்களைப் பயிரிடலாம். இப்படி பயிர் செய்தால் சம்பா+கார்+சிறுதானியம் என முப்போகம் விளைச்சல் இருக்கும்.

அடுத்து சம்பா, கார் பயிர் முடிந்ததும் சிறு தானியங்களைப் பயிரிடலாம். இப்படி பயிர் செய்தால் சம்பா+கார்+சிறுதானியம் என முப்போகம் விளைச்சல் இருக்கும். இப்படி விவசாயிகள் திட்டமிட்டால் விவசாய வருமானத்துக்கு அதிக பிரச்சனை இருக்காது. ஆனால், அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்கி கர்நாடக அரசு தண்ணீர்  விடுவதை உறுதி செய்வது அவசியம்’’ என்கிறார் தீர்க்கமாக.

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் செல்வோம் என கூறிவரும்நிலையில், ஏற்கனவே  உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் இன்று ஆணையம் அளித்த உத்தரவுக்கும் கட்டுப்பட்டு நீரைத் திறந்துவிட  வேண்டும் என்பதே காவிரிடெல்டா விவசாயிகள் மட்டுமில்லாது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version