Site icon இன்மதி

மீளாத்துயிலை நோக்கி சர்க்கரை ஆலைகள், விவசாயிகள்

தேனியில் கரும்பு விவசாயம்

Read in : English

கடந்த ஏழாண்டுகளாக தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மீளாத்துயிலை நோக்கி நகர்ந்துவிட்டது. சர்க்கரை விவசாயிகள் மற்றும் ஆலைகளின் மோசமான நிலை தொடற்கிரது. தமிழ் நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவு மற்றும் உர்ப்பத்தி சமீப காலங்களில் 50% குரைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  தற்சமயம் மத்திய அரசு 30 லட்சம் டன் டன்சர்க்கரையை கிலோ 29 ரூபாய்க்கு கொள்முதல் செய்து இருப்பு வைப்பதாக முடிவெடுத்துள்ளது. இது சற்றுஆறுதலான செய்தி. ஆனால் இந்த பிரச்சனையின் தீவிரம் மிகவும் ஆழமானது.

மேற்படி பிரச்சனைகளுக்கு யார் காரணம்? அதற்கான தீர்வு என்ன என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். பிரச்சனைக்கு மூலகாரணம்  1. மத்திய, மாநில அரசுகளின் பேராசை. 2. சர்க்கரை ஆலைகளின் பேராசை 3. கரும்பு விவசாயிகளின் பேராசை.

மத்திய, மாநில அரசுகள்
கரும்பு ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 40 டன்கள் உற்பத்தியானது. மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி, மறைமுக வரியாக ( GST-க்கு முனொபுமுன்பு) சுமார்10,000 ரூபாய் வரை செலுத்தப்படும். இது 12 மாதம் உழைத்து விவசாயிகளுக்கு வரும் லாபத்துக்கு சமமானது. இவ்வளவு தொகை வரியாக வந்தும், மேற்படி தொழிலை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில்கொள்ளவில்லை.மேலும் சர்க்கரை நுகர்வு என்பது மொத்த சர்க்கரை உற்பத்தியில் 65% குளிர்பான நிறுவனங்கள் (Coco Cola, Pepsi) மருந்து உற்பத்தியாளர்கள்(Horlicks, complan etc)  இனிப்பகங்கள் போன்றவை கொள்முதல் செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்படி ஆலைகளுக்கு சாதகமாகவும் சர்க்கரை  ஆலைகளுக்கு பாதகமாகவும் சர்க்கரை தாராளமாக இறக்குமதிசெய்ய அனுமதிக்கப்பட்டது. ஆகையால் உள்நாட்டு சர்க்கரை  விலை போகாமல் தேக்கம் அடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கச்சா எண்னெய் விலை 30 டாலராக சரிந்த பொழுது, எத்தனால் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்தது. அந்தசமயம் எத்தனால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள தென் அமெரிக்க நாடுகடுகள் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் எத்தனால் உற்பத்தியைநிறுத்திவிட்டு, சர்க்கரையை உற்பத்தி செய்தார்கள். இதை மத்திய அரசு கவனிக்கத் தவறிவிட்டது.

தென் அமெரிக்க நாடுகள் 40 ஆண்டுகளாக  எத்தனால், உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் நமது மத்திய அரசு கச்சா எண்ணெய்விலையேற்றத்தின் போது மட்டும் இதைப்பற்றி பேசுவார்களே ஒழிய, அவர்களுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதில் விருப்பம் இல்லை.

தமிழக அரசைப் பொருத்தமட்டில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முழுவதும் கொள்முதல் செய்வதில்லை. அப்படி கொள்முதல்செய்தாலும் சரிவர பணம் வழங்குவதில்லை. அதிக விலை கொடுத்து வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்வதில் உள்ள ஆர்வம், நமது சர்க்கரைஆலைகளின் மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் இல்லை.

ENA (Enriched Neutral Alcohol) இது சர்க்கரை ஆலையின் உபபொருள். இதற்கு மிக அதிக அளாவில் வரி விதித்தும் அயல்நாட்டு மது உற்பத்தியாளார்களுக்குவிலையேறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

தேர்தல் வரும்சமயங்களில் மட்டும் கரும்பிற்கான ஆதார விலையை உயர்த்திவிடுகிறார்கள்.

சர்க்கரை ஆலைகளின் பேராசை
சர்க்கரை ஆலைகளைப்பொருத்தவரை தொழிலுக்கான உரிமம் பெறும்போது துமேற்படி ஆலை வருடத்திற்கு 100-120 நாட்கள் இயங்குவதற்கானமூலப்பொருள் கிடைக்கும் என்ற சலுகையைப் பெறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் 250 நாட்களுக்க்கு மேல் இயக்குகிறார்கள். அவர்களுக்காகஒதுக்கிய பகுதியில்கரும்பை அபிவிருத்தி செய்யாமல் வெளிமாவட்டங்களில் உள்ள பதிவு செய்யாத கரும்புகளை இடைத்தரகர்களைக் கொண்டுகொள்முதல் செய்வதால், பதிவு செய்த விவசாயிகளின் கரும்பை அறுவடை செய்வதில் தாமதத்தை ஏற்படுத்தி நஷ்டத்தை உண்டாக்கினார்கள். அதுசமயம்அதுசமயம், சர்க்கரை ஆலையின் அதிகாரிகள் முதிர்ச்சி அடையத கரும்புகளையும் தரம்குறைவான கரும்புகளையும் கொள்முதல்செய்வதால் ஆலையின் சர்க்கரை கட்டுமானம் பாதிப்பந்டைந்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு சுத்திகரிக்கப்படாத சர்க்கரை  மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. மேற்படி சர்க்கரையை சுத்தம் செய்வதற்குஒருகிலோ சர்க்கரைக்கு சுமார் 4 லிட்டர் தண்ணீர் செலவாகும். மேலும் சுற்ருச் சூழலும் மாசடையும். இவர்கள் கரும்பில்லாமல் உற்பத்தி செய்யவேண்டும் என்ற பேராசையின் காரணமாக, பெருமளவில் இறக்குமதி செய்து பெரும் நஷ்டம் அடைந்தார்கள்.

கரும்பு விவசாயிகளின் பேராசை
கரும்பு விவசாயிகளைப் பொருத்தவரை, ஒரு கிராமத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலம் கரும்பாக இருக்கும் வரை வேலையாட்களுக்கு வருடம் முழுவதும்வேலை கொடுக்கலாம். அதுவே 75% கரும்பு பயிரிட்டால் வேலையாட்கள் கிடைக்காமல் கரும்பு உற்பத்தியும் பாதிக்கப்படும். கரும்பு வெட்டுவதும்தமதப்படும். அதுவே 30% இருந்தால் சமூக ஒழுங்கு நிலைநாட்டப்படும். தமிழக சர்க்கரை ஆலைகளின் நிலை தமிழக சர்க்கரை ஆலைகளின் இன்றைய நிலைக்கான காரணங்கள்:

தமிழகத்தின் நிலை
2007-2008ம்  கரும்பு பருவத்தின் பொழுது அளவிற்கு அதிகமான கரும்பு உற்பத்தியாளர்கள் கரும்பை உற்பத்தி செய்தார்கள். குறிப்பக எல்லா மாவட்டங்களிலும் கரும்பு பதிவு செய்யாமல் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டது. மேற்படி பதிவு செய்யாத கரும்புகளை சர்க்கரை ஆலைகள் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்து பதிவு செய்த விவசாயிகளுக்கு வெட்டு உத்திரவு தராமல் காலம் தாழ்த்தி அவர்கள் கரும்பை அறுவடை செய்தார்கள். மேலும் பணமும் மிகவும் கால தாமதாக கொடுக்கப்பட்டது. அதனால் மனம் வெறுத்த கரும்பு உற்பத்தியாளர்கள் படிப்படியாக கரும்பு உற்பத்தியை குறைத்துவிட்டனர். அதனால் தற்சமயம் கரும்பு உற்பத்தியானது சர்க்கரை ஆலைகளின் மொத்த அரவைத்திறனுக்கு 30% மட்டுமே உள்ளது.

2008-2009ம் ஆண்டுகலில் மத்திய அரசு சுத்திகரிக்கப்படாத சர்க்கரை(Raw Sugar) இறக்குமதி செய்ய அனுமதித்தது. அதுசமயம் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு துறைமுக  வசதிமற்றும் சாலை வசதி ஆகியவை அனுகூலமாக இருந்ததால் அதிக அளவு சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (Raw Sugar)இறக்குமதி செய்யப்பட்டது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு இல்லாமல் சர்க்கரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற பேராசையின் விளைவாக மேற்படி இறக்குமதி நடைபெற்றது. உதாரணமாக தஞ்சை மாவட்டத்தில் இயங்கும் திரு.ஆரூரான் சர்க்கரை ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 50ஆயிரம் டன்கள் மட்டுமே. மேற்படி ஆலை மட்டுமே சுமார் 12 இலட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை க்யூபா, ப்ரேசில போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. மேற்படி சர்க்கரை சுத்தம் செய்த பின்பு அவை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,இவர்கள் சர்க்கரையை சுத்தம் செய்வதற்குள் உலக அளவில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்தது.இதன் காரணமாக இந்த ஆலைக்கு மட்டும் சுமார் 90கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சர்க்கரையானது உள்நாட்டில் தேக்கமடைந்து. தமிழகத்தில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்து அனைத்து சர்க்கரை ஆலைகளு பெருத்த நஷ்டமடைந்தன. மேலும், சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை பெரும்பாலான ஆலைகள் இறக்குமதி செய்து பெருத்த நஷ்டம் அடைந்தன

இதே தருணத்தில் தமிழக அரசும் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுவதும் கொள்முதல் செய்யாமல் வெளிமாநிலத்திலிருந்து  கூடுதல் விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தும் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் உத்திரபிரதேசம்,மகாராஸ்டிரம் போன்ற மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்த மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.6.30 வீதம் வழங்கும் போது தமிழகத்தில் மட்டும் ரூ.4.15 மட்டுமே வழங்கப்பட்டது

மேற்படி காலக்கட்டத்தில் மத்தியரசு அகில இந்தியளவில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு சர்க்கரையின் விற்பனையிலிருந்து கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அந்த சமயம் வட இந்தியாவில் உற்பத்தியான சர்க்கரை பெருமளவில் தமிழகத்திற்கு வந்தது. அது சமயம் தமிழக அரசும், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைக்கு மட்டும் 5% வாட்டு வரி விதித்து தமிழக சர்க்கரை ஆலைகளை உற்பத்தி செய்த சர்க்கரைக்கு கூடுதல் நஷ்ட த்தை ஏற்படுத்தியது.

எக்ஸ்ட்ரா ந்யூட்ரல் ஆல்கஹால் வெளிமாவட்டங்களில் 2% விற்பனை வரி ஆனால், தமிழகத்தில் மட்டும் 14.5% விற்பனை வரி இதனால் சர்க்கரை ஆலைகள் வெளிமாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுடன் போட்டி போட முடியவில்லை. மேலும், தமிழக அரசு வழிவகை கடன்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மட்டுமே வழங்கியது. தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு உற்பத்தியில் – 70% உற்பத்தி செய்தாலும் அவர்களுக்கு மேற்படி கடன் வழங்கப்படவில்லை

மின்வெட்டு, தொடர் வறட்சி, சர்க்கரை ஆலைகளில் தொடர் நஷ்டங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளில் திருப்தியின்மை, நிலத்த்டி நீர்மட்டம் குறைந்தது போன்ற காரணங்களினால் தற்சமயம் விவசாயிகள் மனம் வெறுத்து கரும்பு உற்பத்தியை குறைத்துவிட்டார்கள். தற்பொழுது நமது தேவையை விட 70%த்திற்கு மேல கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது

தீர்வு
1963 ஆண்டுகளில்  P.L 480 என்ற திட்டத்தின்படி அமெரிக்காவில் இருந்து இலவசமாக கோதுமையை பெருமளவு இந்தியா இறக்குமதி செய்தது. அதன் தொடர்ச்சியால வட இந்தியாவில் கோதுமை விலை சரிந்து கோதுமை உற்பத்தி பாதிப்படைந்து இந்திய அரசாங்கம் பல இன்னல்களுக்கு ஆளாகியது. அது சமயம் இனிவரும் காலங்களில் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தால் நிலைமை விபரீதமாகும் என்பதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.  ஆனால், சமீப காலங்களில் அவற்றை மறந்து சர்க்கரை இறக்குமதி செய்ததன் விளைவை இனிவரும் காலங்களில் நாம் சந்திப்போம்.

இந்திய அரசாங்கம் நாள் ஒன்றிற்கு சுமார் 4 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. 10% எத்தனாலை கலந்தால் கூட இறக்குமதி பெருமளவு குறைந்து அந்நிய செலாவணி மிச்சப்படும். இதன் காரணமாக வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) பெருமளவில் குறையும். இதனால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 குறைந்தால் கூட அரசுக்கு வருவம் ஒன்றிற்கு சுமார் 20,000 கோடி மிச்சப்படும். ஆகையால் இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலையைப் பற்றி கவலை கொள்ளாமல் எத்தனால் கலப்பதை சட்டமாக மாற்ற வேண்டும். மேலும், மேலைநாடுகளில் First Mill Juice ஐ மட்டும் சர்க்கரையாக மாற்றி  Second, Third Mill Juice ஐ எத்தனாலாக மாற்றிவிடுகிறார்கள்

இதுபோல் நாமும் செய்தால் ச்ர்க்கரை உற்பத்தியை பாதியாக குறைத்து எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கலாம். சர்க்காரை ஆலைகளில் நிர்வாகத்தில் விவசாயிகளின் பங்களிப்பு சட்டப்பூர்வமாக இருக்கும்படி ஏற்படுத்த வேண்டுக்

சமீப காலங்களில் NOKIA, VODAFONE போன்ற நிறுவனங்க மிகப் பெரிய அளவில் வரி ஏய்ப்பும் செய்தார்கள், வரித்  தள்ளுபடியும் பெற்றோர்கள் மற்றும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நமது நாட்டில் உள்ள சர்க்கரை  ஆலைகள் 50% மிகவும் பழமையானவை. கடந்த 50 ஆண்டுகளாக முறையாக வரிகள் செலுத்தி வருகின்றன. இவற்றை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் நலன் கருதியும் மேற்படி ஆலைகளுக்கு 3 ஆண்டுகள் எந்தவித வரிவிதிப்பும் இல்லாமல் செய்தால் அவர்கள் புணரமைத்து சரி செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.மேலும் அவர்களின் அனைத்து வங்கி கடன்களுக்கான வட்டியும் அரசு மானியமாக வழங்கினால், மேற்படி ஆலைகள் மீளத்துயிலை நோக்கி செல்லாமல் தவிர்க்கலாம்  என்பது எங்களைப் பொன்றவர்களின் கருத்து

ரங்கராஜன் கமிட்டி சர்க்கரை விலையில் 75% கரும்பு விவசாயிகளுக்கு என பரிந்துரை செய்துள்ளது. மேற்படி கமிட்டி கரும்பு உற்பத்தி செலவை கருத்தில் கொள்ளவில்லை என்பது மிகவும் வருதத்திற்குரிய செய்தி. M.S. சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்ப செலவை கவனத்தில் கொள்ள வேண்டும்.

(இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு கரும்பு விவசாயி)

Share the Article

Read in : English

Exit mobile version