Read in : English
18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழ்க்கில் நீதிபதி விமலாவை மாற்றி நீதிபதி சத்யநாராயணாவை நியமித்தது உச்சநீதிமன்றம். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
செப்டம்பர் 2017இல், சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ களை நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது மாற்றி வாக்களித்தால் தகுதிநீக்கம் செய்தார். இதனால் சட்டசபையில் எண்ணிக்கை 216 ஆக குறைந்து, பெருன்பான்மை எண்ணிக்கையும் 108 ஆக குறைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ க்கள் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பனர்ஜீ சபாநாயகருக்கு ஆதரவாகவும், நீதிபதி சுந்தர் சபாநாயகருக்கு எதிராகவும் தீர்ப்பு அளித்தனர். மூன்றாம் நீதிபதியை மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் பரிந்துறைப்பார் என வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்ததை தொடர்ந்து, நீதிபதி விமலா நியமனம் செய்ய்யப்பட்டர். ஜூன் 18-ஆம் தேதி மூன்றாம் நீதிபதியாக நீதிபதி விமலாவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
நியமனம் செய்ய்யப்பட்ட நீதிபதி விமலாவை மனுதாரர் விமர்சனம் செய்வது தவறு என்றும் கருத்தை திரும்ப பெற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறிவுரைத்தது. நீதிபதி விமலாவிற்கு மாற்றாக நீதிபதி சத்யநாராயணனை நியமித்தது.
நீதிபதி சத்யநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக ஏப்ரல் 23, 2008ல் பொறுப்பேற்று, பின் நவம்பர் 9, 2009ல் நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார்.
Read in : English