Site icon இன்மதி

சிபிஎஸ்இ’க்கு நிகராக ஸ்டேட்போர்ட் பாடத்திட்டத்தை உயர்த்தும் முயற்ச்சி

Read in : English

மாநில அரசின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக கல்வித்துறை சமீபத்தில்  ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் கேள்வித்தாளில் மாற்றங்களைக் கொண்டு வர பல சீர்திருத்தங்கள்செய்யப்பட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் உள்நோக்கம் கொண்டவை என நிபுணர்கள்எச்சரிக்கின்றனர். மேலும் அவர்கள், மாணவர்களின் திறன் மேம்பாடும் கல்வியறிவும் உள்கட்டமைப்பில் பல மாற்றங்களைசெய்தால் தான் உயர்வடையும் என்கின்றனர்.

சுற்றறிக்கையில் இந்தாண்டு முதல் ப்ளூபிரிண்ட் முறை பின்பற்றப்க்பமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. முன்பு, ப்ளூபிரிண்ட்முறையில் கேள்வித் தொகுப்புகளில் இருந்தே தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். அக்கேள்விகளுக்கு மட்டுமே மாணவர்கள் தயார்செய்வார்கள். கடந்த வருடத்தில், ப்ளூ பிரிண்ட் முறை 10ஆம் வகுப்புத் தேர்வில் எந்த முன்னறிவிப்பும் இன்றிகடைபிடிக்கப்படவில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டில் இந்த மாற்றங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“எந்த முன் தகவலும் அறிவிப்பும் இன்றி கடந்த ஆண்டு கேள்வித்தாள் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும்மாணவர்கள் நன்றாக தேர்வை எதிர்கொண்டனர்’’ என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர்கள் கழகத்தின் தலைவர் பி.கே. இளமாறன்.

ப்ளூபிரிண்ட் முறையை ஒழித்ததில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம்  சிரிது சரிந்தது என்கிறார் கல்வியாளர்பிரின்ஸ் கஜேந்திர பாபு.

“1980களில் ப்ளூபிரிண்ட் முறையே இல்லை. ஆனால்90களில்ளுக்குப் பிறகு தனியார் பள்ளிகள்பெருகியதும், அவர்கள் தங்கள் பள்ளியின் தேர்த்தி சதவீதத்தை அதிகப்படுத்த ப்ளு பிரிண்ட் முறை ஊக்கப்படுத்தினார்கள்’ எனவிமர்சிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

இந்த சுற்றறிக்கையை ஆதரிக்கும் கல்வியாளர் பாலாஜி சம்பத், சிபிஎஸ்இ-லும் கேள்விகள் சுலபமாகவும் நேரடியாகவும் இருக்கும். ஆனால் 90 சதவீதம் மார்க் வாங்குவது கடினமாக இருக்கும். கேள்வித்தாள்கள் அவ்வாறு இருக்கும்படிதான் அமைக்கப்படவேண்டும். அடுத்தகட்டமாக, பாடப்புத்தகத்தை முழுக்க படிப்பதாக இருக்காமல், கற்றவைகளை செயல்படுத்திப் பார்க்கும்முறையிலும் இருக்க வேண்டும் என்கிறார் சம்பத்.

அந்த சுற்றறிக்கையில், கேள்வித்தாள் மாணவர்களின் கற்பனைத் திறனையும் மேம்படுத்தப்பட்ட  சிந்தனையையும்ஊக்கப்படுத்துவதாக இருக்கும். மேலும் பெரும்பாலான கேள்விகள் புத்தகத்துக்கு வெளியே இருந்து கேட்கப்படும் என்றுகூறப்பட்டுள்ளது. ஆனால் இது மாநில கல்வித்திட்டத்தில் சரிவை ஏற்படுத்தும் என்கிறார்கள் சிலர். “முதல் கட்டமாக, பாடப்புத்தகத்தில் இருப்பதில் சிறு மாற்றங்களை உருவாக்கி கேள்விகளை கேட்பதாக இருக்க வேண்டும். உதாரணமாக, கணக்குப் பாடத்தில் இருக்கும் எண்களை மாற்றி, புதுக் கேள்வியாக கேட்கலாம்’’ என கூறுகிறார் சம்பத்.  பாடப்புத்தகத்துக்குவெளியே இருந்து கேட்கப்படும் கேள்வி முறை குறித்து சம்பத் சந்தேகிக்கிறார். ற்றி’இவ்வாறு புத்தகத்துக்கு வெளியே இருந்துகேள்விகள் கேட்கப்படும் முறையில் எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் மாநில கல்வி முறை உணர்த்தியுள்ளது’ என்கிறார்அவர்.

இதுகுறித்து மேலும் கூறிய சம்பத், மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இக்கு இணையாக கொண்டுவருவதில் கொள்கைமுடிவாளர்கள் உறுதியாக உள்ளார்கள் என்கிறார். தற்போது 1,6,7,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம்மாற்றப்பட்டுள்ளது. ஆனால் 12ஆம் வகுப்பு பாடங்கள் மாற்றப்படாமல் உள்ளன. 2020க்குள் அவை மாற்றப்படும் என உறுதியளிக்கிறார் ஆசிரியர் இளமாறன்.

“அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருந்தால் தான் இந்த சீர்திருத்த்தங்கள் பலன் தரும்’’ என்கிறார் கஜேந்திர பாபு.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் உயர் தரமானவை. சில இடங்களில் அது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விடமேலாக உள்ளது என்று கூறுகிறார் சம்பத்.“புதிதாக அறிமுய்கப்படுத்துப்பட்ட கல்வி, நல்ல அளவீடுடுகளை உடையது. அதுமாணவர்களை போட்டித் திறன் உடையவர்களாக மாற்றும் என்கிறார் கஜேந்திர பாபு. மாணவர்ணவர்கள் க்யூ.ஆர் கோட்(QR)  பயன்படுத்தி தங்கள் மொபைல் போனிலேயே பாடங்களை படிக்கலாம் என்று வழிகாட்டுகிறார் ஆசிரியர் இளமாறன்.

இந்த சீர்த்திருத்தங்களுக்கு எதிராக சில  பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாற்று எண்ணம் கொண்ட  சில பள்ளிகள் அழுத்தம்தரலாம். அரசு தரப்பில் முடிவு எடுக்கக் கூடியவர்கள், அவ்வாறு  எழும் எதிர்ப்புகளை சமாளித்து இந்த முறை தொடர உதவவேண்டும் என்கிறார் சம்பத்.

Share the Article

Read in : English

Exit mobile version