Site icon இன்மதி

எம்.எல்.ஏக்கள் வழக்கு, மூன்றாம் நீதிபதி நியமனம்

Justice Vimala

Read in : English

சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்தபடியாக, மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான டாக்டர் எஸ். விமலாவை, மூன்றாவது நீதிபதியாக பரிந்துரைத்திருக்கிறார்.

 ஜூன் 14ம் தேதி, தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட இருவேறு மாறுபட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். வழக்கை அவர் விசாரித்து விட்டதால், மூன்றாம் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்து, அந்த மூத்த நீதிபதியின் பொறுப்பில் இதை விட்டுவிட போவதாக அவர் தெரிவித்தார்.

இந்த முடிவையடுத்து ஹுலுவாடி ஜீ.ரமேஷ் இறுதி தீர்ப்பை வழங்க மூன்றாம் நீதிபதியை நியமித்தார். அதே நேரத்தில், மூன்றாம் நீதிபதியின் தீர்ப்புக்கு பின்னர் இருதரப்பிலும் உச்சநீதிமன்றத்தை நாடும் வாய்ப்பிருக்கிறது.

 11.01.1957ல் பிறந்தவரான நீதிபதி எஸ்.விமலா B.Sc. (வேதியியல்), B.L. (மெட்ராஸ் சட்ட கல்லூரி), M.L., Crime & Torts, (பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்) மற்றும்  Ph.D., (சட்டம்) (தமிழ்நாடு டாக்டர்.அம்பேட்கர் சட்டப் பல்கலைக்கழகம்). 16.03.1983ல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டவர், சிதம்பரம் மற்றும் கடலூரில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2002-ம் ஆண்டு மகளிர் நீதிமன்றத்தின் முதல் நீதிபதியானார். 20.12.2011-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், 21.02.2013-ல் நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார்.

Share the Article

Read in : English

Exit mobile version