Site icon இன்மதி

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

Read in : English

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசுவாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.  இருப்பினும்,  இந்த  ஆலையானது ஏற்படுத்திய மாசினை சரி செய்யக் கேட்டு தினமும் ஒரு மணி நேரம் தாங்கள் போராடப் போவதாக குமாரெட்டியாபுரம் மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் 100 நாள் போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 23, 2013 அன்று ஏற்பட்ட வாயுக் கசிவால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இந்த ஆலைக்கான மின்சாரத்தை துண்டித்ததுடன், ஆலையையும் மூடி உத்தரவிட்டார். ஆனால், ஆகஸ்ட் 2013 இல் ஆலையை திரும்பவும் திறந்து செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனிடையே, தொடர்ந்து செயல்படுவதற்கான அனுமதி காலவதி ஆனதை தொடர்ந்து அதனை புதுப்பிக்க தமிழ் நாடு  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஸ்டெர்லைட் விண்ணப்பித்தது. ஆனால், வாரியம் அந்த விண்ணப்பத்தை சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என காரணம் கூறி நிராகரித்தது. இதனையடுத்து, மேய் 24 இல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தண்ணீர் வினியோகமும் நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி வந்தனர். இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், ” மேய் 28 அன்று போராட்டக் குழுவினர் என்னை சந்தித்து நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இதனை தொடர்ந்து நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது “. என்றார்.

Share the Article

Read in : English

Exit mobile version