Site icon இன்மதி

காவல்துறைக்கு கேள்வி: உங்கள் கையேட்டை நீங்கள் பின்பற்றினீர்களா?

Read in : English

போராடுவதற்கான உரிமை என்பது, இந்தியக் குடிமக்களின் அடிப்படையான உரிமைகளில் ஒன்று. சமீப காலமாக, நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டாங்களும் வன்முறையாகவும் மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மூடக்கோரி நடந்த போராட்டம், வன்முறையாகவும் மாறியது.

போராட்டத்தை கையாளத் தெரியாததன் விளைவாக, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். சமூகத்தின் மன சாட்சியை, இந்த சம்பவம் உலுக்கியிருக்கிறது. போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதற்கான காரணங்களை ஆய்வு செய்வது அவ்வளவு சுலபமல்ல. காவல்துறையினர் ஏன் துப்பாக்கிச்சூட்டைத் தேர்வு செய்தார்கள் என்று ஆய்வு செய்து புரிந்துகொள்வதும் அவ்வளவு சுலபமல்ல. ஆனால், போராட்டக்காரர்களை கலைப்பதற்கு, மரணம் விளைவிக்கும் இத்தகைய வழியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைப் (எளிதானதாக இல்லை என்றாலும் கூட) புரிந்துகொள்வது முக்கியமானது. போலீசார் சொல்வதைப்போல, துப்பாக்கியைத் தூக்க வேண்டிய நிலை வந்திருந்தாலும் கூட, அவர்களிடம் கேட்பதற்கான எளிய கேள்வி ஒன்று இருக்கிறது. தற்காப்புக்காகவும், பிறரது உயிரைக் கருத்தில் கொண்டும், துப்பாக்கியைத் தூக்குவதற்கு முன்பாக ஏதேனும் வழிகளைப் பின்பற்றினார்களா?

செயற்பாட்டு முறைகள்
2011ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இந்திய அரசின், உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறை, நிலையான செயற்பாட்டு முறைகளின் மீது வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. மாநிலக் காவல்துறை பணியாளர்கள் எல்லோரையும் சென்றடையும்படி, ஆபத்தை விளைவிக்காமல் பொதுமக்களின் போராட்டங்களைக் கையாள்வது எப்படி என்பதைக் குறித்த சிறு கையேடுதான் அது. ஒன்றிணைந்த உள்துறை செயலகத்தின் தலைமையின் கீழ், காவல்துறையினர் நிறைந்த உள்துறை அமைச்சகத்தால் தயார் செய்யப்பட்ட வழிகாட்டிக் கையேடுதான் அது. வன்முறைப் போராட்டங்கள் உட்பட பொதுமக்கள் போராட்டங்கள் எவற்றையும் கையாள்வதற்கான அந்த முறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். பின்வருவனவற்றில் இருப்பது, அந்த வழிகாட்டிக் கையேட்டில் உள்ள சில வழிமுறைகள்:

1. அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதானப் பேச்சுவார்த்தை போன்ற முறைகளால், சட்டவிரோதமாக கூடிய குழுவினரை கலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
2. போராட்டம் செய்வதற்கு குவிந்த மக்கள், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால், அந்த திரள் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படவேண்டும்.
3. வெளிப்படையான வன்முறைச் செயல்களில் போராட்டக் குழுவினர் ஈடுபடாவிட்டாலும், வன்முறையை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களாக இருந்தால், அது போலீசாரால் தடுக்கப்படவேண்டும்.
4. வன்முறையைத் தடுப்பதற்கான முயற்சிகள் பலனளிக்காவிட்டால், போராட்டக்காரர்களுக்கு கலைந்து செல்லுமாறு உத்தரவு அளிக்கப்படவேண்டும்.
5. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தால், தேவையான காவல்துறை பணியாளர்களின் துணையுடன் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
6. அந்த முயற்சியும் பலனளிக்காமல் போனால், போராட்டக்காரர்களை எச்சரித்து, அதன் பிறகு காவல்துறை நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
7. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, முதலில் ஆபத்து விளைவிக்காத முறையிலும், பின்பு கடினமான வழியிலும் செயல்படலாம். இத்தகைய எல்லா முறைகளும் பயன்படுத்தப்பட்டு, பலனளிக்காமல் போகும் நிலையில் மட்டுமே, துப்பாக்கிச் சூடு போன்ற நடிவடிக்கையை கடைசி தேர்வாக எடுக்கலாம்.
8.நடைமுறை நடவடிக்கைகளின்படி, ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, சட்டவிரோதமாக கூடிய போராட்டக்காரர்கள் பலமுறை எச்சரிக்கப்பட வேண்டும்.
9.சட்டவிரோதமான போராட்டக் குழுவினரைக் கலைக்கும் பொருட்டு, இடுப்புக்குக் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சிக்கவேண்டும்.

சட்டவிரோதமான போராட்டக் குழுவினரைக் கலைக்கும் பொருட்டு, இடுப்புக்குக் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சிக்கவேண்டும்.

சட்டவிரோதமாக கூடிய மக்கள் திரளைக் கலைப்பதற்கு, ஆபத்தான எந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாக, மேற்கூறிய இந்த எல்லாவிதமான நடைமுறைகளையும் போலீசார் பின்பற்றுவது கட்டாயமானது. அத்தகைய கடின நடவடிக்கைகளுக்கான ஆற்றலை கிரிமினல் நடைமுறை குறியீட்டில் (பிரிவு 129) செயலில் இருக்கும் நீதிபதி அல்லது காவல்துறையில் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஆகியவர்களுக்கு அளிக்கப்படுவதற்கு விதிகள் இருக்கிறது. இருந்தாலும், போலீஸ் அதிகாரியோ, சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறையாத எந்த போலீஸ் அதிகாரியோ இல்லாத பட்சத்தில், அத்தகைய நடவடிக்கையை (பிரிவு 129(1)) எடுப்பதற்காக ஆணையிட முடியும். அப்படிப்பட்ட ஆணை அளிக்கப்பட்டதன் பிறகும் கூட, போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாத பட்சத்தில், நீதிபதியின் அல்லது துணைப்பிரிவு (1)-இல் குறிப்பிடப்படும் போலீஸ் அதிகாரியின் ஆணைக்குப் பிறகு, காவல்துறையின் பலம் பிரயோகிக்கப்படலாம்.

ப்ளாஸ்டிக் குண்டுகளின் பயன்பாடு
மேற்கூறிய இத்தகைய விதிகள், காவல்துறையின் ஆற்றல் எந்த எல்லை வரை, எந்த விதத்தில் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த விதமான தகவல்களையும் கொண்டிருக்கவில்லை. மேலும், எந்த விதமான ஆயுதங்கள் அல்லது உபகரணங்கள் பயன்படுத்தப்படவேண்டும், போராட்டத்தைக் கலைப்பதற்காக பயன்படுத்தப்படவேண்டும் என்பதற்கான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும், காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை, கூட்டத்தைக் கலைப்பதற்கான சில ஆயுதங்களின், உபகரணங்களின் பட்டியலை பரிந்துரைக்கிறது.

நீர் பீய்ச்சுதல், கண்ணீர் புகை குண்டுகள், ஸ்ட்ரிங்கர்கள், டை-மார்க்கர் க்ரேனேடுகள், ப்ளாஸ்டிக் குண்டுகள் கூட்டத்தைக் கலைப்பதற்கும், பல வகையான டேசர்கள், பெப்பர் பந்து லாஞ்சர்கள், லேசர் டாஸ்லர்கள், வலைத் துப்பாக்கிகள், புகைக் குண்டுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ”ஆபத்து-விளைவிக்காத” இந்த எல்லா வகை உபகரணங்கள்-ஆயுதங்கள் ஆகியவை கூட்டத்தைக் கலைப்பதற்கான வழிகளாக ஏற்கெனவே கண்டறியப்பட்டது. மேற்கூறிய பட்டியலில், கூட்டத்தைக் கலைப்பதற்கான உபகரணங்களாக ப்ளாஸ்டிக் குண்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ப்ளாஸ்டிக் குண்டுகள் இதுவரை களத்தில் பரிசோதிக்கப்பட்டதில்லை. ”

ஏ.கே மற்றும் இன்சாஸ் போன்ற வழக்கமான ரைஃபில்களிலிருந்து, செமி தானியங்கு பயன்முறையில் ப்ளாஸ்டிக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு, தேவையான வரம்பு 50 யார்டுகளாக இருக்க வேண்டும் (ஏறத்தாழ 45 மீட்டர்கள்)” என BPR&D குறிப்பிட்டிருக்கிறது. 303 வகை, கேரளாவில் சோதிக்கப்பட்டு, சட்டவிரோதக் கூட்டத்தைக் கலைக்கமுடியாமல் போனதாகவும் குறிப்பிடுகிறது காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை குறிப்பிட்டிருக்கிறது. நடைமுறை சூழ்நிலைகளில், பதற்றம் நிறைந்த வேளைகளில், போலீசார் வரம்பை தீர்மானிப்பது நடக்கவியலாத காரணம் என்பதும், ப்ளாஸ்டிக் குண்டுகளை சிறிய தூரத்திற்குள் பயன்படுத்தக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் போன்ற நாடுகளில், ப்ளாஸ்டிக் குண்டுகளைப் பயன்படுத்துவது கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்தியாவில், களத்தில் இது முழுமையாக சோதிக்கப்படவில்லை. எனினும், ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையமும் கூட, பெல்லட் துப்பாக்கி பயன்பாடு மோசமான காயங்களை உண்டாக்குகிறது எனவும், பயன்பாட்டிற்கான காரணத்தை முழுமைப்படுத்தாமல், உயிருக்கே ஆபத்து விளைவிப்பதாய் மாறுகிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறது.

சர்வதேச தரநிலைகள்
செப்டம்பர் மாதம், 1990ம் ஆண்டு, ஆகஸ்ட் 27ம் தேதி, கியூபாவின் ஹவானாவில் நிகழ்ந்த, குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகளின் மீதான அணுகுமுறையின் மீது நடந்த எட்டாவது ஐக்கிய நாடுகள் காங்கிரஸில், ”சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் படைபலப் பயன்பாடு மற்றும் ஆயுதப் பயன்பாடுகளில் அடிப்படை கொள்கைகளை” ஏற்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

கொள்கை 4-இன் படி, கடமைச் செய்யும்போது, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், படைபலத்தையும், ஆயுத பலத்தையும் பயன்படுத்துவதற்கு முன்னதாக, வன்முறையற்ற அஹிம்சை வழிகளைப் பின்பற்ற கூடுமான வரையில் முயற்சிக்க வேண்டும். கொள்கை 9-இன் படி, தற்காப்புக்கு அல்லது பிறரது பாதுகாப்புக்காக அல்லாமல், மரணத்தை அல்லது மோசமான காயத்தை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது. 2017-ம் ஆண்டு ஏப்ரலில், அப்சர்வர் ஆய்வு நிறுவனம், “இந்தியாவின் வன்முறையான மக்கள் போராட்டங்களைக் கையாளுதல்” என்பதன் மீதான சிறப்பு அறிக்கையைச் சமர்ப்பித்தது. ’வன்முறைப் போராட்டங்களைக் கையாள்வதில், சர்வதேச தரநிலைகளை பின்பற்றுவதில் இந்தியா தோற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்வீசித் தாக்கும் மக்களிடையேயும் கூட, சமநிலையற்ற விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது’ என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டுரையாளர் : குற்றவியல் துறை தலைவர், சென்னை பல்கலைகழகம்

Share the Article

Read in : English

Exit mobile version